உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/90 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இதே தகவல்
  • உங்கள் கேஸட் டேப்புகளுக்குச் சில துப்புகள்
    விழித்தெழு!—1988
  • ஆடியோ பதிவுகளை நன்றாக பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2015
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • நீங்கள் ஒரு விவாக துணைக்காகத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
    விழித்தெழு!—1987
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 4/90 பக். 3

கேள்விப் பெட்டி

● சங்கத்திடமிருந்து வெளிவராமல் மற்ற மூலங்களிலிருந்து வெளிவரும் பதிவு நாடாக்களை (tape recordings) யெகோவாவின் சாட்சிகள் எப்படிக் கருத வேண்டும்?

காசெட் பதிவு நாடாக்கள் உட்பட, சங்கமானது பல்வேறு முறைகளில் ஏராளமான ஆவிக்குரிய உணவை பகிர்ந்தளிக்கிறது. அவைகளுள் பைபிள் தானே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்றவை சங்கத்தின் பிரசுரங்கள் பேரில் சார்ந்தவை, அதாவது காவற்கோபுரம், விழித்தெழு! என்னுடைய பைபிள் கதை புத்தகம் மற்றும் பெரிய போதகருக்குச் செவி கொடுத்தல், இராஜ்ய இன்னிசைகள் மற்றும் அநேக நாடகங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகிலும், இதே இயல்புள்ளதுபோல் தோன்றக்கூடிய பதிவு நாடாக்களைக் குறித்ததில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அந்தளவுக்கு ஒருவரையொருவர் நம்பும் சகோதரத்துவத்திற்குள் இருப்பதனால், சில சமயங்களில் ஒரு சிலர் இது எந்த மூலத்திலிருந்து வருகிறது என்பதைக் கேட்டறியாமலே மற்றவர்களிடமிருந்து வரும் பதிவு நாடா பிரதிகளை ஏற்றுக் கொள்ளக்கூடும்.

சில சமயங்களில் சுற்றியனுப்பப்படும் இந்தப் பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் யூகங்களின் எல்லைக்கோட்டிற்கருகில் செல்லக்கூடிய அல்லது மனவெழுச்சியைத் தூண்டக்கூடிய தகவல்களைப் பயன்படுத்துவதாக இருக்கக்கூடும். இப்படியிருக்க, 2 தீமோத்தேயு 3:14-ல் காணப்படும் பவுலின் அறிவுரையை பின்பற்றுவது ஞானமானதாக இருக்குமல்லவா? அங்கே பவுல் எதார்த்தங்களைப் பற்றி பேசிய பின்பு நாம் யாரிடத்தில் கற்கிறோமோ அவர்களை அறிந்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினான். ஆகவே, பரிசுத்த வேதாகமங்களில் “எழுதப்பட்டிருப்பவற்றிற்கு” மற்றும் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழிக்காரரால்” அளிக்கப்படும் ஆவிக்குரிய உணவுக்கு மிஞ்சி செல்லும் எந்த ஒரு காரியத்துக்கும் செவி கொடாதபடிக்கு நாம் நிச்சயமாயிருக்க வேண்டும்.—1 கொரி. 4:6; மத். 24:45-47.

சில இடங்களில், பிள்ளைகளுக்கு பைபிளை கற்றுத்தரும் பதிவு நாடாக்கள் விளம்பரம் செய்யப்பட்டு, விற்கப்படுகின்றன. இந்தப் பதிவு நாடாக்கள் சகோதரர்களுடைய கருத்துரைகளின் பேரில் தோன்றியதாக இருக்கின்றன, மற்றும் சில சபைகளுக்குள் அவை சுற்றியனுப்பப்படுகின்றன. நோக்கம் ஒருவேளை நல்லதாக தோன்றியப் போதிலும் இது தேவராஜ்ய தொடர்புகளை தனிப்பட்டோருடைய அனுகூலங்களுக்காக பயன்படுத்துவதாக இருக்குமல்லவா? (நம் ராஜ்ய சேவை, ஜூலை 1977, பக்கம் 4; ஜனவரி 1980, பக்கம் 4; நம் ராஜ்ய ஊழியம், அக்டோபர் 1987, பக்கம் 3 பார்க்கவும்.) நம்முடைய பிள்ளைகளை பயிற்றுவிப்பதற்கு யெகோவாவின் அமைப்பு அளவுக்கு அதிகமான பைபிள் சார்ந்த போதனைகளைக் கொடுக்கிறது. ஆகையால் இப்படிப்பட்ட பதிவு நாடாக்களை சகோதரர் மத்தியில் சுற்றியனுப்புவதை நாங்கள் ஆமோதிப்பதில்லை.

சில தனிநபர்கள் சபைக் கூட்டங்களின் அல்லது மாநாட்டு நிகழ்ச்சிநிரல்களை தங்களுடைய தனிப்பட்ட உபயோகங்களுக்காக நாடாக்களில் பதிவுச் செய்யக்கூடும். சில நியாயமான காரணங்களை முன்னிட்டு, கூட்டங்களுக்கு வர இயலாத நிலையிலிருக்கும் சபை அங்கத்தினர் இந்தப் பதிவுகளை விரும்பக்கூடும். என்றபோதிலும் இது சகோதரர்கள் மத்தியில் பொதுப்படையாக விநியோகம் செய்யப்படவோ மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்படவோ கூடாது. நமது ஆவிக்குரிய உற்சாகமூட்டுதலுக்காகவும் கட்டியெழுப்புதலுக்காகவும் யெகோவா தமது அமைப்பின் மூலமாக கொடுக்கும் அனைத்தையும் நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்