தேவராஜ்ய செய்திகள்
◆ அலாஸ்கா ஜூலை மாதத்தில் 2,053 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை எட்டியது, சென்ற வருட சராசரியை விட 12 சதவிகித அதிகரிப்பு. ஜூலையில் “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டிற்கு 2,929 பேர் ஆஜரானார்கள். 50 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
◆ ஜூலை மாதத்தில் பிரேஸில் 2,93,466 பிரஸ்தாபிகள் என்ற ஒருபோதும் இல்லாத உச்சநிலையை எட்டியது, இது ஊழிய வருடத்திற்கு ஒன்பதாவது உச்சநிலையாக இருந்தது. 3,69,999 பைபிள் படிப்புகள் என்ற புதிய உச்சநிலையும் அறிக்கை செய்யப்பட்டது.
◆ 1,534 பேர் அறிக்கை செய்ததோடு பிஜி தனது 67-வது தொடர்ச்சியான பிரஸ்தாபி உச்சநிலையை ஜூலையில் எட்டியது. பைபிள் படிப்புகள் 2,605 ஆக உயர்ந்தது.
◆ கிழக்கு அமெரிக்காவின் வடபகுதியில் உள்ள ஃபிரெஞ்சு கயானா என்ற தேசம் செப்டம்பர் 1990-ல் காவற்கோபுர சங்கத்தின் கிளைக்காரியாலயத்தைக் கொண்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் 660 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை கொண்டிருந்தனர், அவர்களுடைய மாவட்ட மாநாட்டிற்கு 1,479 பேர் ஆஜராயிருந்தனர், 41 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
◆ குவாடிலோப்பில் நடந்த நான்கு மாவட்ட மாநாடுகளில் 13,021 பேர் ஆஜராயிருந்தனர். 259 பேர் முழுக்காட்டப்பட்டனர். அவர்களுடைய பிரஸ்தாபி உச்சநிலை 6,233 ஆக இருந்தது.