உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/10 பக். 3
  • தள்ளிப் போடுகிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தள்ளிப் போடுகிறீர்களா?
  • நம் ராஜ்ய ஊழியம்—2010
  • இதே தகவல்
  • தள்ளிப் போடுகிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • எப்படிப்பட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்வதென தீர்மானித்துவிட்டீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2012
  • எந்தெந்த சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதெனத் தீர்மானித்துவிட்டீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • எந்தெந்த சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதெனத் தீர்மானித்துவிட்டீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2011
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2010
km 1/10 பக். 3

தள்ளிப் போடுகிறீர்களா?

எதை? ஞானஸ்நானம் பெற்ற சாட்சிகளுக்குக் கொடுக்கப்படுகிற உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடுகிறீர்களா? ‘நாளை உங்களுக்கு என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால்’ மருத்துவ அவசர நிலை வரும்போது எப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அவற்றை எழுதி வைப்பது முக்கியம். (யாக். 4:14; அப். 15:28, 29) ஆகவே, இந்த அட்டையை ஒவ்வொரு வருடமும் புதுப்பிப்பது அவசியம். சாட்சிகளாயிருக்கிற பெற்றோரின் ஞானஸ்நானம் பெறாத பிள்ளைகள் சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எந்தச் சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, அவற்றை உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையில் எழுதிவிட்டீர்களா? இந்த விஷயங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு காவற்கோபுரம், ஜூன் 15, 2004-லுள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியையும், நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தில் “இரத்தத்தின் சிறு கூறுகளையும் என்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ முறைகளையும் பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?” என்ற உட்சேர்க்கையையும் கவனமாகப் படித்துப் பாருங்கள். முடிவாக, உங்களுடைய தீர்மானங்களை உடல்நல பாராமரிப்பு முன்கோரிக்கை அட்டையில் சரியாக எழுதிவிட்டீர்களா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தார் சாட்சிகளாக இல்லாவிட்டால் அவர்களிடம் உங்கள் தீர்மானங்களைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துவிட்டீர்களா எனவும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த அட்டையை வீட்டிலேயே பூர்த்தி செய்யலாம் என்றாலும், இரண்டு சாட்சிகளுக்கு முன்தான் அதில் தேதியிடவும் கையெழுத்திடவும் வேண்டும். இதை இப்போது ராஜ்ய மன்றத்தில், தொகுதி ஊழியரின் அல்லது மற்றொரு மூப்பரின் உதவியோடு செய்யலாம். இந்த அட்டையில் “சாட்சிக் கையெழுத்திடுவோரின் அறிக்கை” என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு இசைவாக கையெழுத்திடுவது முக்கியம். புதிய அட்டைகளைப் பூர்த்தி செய்யாத பிரஸ்தாபிகள் யாரெனப் பார்த்து அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா எனத் தொகுதிக் கண்காணிகள் அவ்வப்போது கவனிக்கலாம்.

ஆங்கிலத்தை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்த அனைவரும் உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையை (dpa-E In 11/04) பயன்படுத்த வேண்டும். ஆங்கிலத்தை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியாதவர்களுக்காக மற்றொரு அட்டை (dpa-1-E In 11/04) தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எண் 8-ல் ஒரு கூடுதல் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது; இந்த அட்டையில் கையெழுத்திடுவோருக்கு இதிலுள்ள விவரங்களை வாசித்து விளக்கிச் சொல்பவரின் பெயரை அந்தக் குறிப்பில் எழுத வேண்டும். பிரஸ்தாபிகள் இந்த அட்டையின் நகலை அல்ல, அதன் அசல் பிரதியைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

[பக்கம் 3-ன் பெட்டி]

• உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எந்தச் சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானித்துவிட்டீர்களா?

• அவசரக் கட்டத்தில் உங்களுக்கு உதவ, முழுமையாகப் பூர்த்திசெய்யப்பட்ட உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்கிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்