சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
பிப்ரவரி 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 18 (108)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். பிப்ரவரி மாத அளிப்பை சிறப்பித்துக் காட்டுங்கள். சபை கையிருப்பில் இருக்கும் பழைய புத்தகங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள். தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு உபயோகப்படுத்த முன்னுரைகளை சிந்தியுங்கள்.
20 நிமி: “சோர்ந்து விடாதீர்கள்.” கட்டுரையில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்தாலோசித்தல். பாரா 3-ஐ கலந்தாலோசிக்கையில் சபையாரிடமிருந்து ஆலாசனைகள் கேளுங்கள். பாரா 5-ல் இருக்கும் ஆலோசனையை உபயோகித்து ஒரு தகுதி வாய்ந்த பிரஸ்தாபி அளிப்பை நடித்துக்காட்டுமாறு செய்யுங்கள். சபை வெளி ஊழியத்தில் சுறுசுறுப்பாயிருக்கும்படி உற்சாகப்படுத்துங்கள், மேலும் அக்கறையின்மை அல்லது எதிர்ப்படும் எதிர்ப்பினால் உற்சாகமிழக்காமல் அல்லது சோர்வடையாமல் இருக்க சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “அவிசுவாசிகளுடன் உங்களை பிணைத்துக் கொள்ளாதீர்கள்.” காவற்கோபுரம், நவம்பர் 1, 1989. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், ஜூன் 1, 1990.) சபையார் பங்கெடுத்தலோடு பேச்சு.
பாட்டு 147 (38), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30 (117)
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வார சாட்சி கொடுக்கும் வேலையில் உபயோகப்படுத்த பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளை சுருக்கமாகக் குறிப்பிடுங்கள். கிடைக்குமானால், சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப் பிரதியை ஒவ்வொருவரும் அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு கொண்டுவர வேண்டும்.
20 நிமி: நாம் எவ்வாறு பலமாக இருக்கலாம்? சோர்ந்து விடாமல் தொடர்ந்து பலமாக இருக்க வேண்டியதன் தேவையை சிறப்பித்துக் காட்ட வரிசையான பேட்டிகள். (1) அநேக வருடங்களாக சேவை செய்யும் நல்ல முன்மாதிரியான இரண்டு அல்லது மூன்று பேரை பேட்டி காணுங்கள். பிரசங்கிப்பதை நிறுத்துவதற்கான என்ன அழுத்தங்களை அவர்கள் அனுபவித்திருக்கின்றனர், மேற்கொண்டிருக்கின்றனர்? சோர்ந்துவிடாமல் தொடர்ந்து செல்ல அவர்களுக்கு எது உதவி செய்தது? (ஜெபம், ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராதல், தனிப்பட்ட படிப்பு, மற்றவர்களிடமிருந்து உற்சாகம் போன்றவற்றை குறிப்பிடலாம்.) வேகத்தைக் குறைத்துகொள்ளுதல் அல்லது பொறுப்பை விட்டுபோய்விடுதல் போன்றவற்றிற்கு எதிராக காத்துக்கொள்ள அவர்கள் என்ன செய்தனர்? (ஒழுங்காக கூட்டங்களில் கூட்டுறவு கொள்ளுதல், தனிப்பட்ட படிப்பை தொடர்ந்து செய்தல், யெகோவாவுடன் உள்ள உறவை போற்றுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடலாம்.) அவர்கள் எவ்வாறு தங்கள் ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொண்டார்கள்? (மூப்பர்களின் அல்லது மற்றவர்களின் உதவி, ஆவிக்குரிய அக்கறைகளை வாழ்க்கையில் முதலில் வைத்தல், யெகோவாவிடமாக ஜெபித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.) (2) நல்ல முன்மாதிரியான, ஒழுங்கான பிரஸ்தாபிகளாயிருக்கும் சில பிள்ளைகளை பேட்டி காணுங்கள். சேவையில் ஒழுங்காக இருக்கும்படி என்ன அவர்களுக்கு உதவியிருக்கிறது? பெற்றோர்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவியிருக்கின்றனர்? வெளி ஊழியத்தில் மற்ற பிரஸ்தாபிகள் அவர்களை உற்சாகப்படுத்தி உதவி செய்கின்றனரா? யெகோவாவின் சேவையில் அவர்களுடைய இலக்குகள் என்ன? பேட்டிகளில் குறிப்பிட்ட குறிப்புகளை சுருக்கமாக விமர்சித்து முடியுங்கள்.
15 நிமி: “அந்தப் பொன்விதி—ஏன் இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறது?” காவற்கோபுரம் நவம்பர் 1, 1989. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம் ஜனவரி 1, 1991) சபையாரின் பங்கெடுத்தலோடு பேச்சு.
பாட்டு 10 (88), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 121 (95)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையும், நன்கொடை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் கடிதங்களும். உலகளாவிய வேலையின் ஆதரவுக்காக சபைக்கு பாராட்டு தெரிவியுங்கள். “காவற்கோபுரம் சந்தா விசேஷ அளிப்புக்கு தயாராயிருங்கள்” என்பதிலுள்ள தகவலுக்கு கவனத்தைத் திருப்புங்கள், மேலும் தேவையான, அதிகப்படியான பத்திரிகைகளை கேட்டு தருவிக்குமாறு பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு பிரஸ்தாபிகள் தங்கள் 1986-1989 காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸை கொண்டு வர விரும்பலாம்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—துண்டுப் பிரதிகளுடன்.” கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. வசனங்களை வாசியுங்கள். பாரா 7-ஐ கலந்தாலோசித்த பிறகு, பயனியரோ அல்லது தகுதிவாய்ந்த பிரஸ்தாபியோ சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை துண்டுப்பிரதியை உபயோகித்து மறுசந்திப்பில் படிப்பை ஆரம்பிப்பதை நடித்துக் காட்டுங்கள். இந்த அணுகுமுறயை விசேஷமாக, முதல் சந்திப்பிற்கு பிறகு வீட்டுக்காரர்களை வீடுகளில் பார்ப்பதற்கு கடினமாக இருக்கும் மறுசந்திப்புகளில் உபயோகிக்குமாறு பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். இந்த அணுகுமுறையை உபயோகித்து வெற்றியடைந்த பிரஸ்தாபிகள் தாங்கள் தயாரித்த குறிப்புகளைச் சொல்லுமாறு அழையுங்கள்.
15 நிமி: “மெய் அழகு—நீங்கள் அதை வளர்க்கலாம்.” ஊழிய கண்காணியின் பேச்சு. காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1989. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், ஜூன் 1, 1990.)
பாட்டு 108 (100), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 111 (20)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். வார இறுதி நாட்களுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். தற்போதைய பத்திரிகைகளிலிருந்து உள்ளூர் பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களுக்கு குறிப்பாக எந்தக் கட்டுரைகள் கவர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதைப் பற்றி ஆலோசனைகள் அளியுங்கள்.
23 நிமி: “இன்டெக்ஸ்-லிருந்து வரும் உதவியுடன் நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்.” சபையார் பங்கெடுத்தலோடு மூப்பரின் பேச்சு. ஒரு மேய்க்கும் சந்திப்பிற்காக ஒரு மூப்பரும், ஓர் உதவி ஊழியரும் இன்டெக்ஸை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். வாராந்தர பைபிள் வாசிப்பின் மதிப்பை உயர்த்த இன்டெக்ஸை பிரஸ்தாபிகள் உபயோகிக்க எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை கலந்தாலோசியுங்கள்.
12 நிமி: பிரசுர ஊழியரின் வேலைகள். ஊழிய கண்காணி பிரசுர ஊழியரை பேட்டி காண்கிறார், உட்பட்டிருக்கும் உத்தரவாதங்களை விமர்சிக்கிறார். கூட்டங்களுக்கு முன்னும் பின்னும் பிரசுரங்கள் விநியோகிப்பதை மேம்படுத்த உதவியாயிருக்கும் சபை தேவைகளை சிறப்பித்துக் காட்டுவது நன்மையானதாய் இருக்கும். சங்கத்திடம் கிடைக்கக்கூடியதாக இருந்தால் கையிருப்பில் வைப்பதற்கு தேவைப்படும் பிரசுரங்களுக்கான ஆலோசனைகளை சபையாரோடு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 203 (71), முடிவு ஜெபம்.
மார்ச் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (10)
5 நிமி: சபை அறிவிப்புகள்.
25 நிமி: “1991-ற்கான ஞாபகார்த்த ஆசரிப்பு.” சபையார் பங்கெடுத்தலோடு மூப்பரின் பேச்சு. புதியவர்களை ஞாபகார்த்த நாளிற்கு அழைக்க எவ்வாறு திட்டமிட்டிருக்கின்றனர் என்று சபையாரை கேளுங்கள். மேலும் அவர்கள் ஆஜராவதற்கு உதவி செய்ய ஞாபகார்த்த நாள் அழைப்பிதழ்கள் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது என்பதை சபைக்கு ஞாபகப்படுத்துங்கள்.
15 நிமி: ஞாபகார்த்த நாள் காலத்தின்போது நீங்கள் துணைப்பயனியர் ஊழியம் செய்யக்கூடுமா? ஒழுங்கான அல்லது துணைப்பயனியர் ஊழிய அனுபவமுள்ள சகோதரரால் அனலான கலந்தாலோசிப்பு. முன்பு துணைப்பயனியர் ஊழியம் செய்த அநேகரை பேட்டி காணுங்கள். அவர்கள் தங்கள் இலக்கை அடைய என்ன சரிப்படுத்திக் கொள்ளுதல்களைச் செய்தனர்? அவர்கள் செய்த நடைமுறையான திட்டங்களை சிறப்பித்துக் காட்டுங்கள். ஞாபகார்த்த நாள் சமீபித்து வருவதால், அக்கறையுள்ள பிரஸ்தாபிகள் தங்கள் திட்டங்களை ஒரு மூப்பரோடு கலந்தாலோசிக்க உற்சாகப்படுத்துங்கள். இப்போது உடன்பாடான மனநிலையுடன் இருப்பதன் மூலம் அநேகர் இந்தச் சேவையை மகிழ்ந்து அனுபவிப்பர். சிலருக்கு இது ஒருவேளை ஒழுங்கான பயனியர் சேவைக்கு நடத்தும் ஒரு படியாகலாம். (நம் ராஜ்ய ஊழியம், 3/90 பக். 3) நடத்தும் கண்காணி அல்லது காரியதரிசியிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பாட்டு 151 (25), முடிவு ஜெபம்.