ஜனவரி 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 25-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 2 பாரா. 12-21, பக். 27-லுள்ள பெட்டி
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 5-7
எண் 1: நியாயாதிபதிகள் 7:1-11
எண் 2: வெளிப்படுத்துதல் 17:1-ல் குறிப்பிடப்படுகிற ‘பேர்போன விலைமகளை’ நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்?
எண் 3: பைபிள் நரகத்திலிருந்து எவராவது எப்போதாவது வெளியேறுகிறார்களா? (rs பக். 170 பாரா. 3–5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பிப்ரவரி மாதத்திற்கான அளிப்பு. இந்த மாதத்தில் அளிக்கவிருக்கும் பிரசுரங்களில் காணப்படும் பயனுள்ள குறிப்புகளைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். ஒரு பிரஸ்தாபி சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில், சாதுரியமாக இந்த மாத அளிப்பைப் பயன்படுத்தி பைபிள் படிப்புக்கு அடித்தளம் போடுவதைப் போன்ற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “தள்ளிப் போடுகிறீர்களா?” மூப்பர் நடத்தும் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில், உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையின் நோக்கத்தை ஒரு பிரஸ்தாபி தன்னுடைய டாக்டரிடம் விளக்கி, அதை அவருடைய கோப்பில் வைக்கும்படி கேட்கிறார்; டாக்டர் அதற்கு ஒத்துக்கொள்கிறார். முடிவில், கடைசி பாராவை வாசியுங்கள்.