விசேஷ மாநாடுகள் யெகோவாவை கனப்படுத்துகின்றன
1 வருடாந்தர மாநாடுகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சியையும், சந்தோஷமான கிறிஸ்தவ கூட்டுறவோடு கூடிய உற்சாகத்தையும் அளிக்கின்றன. யெகோவாவின் ஜனங்களின் மிகப் பெரிய கூட்டங்கள், யெகோவாவின் பெயரை அறிவிப்பதற்கும், ராஜ்யத்தின் நற்செய்தியை பரப்புவதற்கும் திறம்பட்ட முறையாக சேவிக்கின்றன.
2 ஒழுங்கான மாவட்ட மாநாடுகள் ஒவ்வொரு வருடமும் பூமி முழுவதிலும் எல்லாச் சகோதரர்களின் நன்மைக்காகவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிறகு சில சமயங்களில் விசேஷ மாநாடுகள் சில பகுதிகளில் நடத்தப்படுகின்றன. மிகப் பெரிய சாட்சி கொடுப்பதற்கும், அமைப்பின் சர்வதேச அம்சத்தை காண்பிப்பதற்கும் இது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. 1989-ல் போலந்தில் மூன்று விசேஷ மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த விசேஷ மாநாடுகளைப் பற்றி நாம் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தன!
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஏற்பாடு
3 விசேஷ மாநாடுகளில் ஒன்றுக்கு ஆஜராவதற்கு ஆயிரக்கணக்கான சகோதரர்கள் விரும்புவர். நாளடைவில் இம்மாநாடுகளுள் ஒன்றுக்கு இன்னுமதிக சகோதரர்கள் ஆஜராவது கூடிய காரியமாகலாம். என்றபோதிலும், விசேஷ மாநாடுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், எல்லாக் காரியங்களும் ஒழுங்கான முறையில் நடைபெறுவதற்கும், நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கிளைக்காரியாலயமும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பிரதிநிதிகளை ஒரு குறிப்பிட்ட மாநாட்டிற்கு ஆஜராவதற்கு தேர்ந்தெடுப்பது தான் ஏற்பாடாகும். உள்ளூர் சகோதரர்களுக்கு உற்சாகமாயிருப்பதற்கும், காண்பவர்கள் எல்லாருக்கும் சாட்சி கொடுப்பதன் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச சகோதரத்துவம் ஒரு சமநிலையான விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்கும் இது வாய்ப்பளிக்கிறது. உள்ளூர் சபை ஊழிய குழுவால் சிபாரிசு செய்யப்பட்டு விண்ணப்பிக்கிற எல்லாருமே பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று இது அர்த்தங்கொள்ளாது. தேர்ந்தெடுக்கப்படாததன் காரணமாக சிலர் ஏமாற்றமடையலாம், ஆனால் இப்பேர்ப்பட்ட ஏற்பாட்டின் முக்கிய காரணங்களை எல்லாரும் புரிந்து கொள்வர் என்று நாங்கள் நம்புகிறோம்.
4 ஒரு சிறந்த சாட்சி கொடுக்கப்படுவதற்கு விசேஷ மாநாடுகளுக்காக வரையறுக்கப்பட்டிருக்கும் ஏற்பாடுகளோடு ஒவ்வொருவரும் ஒத்துழைக்குமாறு சங்கம் கேட்டுக் கொள்கிறது. சில சகோதரர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், ஒரு விசேஷ மாநாட்டிற்கு ஆஜராவதற்கு தங்கள் சொந்த ஏற்பாடுகளை செய்து கொண்டால், அது பிரச்னைகளை உண்டாக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஒரு விசேஷ மாநாட்டிற்காக அனுப்பப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. மாநாட்டு வசதிகளில் அளவுக்கு மீறி ஜனநெரிச்சலை தவிர்ப்பதற்கு இது அவசியமாயிருக்கிறது. வசதிகளில் நெரிச்சல் அதிகரிக்குமானால், மாநாடு தடங்கலின்றி இயங்குவதற்கு தடையாக இருக்கும், உள்ளூர் அதிகாரிகளில் ஒரு சாதகமான அபிப்பிராயத்தை இது உண்டுபண்ணாது.
5 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாங்கள் மாநாட்டிற்கு ஆஜராவதன் நோக்கம் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு என்பதை மனதில் வைக்க வேண்டும். எல்லாப் பிரதிநிதிகளும் தனிப்பட்ட ஏற்பாடுகளை செய்யாமல், சங்கம் செய்யும் பயண ஏற்பாடுகளோடும், மற்ற ஏற்பாடுகளோடும் ஒத்துழைக்கையில் இந்த நோக்கம் அதிக விரைவில் நிறைவேறும்.
6 இந்த வருடம் விசேஷ மாநாடுகள் ஜெர்மனியில் பெர்லினிலும், பிரேஸிலில் சாபோலோவிலும் நடத்தப்பட்டன. டிசம்பரில் ஒரு விசேஷ மாநாடு பியோனஸ் அயர்ஸ், அர்ஜன்டினாவில் நடத்தப்படும். ஜனவரி 1991-ல் விசேஷ மாநாடுகள் தூர கிழக்கில் நடத்தப்படும். மூன்று இடங்களாவன: மனிலா, பிலிப்பீன்ஸ்; டாய்பிய், தைவான்; பாங்காக், தாய்லாந்து. இந்த மாநாடுகளுக்காக பிரதிநிதிகள் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். (இம்முறை இந்தியா இந்த ஏற்பாட்டில் சேர்க்கப்படவில்லை.) தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதிநிதிகளும், மற்ற தேசங்களிலிருந்து வரும் பிரதிநிதிகளோடு சேர்ந்து ஒரு சிறந்த சாட்சி கொடுப்பதற்கு எல்லா முயற்சியும் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 விசேஷ மாநாடுகளுக்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டாலோ அல்லது உள்ளூர் மாநாடுகளுக்கு ஆஜரானாலோ, நம் ஜெபங்களும், நம் தினசரி நடத்தையும் நாம் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவை கனப்படுத்த வேண்டும் என்ற நம் உண்மையான விருப்பத்திற்கும், முழு ஆத்தும பக்திக்கும் அத்தாட்சியாய் இருப்பதாக!