மே மாதத்தில் நீங்கள் துணைப்பயனியர் செய்யக்கூடுமா?
1 இப்படிப்பட்ட முக்கியத்துவம்வாய்ந்த ஒரு வேலையை இயேசு துவங்கி வைத்தார். அதாவது அதனுடைய இறுதியான பலனின் பேரிலேயே எல்லா மனிதவர்க்கத்தின் எதிர்காலமும் சார்ந்திருக்கிறது. (மத். 4:17) அது நற்செய்தியை பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமான வேலையாகும். “முடிவுக்கு” சற்று முன்னால் அந்த வேலை அதன் உச்சக்கட்டத்தை எட்டும். அந்த ராஜ்ய செய்தி “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்பட்டிருக்கும்.”—மத்தேயு 24:14.
2 நாம் இந்த ஒழுங்குமுறையின் முடிவை நெருங்கிவிட்டபடியால் இந்த வேலை இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக அவசரமானது. உயிர்கள் ஆபத்திலிருப்பதால் அநாவசியமான தாமதம் பரந்த செயல் விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். துணைப்பயனியர் ஏற்பாடானது இந்த அவசரமான வேலை செய்து முடிக்கப்படுவதில் அதிக சுறுசுறுப்பாயிருக்கும்படி அநேகரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. மே மாதத்தில் நீங்கள் துணைப்பயனியர் செய்யக்கூடுமா?
மே மாதம் சிறந்த சந்தர்ப்பத்தை அளிக்கிறது
3 துணைப்பயனியர்களாக அநேகர் பங்குகொள்வதற்கு மே மாதம் ஒரு சிறந்த மாதமாக இருக்கும். முழு நேரம் உலகப் பிரகாரமான தொழிலில் ஈடுபட்டவர்களும்கூட அவ்வாறு செய்யக்கூடிய நிலையிலிருப்பார்கள். கடந்த ஆண்டு பயனியர் செய்த ஒருசிலர் மிகுதியாக ஆசீர்வதிக்கப்பட்டனர். மேலும் இந்த ஆண்டும் அவ்வாறு செய்வதற்கு தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இப்பொழுதே திட்டமிடுவதன் மூலம், நீங்கள் மே மாதத்தில் துணைப் பயனியர் செய்யக்கூடுமா? ஏற்கெனவே துணைப்பயனியர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் இந்த சாத்தியத்தைப் பற்றி நீங்கள் கலந்துபேசி அவர்களிடமிருந்து நடைமுறயான ஆலோசனைகளை பெறலாமே.
4 நம்முடைய சேவையை விஸ்தரிப்பதானது நமக்கு அதிகரிக்கப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டுவரும். இது மற்ற தனிப்பட்ட அக்கறைகளை தியாகம் செய்வதை உட்படுத்தியபோதிலும் பெருக விதைப்பதன் மூலம் நாம் மிகுதியான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிப்போம். (2 கொரி. 9:6b) யெகோவாவுக்காக முழு-ஆத்துமாவோடு உழைக்கக்கூடிய ஆட்கள் புதிய சீஷர்களை அதிகமாய் அறுவடை செய்யும் “மகிழ்ச்சி நிரம்பியவர்களாய்” இருக்கிறார்கள்.—அப். 13:48, 52.
தேவராஜ்ய முன்னேற்றத்திற்கு ஒரு படிக்கல்
துணைப்பயனியர் சேவையின் மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்த்தப் பின்பு அநேகர் ஒழுங்கான பயனியர்களாக ஆகியிருக்கின்றனர். இந்த முறையில் துணைப்பயனியர் சேவையானது மிகுதியான மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் ஒரு படிக்கல்லாக சேவிக்கக்கூடும். நீங்கள் மே மாதத்தில் அதைத் தொடர்ந்துவரும் மாதங்களிலும் துணைப்பயனியர் சேவை செய்யக்கூடுமானால் நீங்கள் மறுசந்திப்புகளையும் பைபிள் படிப்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடும். இது புதிய ஊழிய ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கும்போது நீங்கள் எளிதாக ஒழுங்கான பயனியராக மாறுவதற்கு உதவி செய்யும்.
6 யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் இக்காலத்தில் இந்த ஒழுங்குமுறயின் பொருளாதார மிகுதியான அனுகூலங்களை நாடுவதற்கு மாறாக, ஏன் தங்களுடைய ஊழியத்தை விஸ்தரிக்கின்றனர்? ஏனெனில், யெகோவாவை துதிக்கவும் அவருடைய நோக்கங்களைக் குறித்து மற்றவர்களிடம் சொல்லவும் அவர்கள் விரும்புகின்றனர். “உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். (1 யோவான் 2:17) அறுப்பின் எஜமான் “தம்முடைய அறுப்புக்கு வேலையாட்களை அனுப்புவார்” என்ற தங்களுடைய ஜெபத்திற்கு இசைய அவர்கள் உண்மை மனதுடன் செயல்படுகின்றனர்.—மத். 9:37, 38.
7 கடவுள் பேரிலும் மற்றும் அயலார் பேரிலுமுள்ள உண்மையான அன்பு நம்முடைய சக்திக்கு இயன்ற அளவுக்கு சீஷராக்கும் வேலையில் பங்குகொள்ள நம்மை உந்துவிக்கிறது. (மத். 22:37-39; 28:19) தனிப்பட்ட சில சூழ்நிலைமைகள் அநேகரை பயனியர் பிரஸ்தாபியாக இருப்பதிலிருந்து தடை செய்தபோதிலும், நம்முடைய சூழ்நிலைமைக்கேற்ப யெகோவாவின் சேவையில் நம்மால் இயன்றவற்றை செய்வதானது ‘எல்லா வகையான மனிதரும் இரட்சிக்கப்படுவதற்கு’ உதவி செய்வதில் கடினமாக உழைத்து பிரயாசப்படக்கூடிய ஆட்கள்’ என்று நம்மை பாராட்டுகிறது.—1 தீமோ. 4:10.