உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/90 பக். 3
  • ஏற்ற சமயத்தில் சகாயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏற்ற சமயத்தில் சகாயம்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஊழியக் கண்காணியின் சந்திப்புகள்
  • பகுதி 5: ஊழிய கண்காணியின் சந்திப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • நம்முடைய சபை புத்தகப் படிப்புநடத்துபவரோடு ஒத்துழைத்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • சபை புத்தகப் படிப்பு கண்காணிகள் எப்படி தனிப்பட்ட அக்கறை காண்பிக்கிறார்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • வெளி ஊழியத் தொகுதியிலிருந்து எப்படிப் பயனடையலாம்?
    நம் ராஜ்ய ஊழியம்—2012
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 7/90 பக். 3

ஏற்ற சமயத்தில் சகாயம்

1. சபையின் மீதுள்ள தம்முடைய உண்மையான அக்கறையின் காரணமாக இயேசு எப்பொழுதுமே “ஏற்ற சமயத்தில் சகாயம்” செய்வார். (எபி. 4:16) தேவைப்படும் மிகுதியான சகாயம் எபேசியர் 4:8, 11, 12-ல் வாக்களிக்கப்பட்ட “மனிதரில் வரங்கள்” மூலம் கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வரங்களில் ஒன்று ஒவ்வொரு சபையிலுமுள்ள ஊழியக் கண்காணியாகும்.

2. எந்த வழிகளில் ஊழியக் கண்காணி நமக்கு உதவக்கூடும்? பல வழிகளில் உண்டு: (1) பிரசங்கவேலை மற்றும் சீஷராக்கும் வேலையின் முக்கியத்துவத்தைக் குறித்து நம் அனைவரையும் உணர்வுள்ளவர்களாக வைத்துக்கொள்வதற்கு அவர் பிரயாசப்படுகிறார். (2) சபை புத்தகப் படிப்பு தொகுதிகள் மூலமாக வெளி ஊழியத்தில் நல்ல ஒழுங்கமைப்பும் வழிநடத்துதலும் அளிக்கப்படுவதைக் குறித்து அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார். (3) ஊழியர்களாக நமது பலன்தரும் ஆற்றலை முன்னேற்றுவித்துக் கொள்வதற்கு நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் தனிப்பட்ட உதவியை நாம் பெற்றுக் கொள்வதைக் காண அவர் விரும்புகிறார்.

ஊழியக் கண்காணியின் சந்திப்புகள்

3. சபை புத்தகப்படிப்பு ஏற்பாடுகள் மூலம் அளிக்கப்படும் ஒழுங்கான சிறந்த உதவியோடு கூட தனிப்பட்ட முறையில் நாம் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஊழியக் கண்காணி வழக்கமாக புத்தகப்படிப்பு நடத்தும்படி நியமிக்கப்படுகிறார். ஆனால் மாதத்துக்கு ஒரு முறை அவர் தன்னுடைய சொந்த தொகுதியை விட்டுவிட்டு ஒரு வாரத்துக்கு மற்றொரு தொகுதியோடு சேர்ந்து ஊழியம் செய்ய செல்கிறார். அவர் மற்ற இடத்துக்குப்போகும் சமயத்தில் அவருடைய உதவியாளர் அந்தப் புத்தகப்படிப்பைக் கையாளுவார். அவர் புத்தகப்படிப்பு நடத்துநரிடம் தன்னுடைய சந்திப்பைப் பற்றி முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறார். இதனால் அந்தப் புத்தகப்படிப்பு தொகுதி அந்த வாரத்தின் ஊழிய ஏற்பாடுகளினால் முழுமையான பயனை அடைவதற்கு அவசியமான திட்டங்களைத் தீட்டமுடிகிறது.

4. இந்த விசேஷவாரத்தின்போது புத்தகப்படிப்பு வழக்கமான முறையில் 45 நிமிடங்கள் நடத்தப்படுகிறது. நம்முடைய சுவிசேஷ வேலையில் முன்னேற்றம் செய்வதற்கு உதவியளிக்கும் முறையில் அமைக்கப்பட்ட உற்சாகமூட்டும் பேச்சு ஒன்றை ஊழியக் கண்காணி கொடுப்பதற்காக இது அவருக்கு 15 நிமிடத்தை அனுமதிக்கிறது. எல்லாப் பிரஸ்தாபிகளும் அதோடுகூட புதிதாக அக்கறையுள்ள எல்லாரும் அதற்கு ஆஜராக இருப்பது மிக முக்கியமானது.

5. இந்த விசேஷ சந்திப்பின்போது சந்திக்கப்படும் தொகுதியில் உள்ள எல்லாப் பிரஸ்தாபிகளும் ஊழியத்தில் முழுமையான பங்கை கொண்டிருப்பதற்கு முக்கியமாக வாரக் கடைசியில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பொருத்தமான இடங்களில் அந்த வாரத்தில் மாலைநேர வெளிஊழியம் ஏற்பாடு செய்யப்படலாம். ஊழிக்கண்காணியின் இலக்குகளில் ஒன்று எத்தனை பிரஸ்தாபிகளுடன் கூடுமோ அத்தனை பிரஸ்தாபிகளுடன் ஊழியஞ்செய்வதாகும். ஒருவேளை அவர் நம்முடைய மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலும் நம்மில் சிலருடன் சேர்ந்துகொள்ளலாம். ஊழியத்தில் உற்சாகமும் உதவியும் தேவைப்படுகிறது என்று எவராவது உணர்ந்தால் அவர்கள் அவருடைய உதவியை கேட்டு அவரை அணுகலாம். கூடுதலாக அந்த வாரத்தில் அவர் நடத்தக்கூடிய வெளிஊழியத்திற்கான கூட்டங்களுக்கு ஆஜராவதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

6. ஊழியக் கண்காணி புத்தகப் படிப்பு நடத்துநரோடு அந்தத் தொகுதியின் நடவடிக்கைகளைக் குறித்து கலந்துபேச நேரம் எடுத்துக்கொள்கிறார். காரியங்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு அதாவது எல்லாருக்கும் வசதியான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு வழக்கமான வெளிஊழிய ஏற்பாடுகளை விமர்சிக்கிறார். ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்வதற்கு யாருக்காகிலும் உதவியோ உற்சாகமூட்டுதலோ தேவைப்படுமானால் அவர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்கள் முன்னேறுவதற்கு உதவக்கூடிய சில தயவான ஆலோசனைகளை அவர் வழங்கலாம். புத்தகப்படிப்பு நடத்துநரோடுகூட ஒழுங்கற்ற பிரஸ்தாபிகளைச் சந்திப்பதற்கு ஊழியக் கண்காணி ஏற்பாடுகளைச் செய்யலாம். அதோடு புத்தகப்படிப்பு ஊழியருடன் சேர்ந்து அந்தத் தொகுதியின் பைபிள் படிப்பு கோப்புகளை அவர் ஆய்வு செய்யலாம். ஒரு வேளை அவர்கள் ஒருசில பிரஸ்தாபிகளுடன் அவர்கள் நடத்தும் வீட்டு பைபிள் படிப்புக்குச் சென்று ஆவிக்குரிய உற்சாகமூட்டுதலை அளிக்கலாம்.

7. அநேக புத்தகப்படிப்புகளை கொண்ட சபைகளில் ஊழியக் கண்காணியின் சந்திப்புகள் பெரும்பாலும் குறைவாக இருக்கும். ஆகையால் அவர் சந்திக்கும்போது முழுமையான நன்மை அடைவதற்கு எல்லாரும் கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டும். சந்திப்பின்போது உங்களுடைய ஊழியத்தை முன்னேற்றுவித்துக் கொள்வதற்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை குறிப்பெடுத்துக்கொண்டு அடுத்த சந்திப்புக்கு முன்பாக அவற்றை அப்பியாசிப்பதற்காக ஊக்கமான முயற்சியை எடுங்கள். தேவைப்படும் எந்த நேரத்திலும் உதவி கொடுப்பதற்கு அவர் சபையில் இருக்கிறார் என்பது மெய்யே. ஒரு சில புத்தகப் படிப்புகளை மாத்திரமே கொண்ட சபைகளில் குறைந்த பட்சம் ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு தொகுதியையும் சந்திப்பதற்கு ஊழியக்கண்காணி பிரயாசப்படுவார்

8. ஊழியக் கண்காணியோடு ஒத்துழைப்பதற்கு நமது மனவிருப்பமும், நம்முடைய சபை புத்தகப் படிப்பை அவர் சந்திக்க வருகையில் முழு இருதயத்தோடுகூடிய கொடுக்கும் நம்முடைய ஆதரவு, சீஷராக்கும் வேலையில் நமது திறம்பட்டத் தன்மையை அதிகரிப்பதற்கும் நமது ஊழியத்தில் மிகுதியான மகிழ்ச்சியைக் காண்பதற்கும் உதவி செய்யும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்