பத்திரிகை விநியோகிப்பை அதிகரிப்பதன் மூலம் மகிழ்ச்சியை அடைதல்
யெகோவாவின் மிகப்பெரிய சர்வலோக அமைப்பு அதன் உற்பத்தித் திறனுக்குப் பெயர்பெற்ற ஒன்றாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா தேவன் ஒரு பூமிக்குரிய அமைப்பை உண்டுபண்ணியிருக்கிறார். அதுவும்கூட உற்பத்தித் திறனுள்ள மனமுவந்த வேலையாட்களால் தனிச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. (சங். 110:3; மத். 9:37, 38) நம்முடைய ஊழியத்தின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அளவிற்கு நாம் கவனம் செலுத்துகையில் நிச்சயமாகவே மகிழ்ச்சி அதிகரிக்கும். (லூக். 10:17) இது முக்கியமாய் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் நமது தனிப்பட்ட விநியோகிப்பை அதிகரிப்பதற்காக மனதை ஆயத்தப்படுத்திக்கொள்கையில் ஏற்படும்.
2. ராஜ்ய செய்தி எல்லா இடங்களிலும் பரப்புவதற்கு முக்கிய வழிகளில் ஒன்று பத்திரிகை விநியோகிப்பாகும். பிரசங்கவேலை விஸ்தரிக்கையில் இது அவ்வாறே தொடருகிறது என்றாலும் சில பிராந்தியங்களில் பத்திரிகை விநியோகமானது குறைந்திருப்பது காணப்பட்டிருக்கிறது. இந்த மனப்போக்கிற்குப் பரிகாரம் காண்பது எப்படி? நாம் தனிப்பட்ட விதமாய் அதிகப்படியான பத்திரிகைகளை விநியோகிப்பதற்கு உதவக்கூடிய என்ன அடிப்படை காரியங்களை நாம் நினைவில் வைக்கலாம்?
நம்பிக்கையான அணுகுமுறை
3. பத்திரிகை விநியோகிப்பை அதிகரிப்பதற்கு முதற்படியானது: பத்திரிகை உணர்வுள்ளவர்களாயிருங்கள். முதலில் நாம்தானே காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் ஒழுங்கான வாசகர்களாக இருந்தால் இந்த உலக்கை அதிக சுலபமாக அடையலாம். அவற்றின் பொருளடக்கத்தை நாம் நன்கு அறிந்திருந்தால் பொதுமக்களுக்கு அவற்றை அளிக்க வேண்டிய ஒவ்வொரு பொருத்தமான சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த நாம் விரும்புவோம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பத்திரிகைகளை விநியோகிப்பதில் பங்குகொள்வதற்கு பெரும்பாலான நமக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. சனிக்கிழமையன்று வெளி ஊழியத்தில் பங்குபெற முடியாத பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்வதற்காக அநேக சபைகள் மத்திப வார பத்திரிகை ஊழியத்துக்காக நேரத்தை ஒதுக்கி வைக்கின்றன. மாலை நேர வீட்டுக்கு வீடு ஊழியம் பத்திரிகைகளை விநியோகிப்பதற்கு மிகச் சிறந்த வாய்ப்பை சாட்சி மற்றும் பத்திரிகை மார்க்கம் ஆகிய இவைகள் பத்திரிகை விநியோகிப்பில் நாம் பங்குகொள்வதற்கு சிறந்த வழிகளாகும். வழக்கமான வீட்டுக்கு வீடு வேலையில் இம்மாத பிரசுர அளிப்பை ஆட்கள் ஏற்க மறுக்கும்போது புதிய பத்திரிகைகளை அவர்களுக்கு அளிக்கலாம். அவ்வாறு செய்வதற்கு விழிப்புள்ளவர்களாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியை கொண்டுவரக்கூடும்.
4. பத்திரிகை விநியோகிப்பை அதிகரிப்பதற்கு இரண்டாவது ஆலோசனை: அது சுருக்கமாக இருக்கட்டும். சில பிரஸ்தாபிகள் நீண்ட பிரசங்கத்தைக் கொடுப்பதன் மூலம் விநியோகிக்கப்படும் பத்திரிகையிலிருந்து தாங்களாகவே அதிகத்தைப் பேசியிருக்கின்றனர். மற்ற சில பிரஸ்தாபிகள் பத்திரிகை ஊழியத்தில் ஈடுபடுகையில் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். என்றபோதிலும் இது சிபார்சு செய்யப்படுகிறதில்லை. அதிகப்படியான பத்திரிகை விநியோகிப்பை உற்சாகப்படுத்துகையில், டிசம்பர் 1, 1956 (ஆங்கில) காவற்கோபுரம் குறிப்பிடுவதாவது: “சுருக்கமான திட்டவட்டமான பிரசங்கமே பத்திரிகை அளிப்பதில் சிறந்தது அநேக பிரதிகளை விநியோகிப்பதே அதன் குறிக்கோள். அவைகளே சுயமாக ’பேசட்டும்.’ அரை நிமிடத்திலிருந்து ஒரு நிமிடம் வரை மட்டுமே நீடிக்கும் பிரசங்கத்தை சங்கம் சிபார்சு செய்கிறது. நன்கு அமைக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு அளிக்கப்படும் பத்திரிகையிலிருந்து ஒரே ஒரு குறிப்பு கலந்தாலோசிக்கப்படலாம்.”
5. அடுத்தது: பல்வேறுவிதமான அணுகுமுறைகளைக் கொண்டிருங்கள். ஒன்றுக்கு மேம்பட்ட பிரசுரங்களை தயாரியுங்கள். வித்தியாசப்பட்ட சூழ்நிலைமைகளை நீங்கள் எதிர்ப்படுகையில் நீங்கள் எல்லா வகையான ஜனங்களிடமும் பேசக்கூடிய நிலையிலிருப்பீர்கள். அவர்களுடைய ஆர்வத்துக்கு ஏற்றவாறு உங்கள் பிரசங்கத்தை மாற்றியமைத்துக்கொள்வீர்கள். இந்த முன் தயாரிப்பு அதிகப்படியான பத்திரிகை அளிப்பிற்கும் மிகுதியான மகிழ்ச்சிக்கும் வழிநடத்துகிறது.
6. ஒரு கடைசி ஆலோசனை: ஒரு தனிப்பட்ட இலக்கைக் கொண்டிருங்கள். ஏப்ரல் 1984 நம் ராஜ்ய ஊழியம் சேர்க்கையில் தோன்றிய “ஜீவவழியை சுட்டிக்காட்டும் பத்திரிகைகள்” என்று கட்டுரையை ஒருவேளை நீங்கள் நினைவுகூரக்கூடும். ஒரு மாதத்தில் நீங்கள் ஊழியத்தில் பங்குகொள்ளும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக ஒரு பத்திரிகையை விநியோகிப்பதற்கு பிரயாசப்பட நீங்கள் விரும்பக்கூடும். உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமை மேலும் நீங்கள் வெளி ஊழியத்தில் செலவிட முடிந்த நேரம் ஆகியவற்றை பொருத்து உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமையை மேலும் நீங்கள் வெளி ஊழியத்தில் செலவிட முடிந்த நேரம் ஆகியவற்றை பொருத்து உங்களுடைய தனிப்பட்ட இலக்கு நியாயமான ஒன்றாக இருக்க வேண்டும்.
7. தம்முடைய காணக்கூடிய அமைப்பின் மூலமாக ஊழியத்தில் நம்முடைய பங்கை அதிகரிப்பதற்கு அவசியமானது எதுவோ அதை யெகோவா தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறார். நாம் ஊழியம் செய்வதற்கு வேண்டிய கிளர்ச்சியூட்டும் பத்திரிகைகளை கொண்டிருக்கிறோம். பத்திரிகை விநியோகிப்பதற்காக சபை ஏற்பாடுகளோடு ஒத்துழைப்பதற்கு நம்முடைய சொந்த தனிப்பட்ட முயற்சி இப்பொழுது காட்சிக்குள் நுழைகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கை யெகோவாவை மகிமைப்படுத்துவதன் காரணமாக பத்திரிகைகளோடு ஊழியத்தில் அதிகமாக பங்குகொள்வதனால் வரக்கூடிய உள்ளான மகிழ்ச்சியை நாம் அனுபவிப்போம்.—யோவான் 15:8.