கேள்விப் பெட்டி
● இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிபேசும் சபைகள் ஒரே பிராந்தியத்தில் வேலை செய்கையில் என்ன விவரங்களை மனதில் வைக்க வேண்டும்?
ஏப்ரல் 1984 நம் ராஜ்ய ஊழியம் “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்” கட்டுரையின் கீழ் குறிப்பிட்டது: “ஒவ்வொரு சபையின் பிரஸ்தாபிகளும் தங்கள் குறிப்பிட்ட மொழி தொகுதிகளின் பேரில் தங்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும்.” பலமொழி பிராந்தியங்களில் வேலைசெய்யும் சபைகள், தங்கள் பிரஸ்தாபிகள் செல்லக்கூடாத வீடுகள் மற்றும் அடுக்ககங்களின் பட்டியலை தயாரிப்பது ஒருவேளை உதவியாக இருப்பதாக காணக்கூடும். பிராந்தியத்தை முழுமையாக வேலை செய்வதற்கும், அக்கறை காட்டும் ஆட்களை பொருத்தமான சபைகளுக்கு வழிகாட்டவும், ஒருவருக்கொருவர் பரிமாற்றமான ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்தலாம். சம்பந்தப்பட்ட சபைகளின் ஊழிய கண்காணிகளின் உத்தரவாதமாய் இது இருக்கிறது. ஒருவேளை ஒரே நாள் காலையிலோ அல்லது பிற்பகலிலோ வித்தியாச–மொழி சபைகளின் பிரஸ்தாபிகள் வீட்டுக்காரர்களுக்கு தேவையில்லா தொந்தரவு கொடுப்பதைத் தவிர்க்க இது செய்யப்பட வேண்டும். நாம் “கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடி” இருக்க விரும்புகிறோம்.—1 கொரி. 9:12.
ஆட்கள் இடம் மாறிச்செல்வதன் காரணமாக மாற்றங்கள் செய்யத் தேவை இருக்குமேயானால், அக்கறை காட்டும் ஆட்களின் பெயர்களையும் விலாசங்களையும் பொருத்தமான சபைகளுக்கு சீக்கிரமாய் அனுப்புங்கள். இது பிராந்திய பதிவுகளை நவீனப்படுத்தி வைப்பதற்கு உதவிசெய்யும். அன்பு, பரஸ்பர அக்கறை, புரிந்துகொள்ளுதல், நியாயமாக இருத்தல், ஒத்துழைப்பு ஆகியவை முக்கியம்.—பிலி. 4:5.
தெரு ஊழியம், சந்தர்ப்ப சாட்சி போன்றவற்றில் பங்குகொள்கையில் பிரஸ்தாபிகள் பல மொழிகளில் பிரசுரங்களை எடுத்துச் செல்லலாம். இருந்தபோதிலும், வீட்டுக்கு வீடு செல்கையில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான சபைகள் பங்குகொள்ளும் பிராந்தியத்தில் நாம் பொதுவாக நம் சொந்த சபையின் மொழியில் அதிகமாக அக்கறை செலுத்துவோம். இந்தப் பிரச்னை இருக்கையில், பிராந்தியங்கள் மொழிக்கு ஏற்றபடியும், பிரசுரங்களை அளிக்கும் பிரஸ்தாபிகள் அக்கறை காட்டும் வீட்டுக்காரரை அவர் நன்றாகப் புரிந்துகொள்ளும் அல்லது விரும்பும் மொழியில் நடக்கும் சபை கூட்டங்களுக்கு வழிநடத்தும்படியும் தயாரிக்கப்படும் என்பதை மனதில் வையுங்கள்.
தெளிவாகவே சில சமயங்களில் ஒரு மொழியினர் செய்யும் பிராந்தியத்தை மற்றொரு மொழியினரும் ஒரே சமயத்தில் செய்யக்கூடிய சாத்தியம் சிறிது இருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டுரையில் கூறியுள்ளபடி, “நாம் பிரசங்கிக்கையில் நம் நோக்கம்—சீஷர்களை உண்டுபண்ணுவது, சத்தியத்தைக் கற்பிப்பது என்பதை நம் மனதில் அதிமுக்கியமாக வைப்பது நல்லது. (மத். 28:19, 20) ஆட்கள் நன்றாகப் புரிந்துகொள்ளும் மொழியில் கற்பித்தல் செய்யப்பட வேண்டும். (1 கொரி. 14:9)” நாம் ஆஜராகும் சபையின் மொழியை விரும்பும் அல்லது நன்றாகப் புரிந்துகொள்ளும் ஆட்களின் பேரில் நம் ஊழியத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இன்னும் அநேகர் இரட்சிப்படைவதற்கு உதவி செய்து அதிக நன்மை சாதிக்கப்படலாம்.