வட்டார கண்காணியின் சந்திப்புக்கு ஆதரவு கொடுங்கள்
1 அக்டோபர் 15, 1946 முதற்கொண்டு சபைகள் வட்டாரங்களாக ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்டு முழுநேர பயணக்கண்காணிகளின் சேவையை அனுபவித்து வருகின்றன. இப்பொழுது ஏறத்தாழ 43 ஆண்டுகளாக, தனி நபர்களும் சபைகளும் இந்த ராஜ்ய ஏற்பாட்டினால் பயணடைந்திருக்கின்றனர். (ஏசா. 1:26) இந்த ஏற்பாட்டிற்கு நாம் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவு இன்னுமதிகமாக ஆசீர்வாதங்களை நமக்குக் கொண்டுவரும்.—எபே. 4:7, 8, 11.
சந்திப்பிற்காக ஆயத்தம் செய்தல்
2 வட்டார கண்காணியின் சந்திப்பு அறிவிப்பு செய்யப்பட்ட உடனே நாம் அதற்காக ஆயத்தம்செய்ய ஆரம்பிக்கலாம். விசேஷ நடவடிக்கைகளுக்கான அந்த வாரத்தை ஆதரிப்பதற்காக நம்முடைய வழக்கமான அட்டவணைகளை மாற்றியமைத்துக்கொள்ளுவதற்கு திட்டமிடலாம். சில பிரஸ்தாபிகள் துணைப்பயனியர் செய்வதன் மூலம் வெளி ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிட திட்டமிடுகின்றனர். ஊழியத்தில் கலந்துகொள்ளுவதற்காக ஒருசிலர் ஓரிரண்டு நாட்களுக்கு உலகப்பிரகாரமான தொழிலிருந்து விடுப்பு எடுக்கின்றனர். ஊழியத்தின் ஏதாவது ஓர் அம்சத்தில் வட்டார கண்காணியோடு வேலை செய்வதற்காக பிரஸ்தாபிகள் விசேஷ ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஊழியத்திற்காக கொடுக்கப்படும் முழு இருதய ஆதரவு அநேக பலன்களைக் கொண்டுவருகிறது.
3 வட்டார ஊழியர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் காட்டுவதென்னவெனில், பிற்பகல் மறுசந்திப்பு, பைபிள் படிப்பு நடவடிக்கைகளுக்கு மேம்பட்ட ஆதரவு கொடுக்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த வாரத்தின்போது பிற்பகல் மறுசந்திப்பு, பைபிள் படிப்பு ஆகியவற்றிற்காக நீங்கள் திட்டமிடக்கூடுமா? வட்டார ஊழியர் மகிழ்ச்சியோடு உங்களுடன் வருவார். நீங்கள் விரும்பினால் உங்கள் வேதப்படிப்பை நடத்தவும் அவர் விரும்புவார்.
தனிப்பட்ட உதவி
4 வட்டார ஊழியர் செய்யவேண்டிய காரியங்களின் பட்டியலில் முதலிடம் பெறவேண்டியவற்றில் முதன்மையாக இருப்பது, மேலான ஊழிய சிலாக்கியங்களை அடைய முயன்றுகொண்டிருக்கும் எவருக்கும் தேவைப்படும் கூடுதலான பயிற்சி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாகும். (1 தீமோ. 3:1) உங்களுடைய குறிப்பிட்ட சில உத்தரவாதங்களைப் பற்றியோ அல்லது நியமிப்புகளைப் பற்றியோ உங்களுக்குக் கேள்விகள் ஏதாகிலும் இருக்கிறதா? உங்களுடைய திறமையை அல்லது தனிப்பட்ட ஒழுங்கமைப்புக்குரிய காரியங்களை அபிவிருத்தி செய்வதற்கு விரும்புகிறீர்களா? பெத்தேல் சேவையில் அல்லது கிலியட் பள்ளியில் உங்களுக்கு ஆர்வம் உண்டா? தேவை எங்கு அதிகமாக உண்டோ அங்கே பணியாற்ற அதாவது உங்கள் வட்டாரத்திலோ அல்லது இந்தியாவின் வேறு இடங்களிலோ சேவை செய்ய விரும்புகிறீர்களா? உங்களுடைய ஆவிக்குரிய இலக்குகள் எதுவானாலும் வட்டார ஊழியர் அதைப் பற்றி உங்களுடன் கலந்துபேச மகிழ்ச்சியடைவார்.
5 உங்களுடைய வட்டார ஊழியர் மணமானவராக இருந்தால், அவருடைய மனைவியும் அவ்வாறே யெகோவாவினிடமாக முழு பக்தியுள்ள ஓர் ஊழியக்காரியாக இருக்கிறாள். பெரும்பாலும் அவள் ஒரு பயனியராக இருக்கக்கூடும். வெளி ஊழிய ஏற்பாட்டிற்கு முழு ஆதரவை கொடுக்கும் நிலையிலிருக்கக்கூடும். அவளுடைய அனுபவத்தின் காரணமாகவும் பல்வேறு விதமான பிராந்தியங்களில் ஒழுங்காக ஊழியத்தில் ஈடுபடுவதன் காரணமாகவும் அவள் பிரசங்க வேலையில் திறம்பட்டவளாக ஆகிவிடுகிறாள். அவள் முக்கியமாக மற்ற சகோதரிகளுடன் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலும் கலந்துகொள்வதற்கு முன்வருகிறாள். பெபேயாளைக் குறித்து பவுல் கொடுத்த அதே அனலான பாராட்டுதலை இவளும் பெறுவதற்கு தகுதியுள்ளவளாக இருக்கிறாள்.—ரோ. 16:1, 2.
6 கவனியாமல் விடப்படக்கூடாத மற்றொரு காரியம் வட்டார ஊழியருக்கும் அவர் மணமானவராக இருந்தால் அவருடைய மனைவிக்கும் உபசரிப்பை காண்பிக்கும் சிலாக்கியமாகும். அவர்களை தங்களுடைய வீடுகளில் தங்கவைத்தது அல்லது இந்தப் பயணக்கண்காணிகளுக்கு உணவு வழங்கியது மற்றும் அவர்களுடன் இனிய ஆவிக்குரிய கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்தது ஆகியவற்றின் காரணமாக தாங்கள் அடைந்த உற்சாகத்தையும் அருமையான நினைவுகளையும் கொண்ட அநேக சகோதரர்கள் இருக்கிறார்கள்.—3 யோ. 5-8.
7 ஆவிக்குரிய விதத்தில் முதிர்ந்த பயணக்கண்காணிகளின் தொடர்ச்சியான சந்திப்புகள் யெகோவாவின் ஜனங்களுக்குத் தொடர்ந்து உதவியை அளித்துவருகிறது. நாம் எந்தளவுக்கு இதிலிருந்து தனிப்பட்ட விதமாய் நன்மையடைவோம் என்பது வட்டார ஊழியரின் சந்திப்புக்காக எந்தளவு தயாரிக்கிறோம் அல்லது ஆதரவு கொடுக்கிறோம் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது. நமது வட்டார ஊழியரின் அடுத்த சந்திப்புக்கு முழு ஆதரவைக் கொடுக்க நாம் எல்லாரும் தீர்மானமாயிருப்போமாக.