ஊழியத்தில் பொறுமையாயும் முழுமையாய் செய்கிறவர்களாயும் இருங்கள்
1 கேட்க விரும்பும் எல்லாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் பொறுமையாயும் முழுமையாய் செய்கிறவனாயும் இருப்பதற்கு, அப்போஸ்தலனாகிய பவுல் யெகோவாவுக்கு முன் கூரிய உணர்வுள்ள உத்தரவாதத்தை காத்து வந்தான். எபேசுவிலிருந்து வந்து ஒன்று கூடியிருந்த கண்காணிகளுக்கு அவன் நம்பிக்கையுடன் சொன்னான்: “ஆகிலும் அவைகளில் ஒன்றையுங் குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.” (அப். 20:24) அது போன்றே நம் மீது வைக்கப்பட்டுள்ள தேவையை நாம் உணருகிறோமா?—1 கொரி. 9:16.
அடிக்கடி வேலை செய்யப்பட்ட பிராந்தியங்களில்
2 நம் பிராந்தியம் அடிக்கடி வேலை செய்யப்பட்டதாயிருந்தால், பொறுமை விசேஷமாக தேவைப்படுகிறது. பிராந்தியம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் திரும்பத் திரும்பச் சென்று சந்திப்பதற்கு நாம் உந்துவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலுமுள்ள எல்லா ஆட்களோடும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய பைபிளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை போற்றுவதற்கு உண்மையான ஆட்களுக்கு படிப்படியாக உதவுங்கள்.
3 நம்முடைய பிராந்தியம் அடிக்கடி வேலை செய்யப்பட்டதாயிருந்தால் பொறுமையாயிருப்பதன் மற்றொரு நன்மை, வீட்டுக்காரர்களோடு நாம் தனிப்பட்ட விதமாக அறிமுகமாவதாகும். இது தங்களுடைய கதவுகளை திறப்பதில், அவர்களை அதிக செளகரியமாக உணரச்செய்யும். அடிக்கடி செய்யப்பட்ட பிராந்தியங்களில் நம்முடைய முன்னுரைகளை பல்வேறு விதமாக மாற்றியமைத்து உபயோகிக்க நியாயங்கள் புத்தகத்தில் மிகச் சிறந்த ஆலோசனைகள் இருக்கின்றன.—நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 9–15 பார்க்கவும்.
4 சில சமயங்களில் நாம் ஜனங்களை சந்திக்கும்போது, சிலர் அக்கறை காண்பிப்பார்கள், ஆனால் நம்முடைய பிரசுரங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது போன்ற சமயங்களில் நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? முழுமையாய்ச் செய்ய வேண்டும் என்ற நம்முடைய முயற்சி அந்த அக்கறையை வளர்ப்பதில் விடாமுயற்சியுடன் இருக்க நம்மை உந்துவிக்கும். அவர்களுடைய இருதயங்களில் பதிய வைத்தவைகளை வளர்ப்பது, இறுதியில் ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களை ஒருவேளை உந்துவிக்கும். பிரசுரங்களை அளிக்காமலேயே ஒரு சகோதரர் அக்கறைக் காண்பித்த ஒரு வீட்டுக்காரரை தொடர்ந்து ஐந்து வாரங்கள் சந்தித்தார். ஆறாவது விஜயத்தின் போது, வீட்டுக்காரர் பிரசுரங்களை ஏற்றுக்கொண்டார், இறுதியில் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
புரோஷுர்களை அளித்தல்
5 “ஒரு புதிய உலகம்—அது யாரால்?” என்பது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தின் போது நம்முடைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளாக இருக்கும். பின்வரும் புரோஷுர்களில் ஏதாவது ஒன்றை அளிக்கும் போது உபயோகிக்க இந்தப் பேச்சுப் பொருள் போதுமான அளவுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாயிருக்கிறது: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம், மற்றும் பரதீஸைக் கொண்டு வரும் அரசாங்கம். நாம் நேரமெடுத்து இந்தப் புரோஷுர்களுடன் அறிமுகமானால், சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு உபயோகிக்க அநேக பொருத்தமான பேச்சுக் குறிப்புகளை நாம் காண்போம்.
6 உதாரணமாக, நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இவ்வாறு சொல்லலாம்: “உலக சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு மனிதனின் வாக்கின் பேரில் உங்களுடைய எண்ணங்கள் என்ன? [பிரதிபலிப்புக்காக அனுமதியுங்கள்.] இந்த விஷயத்தில் மனிதனின் திறமைகளைப் பற்றி பைபிள் எவ்வாறு விளக்கம் கொடுக்கிறது என்பதை சிந்தியுங்கள். [எரேமியா 10:23 வாசிக்கவும்.] தன்னைத்தானே ஆட்சி செய்து கொள்வதற்கு உண்மையிலேயே அவன் தகுதியானவன் அல்ல என்பதை மனிதன் நூற்றாண்டுகளாக நிரூபித்திருக்கிறான். என்றபோதிலும் கடவுளின் நம்பத்தக்க வாக்கை கவனியுங்கள். [2 பேதுரு 3:13 வாசிக்கவும்.] ஆகையால் ஒரு புதிய பூமியைப் பற்றிய கடவுளின் நிச்சய வாக்கு உண்மையில் நிறைவேறும்.” பின்பு நாம் புரோஷுர்களில் ஒன்றை வாசிக்கும்படி வீட்டுக்காரரை உற்சாகப்படுத்தலாம். “இதோ!” புரோஷுரை நாம் உபயோகித்தால், பக்கம் 30, பாரா 58-ல் குறிப்பிட்டுள்ளதை வீட்டுக்காரரின் கவனத்துக்கு திருப்பலாம். அரசாங்கம் புரோஷுரை அளிக்கும் போது, பக்கம் 3, பாரா 1-ல் உள்ளதை நாம் சிறப்பித்துக் காட்டலாம். பூமியில் வாழ்க்கை புரோஷுரின் அட்டைப் படம் கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது, சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு பொருந்துகிறது. தெய்வீக நாமம் புரோஷூரில் பக்கம் 31, பாரா 3-ல் உள்ள விஷயங்களும் உபயோகிக்கப்படலாம்.
7 நற்செய்தியோடு நம் பிராந்தியத்தை பொறுமையாகவும் முழுமையாகவும் செய்து முடித்தோமானால், அது நமக்கு செவி கொடுத்துக் கேட்பவர்களுக்கு இரட்சிப்பில் விளைவடையும். (1 தீமோ. 4:16) காலம் கடந்து செல்கிறது! ஆகையால், இந்த இரட்சிப்பின் செய்தியை பிரசங்கிப்பதில் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருக்கையில், நாம் பொறுமையைக் கையாண்டு முழுமையான சாட்சி பகருவோமாக.