சோர்ந்து விடாதீர்கள்
1 பூமி முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிளர்ச்சியூட்டும் விரிவாக்கத்தைப் பற்றி 1991 வருடாந்தர புத்தகம் கூறுகிறது. தேசத்திற்குப் பிறகு தேசமாக பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலைகள் இருக்கின்றன.
2 ஆனால் உங்கள் பிராந்தியத்தில் நிலைமை என்னவாக இருக்கிறது? அசட்டை மனப்பான்மையை நீங்கள் எதிர்ப்படுகிறீர்களா? ராஜ்ய செய்திக்கு ஜனங்கள் ஆர்வமற்றவர்களாயிருக்கின்றனரா? வீடுகளில் வெகு சில ஆட்களே இருக்கின்றனரா? வெகு சிலரே சாதகமாகப் பிரதிபலிக்கின்றனரா? அப்படியென்றால், கலாத்தியர் 6:9-ல் உள்ள பவுலின் புத்திமதியினால் நீங்கள் உற்சாகப்படுத்தப்படலாம்: “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” நன்மை செய்வதில், வீட்டுக்கு வீடு ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பது நிச்சயமாகவே உட்பட்டிருக்கிறது. வேலை முடிந்துவிட்டது என்று யெகோவா சொல்லும் வரையில் நாம் தொடர்ந்து அவசரத் தன்மையோடு பிரசங்கிக்க வேண்டும். (ஏசா. 6:8) கடினமானப் பிராந்தியங்களிலும்கூட, செம்மறியாட்டைப் போன்ற ஆட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
3 ஊழியத்தில் சோர்ந்துவிடாமலிருக்க நாம் என்ன செய்யலாம்? நம் அணுகுமுறையை அல்லது நம் முன்னுரைகளை மாற்றுவது உதவிசெய்யும். நியாயங்கள் புத்தகத்தில் மிகச் சிறந்த ஆலோசனைகள் இருக்கின்றன. அவைகளை உபயோகிக்க நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? மிகச் சுருக்கமான ஆனால் நேரடியான அணுகுமுறை இன்னுமதிகமான வீட்டுக்காரர்களின் கவனத்தை ஒருவேளை கவரக்கூடும். அவர்களிலும், அவர்கள் நலனிலும் நீங்கள் தனிப்பட்ட விதமாக அக்கறையுடையவர்களாக இருப்பதினால் அங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்ளட்டும்.
பழைய புத்தகங்களை அளியுங்கள்
4 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் போது, பழைய 192 பக்க புத்தகங்களை அளிப்பதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அக்கறை காண்பிக்கலாம். நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் நாம் தனிப்பட்ட விதமாக கடவுளுடைய ராஜ்யத்தை சிபாரிசு செய்கிறோம், ஆதரிக்கிறோம். ராஜ்யத்தைப் பற்றி வெகு சிறிதே அறிந்து ஆனால் அதற்காக ஜெபிக்கும் அநேகர், ராஜ்யத்தைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள உதவுவதற்கு இந்த வாழ்க்கை புத்தகம் ஒரு மிகச் சிறந்த கருவியாகும்.
5 இப்புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரமும் மிகச் சிறந்த பேச்சுக் குறிப்புக்களை கொண்டிருக்கிறது. அதிகாரங்கள் 15, 16, 17 அல்லது 18-ன் தலைப்புகளுக்கு கவனத்தைத் திருப்பி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிலிருந்து ஒரு பொருத்தமான குறிப்பை உபயோகித்து நீங்கள் ஒருவேளை முயன்று பார்க்கலாம். பக்கம் 189-ல் உள்ள “உண்மையில் பயனுள்ள ஒரு வழி” என்ற தலைப்பின் கீழ் நமது தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு நன்றாக இணையும் மிகச் சிறந்த குறிப்புகள் இருக்கின்றன.
6 வாராந்தர அடிப்படையில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் நாம் பங்கெடுப்பதன் மூலம் நாம் நிச்சயமாக தனிப்பட்ட விதமாக உற்சாகப்படுத்தப்பட்டும் பலப்படுத்தவும்படுவோம். கூடுதலாக, சபை கூட்டங்களில் ஒழுங்காக பங்கெடுப்பதன் மூலமும், நிலையாக கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் நம் ஆவிக்குரிய தன்மையை உயர்வான நிலையில் வைக்கலாம்.—எபி. 10:23–25.
பலமாக இருக்க மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்
7 வெளி ஊழியத்தில் மற்றவர்களோடு வேலை செய்வதன் மூலம், நீங்கள் உங்களுக்கே உதவி செய்து கொள்ளலாம், மேலும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்தலாம். (கலா. 6:10) பயனியர்களோடும், மூப்பர்களோடும் வேலை செய்ய நீங்கள் ஏன் அவர்களைக் கேட்கக்கூடாது? ஒழுங்கற்றவர்களாகவும் அல்லது ஒருவேளை செயலற்றவர்களாகவும் இருப்பவர்கள், அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் உங்களுடைய அக்கறையின் மூலம் உற்சாகப்படுத்தப்படுவார்கள்.
8 இந்தக் கடினமான கடைசி நாட்களில் யெகோவாவின் சேவையில் நாம் அனைவரும் சோர்ந்துவிடாமல் சகித்திருக்க தேவை இருக்கிறது. அப்பேர்ப்பட்ட சகிப்புத்தன்மை, கஷ்டங்களோ அல்லது மற்றவர்களின் பங்கில் ஆர்வமின்மையோ இருந்தாலும் நாம் கிறிஸ்தவ வைராக்கியத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும். (எபி. 10:36–39) பலத்திற்காக யெகோவாவிடம் ஜெபியுங்கள். (ஏசா. 40:29–31) நீங்கள் சகித்திருக்க உதவி செய்வதற்கு அவரை கேளுங்கள், மேலும் ஓர் உடன்பாடான மனநிலையை வைத்திருங்கள். நாம் கடவுளுடைய வேலையை செய்கிறோம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். நாம் அவருடைய சேவையில் என்ன செய்கிறோம் என்பதை அவர் காண்கிறார், அவர் அதை மறந்துபோவதில்லை. (எபி. 6:10) ஆகையால் நாம் சோர்ந்துவிடாமலிருப்போமாக! மாறாக, “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாக” அவருடைய ‘சிறந்த வேலைக்காக’ நம்மைப் பலப்படுத்தும்படி யெகோவாவின் பேரில் சார்ந்திருப்போமாக.—1 கொரி. 15:58; கலா. 6:9.