நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—தெரு ஊழியத்தின் மூலமாக
1 நீதி. 1:20, 21 சொல்கிறது: “ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. . . . பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்கிறது.” இந்த வார்த்தைகள் இன்று விசேஷமாக உண்மையாயிருக்கின்றன, யெகோவாவின் ஊழியர்கள் எங்கெல்லாம் ஜனங்களைக் காண்கிறார்களோ, அங்கெல்லாம் வைராக்கியத்துடன் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கின்றனர். இயேசுவையும், கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தின தீர்க்கதரிசிகளையும் போன்று ஜனங்களுக்கான மெய்யான அன்பு எல்லா இடங்களிலும் ஒவ்வொருவருக்கும் சத்தியத்தை அளிக்க நம்மை தூண்டுகிறது.—எரே. 11:6; மாற்கு 6:56; லூக். 13:22, 26.
2 சத்தியத்தைப் பற்றி ஒருவரிடம் பேச அவருடைய வீடு தான் வழக்கமாக அதிக விரும்பத்தக்க இடமாக இருந்தாலும், நாம் வீட்டுக்கு வீடு சந்திப்பு செய்யும் போது அநேக ஜனங்கள் வீட்டில் இருப்பதில்லை. வீட்டுக்காரர்கள் வீட்டில் இருக்கும்போது, நாம் முன்பு யாரிடம் பேசினோமோ அதே நபரே கதவண்டையில் பதிலளிக்கிறார், குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களோடு தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஆக, தெரு ஊழியம் நம் ஊழியத்தில் ஓர் உறுதியான இடத்தைப் பெற வேண்டும். ஒரு பயனியர் தெரிவித்த விதமாய் நீங்கள் தெரு ஊழியத்தை “கிளர்ச்சியூட்டும், புதுமையான, பழகிவிட்ட பிராந்தியமாகக்” காணலாம்.
ஓர் அனலான உடன்பாடான மனநிலை
3 ஒரே இடத்தில் ஓர் ஒழுங்கான அடிப்படையில் உங்கள் தெரு ஊழியத்தை செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? இதை செய்யும் ஒரு சகோதரி “அவளுடைய” தெருவில் அடிக்கடி இருக்கும் மற்ற ஆட்களோடும், அநேக கடைக்காரர்களோடும் அவள் அறிமுகமாகியிருப்பதாக சொல்கிறாள். ஒரு நல்ல தொடர்பு வளர்ந்திருக்கிறது, அது அநேக பலன்தரும் பைபிள் கலந்தாலோசிப்புகளுக்கான வழியை திறந்திருக்கிறது. முழுமையாக தெரு ஊழியத்தை அனுபவிக்கும் ஒரு துணைப்பயனியர், கடை ஜன்னல்களை வேடிக்கை பார்ப்பவர்கள், தங்கள் வாகனங்களில் உட்கார்ந்திருக்கும் ஜனங்கள், பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள், முன்பு வேண்டாம் என்று கூறின ஆட்களையும்கூட தான் அணுக முயற்சி செய்வதாகச் சொன்னார். நாம் தைரியமாகவும், இணங்குவிக்கிறவர்களாகவும் இருக்க தைரியமும், நல்ல மதிப்பீடும் தேவைப்படுகிறது என்றாலும் அளவுக்கு மீறி விடாப்பிடியாக இருக்கக்கூடாது.
4 திறம்பட்ட தெரு ஊழியத்துக்கு திறவுகோல் ஓர் அனலான, இன்முகமான, உண்மைத்தன்மையுள்ள அணுகுமுறையை கொண்டிருப்பதாகும். புன்முறுவல் செய்யுங்கள். முடிந்தால் அந்த நபரோடு பார்வை தொடர்பு கொள்ளுங்கள், அது முடியவில்லையென்றால், சிநேகபான்மையாக அணுகுங்கள். சூழ்நிலைகளைக் கூர்ந்து கவனித்து, அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். மளிகைப் பொருள் பைகளை பாரமாக வைத்திருந்த ஒரு பெண்மணியை கவனித்து ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறாள், “நீங்கள் உணவுப்பொருட்களை வாங்கியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. இந்த நாட்களில் அவைகள் நிச்சயமாகவே விலையுயர்ந்ததாய் இருக்கின்றன. மனதுக்கும் இருதயத்துக்கும் உற்சாகமூட்டும் உணவைப் பற்றி என்ன? இந்தக் கட்டுரையை நான் அனுபவித்தேன். . . . ” பிள்ளைகளுடன் இருக்கும் ஒருவரைப் பார்த்து அவள் சொல்கிறாள், “உங்களுக்கு இரண்டு அழகான பிள்ளைகள் இருப்பதை நான் காண்கிறேன். பிள்ளைகள் கடவுளிடமிருந்து வரும் ஓர் ஆசீர்வாதம் என்று பைபிள் சொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ நான் உங்களுக்கு காண்பிக்கிறேன் . . . ” ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் ஒரு நபரை அணுகி, அவள் சொல்கிறாள், “ஏதோவொன்றைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் காண்கிறேன். இன்று உலகம் கஷ்டங்களால் நிறைந்திருக்கிறது, நீங்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இனி எப்போதாவது . . . ?”
5 ஒரு நபர் தெருவில் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தால், இந்தக் குறிப்போடு நீங்கள் வெறும் ஒரு துண்டுப்பிரதியை கொடுக்கலாம், “உங்களுக்கு நேரம் இருக்கும்போது நீங்கள் வாசிப்பதற்கு இங்கே சில நற்செய்திகள்.” ஜனங்கள் வேகமாகச் சென்றுக்கொண்டில்லையென்றால், பத்திரிகைகளை அளியுங்கள், அவைகள் சந்தா மூலம் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது என்று விளக்குங்கள், சந்தா தொகயையும் குறிப்பிடுங்கள். எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் ஜனங்களின் கைகளில் பிரசுரங்களை கொடுத்துவிடுவது நல்லது.
6 தெரு ஊழியத்தைக் குறித்து முதலில் மனவுரமற்று இருந்த அநேக பிரஸ்தாபிகள், இப்பொழுது அதைத் தாங்கள் விரும்பும் ஊழிய முறையாக நோக்குகின்றனர். அபாயகரமான இடங்களில் ஊழியம் செய்யும்போதும் அல்லது பாதுகாப்பற்றதாக இருக்கும் நேரத்திலும் எச்சரிக்கை பிரயோகிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. சிறு பட்டணங்களிலும்கூட சுறுசுறுப்பான இடங்கள் இருக்கின்றன, பொது போக்குவரத்து மையங்கள், அல்லது பொது வாகனம் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் நற்செய்தியோடு ஜனங்களை அணுகலாம். வாய்ப்பை பற்றிக்கொள்ளுங்கள், தெருக்களிலும், பொது சதுக்கங்களிலும் கேட்பவர்களின் ஆசீர்வாதத்துக்காகவும், யெகோவாவின் கனத்துக்காகவும் நற்செய்தியை ஞானத்தோடு உங்கள் குரல் தொனிப்பதாக.—நீதி. 1:20.