நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பகுத்தறிவுடன்
1 ஏவப்பட்ட ஒரு நீதிமொழி சொல்கிறது: “புத்தியைக் (பகுத்தறிதலை, NW) காக்கிறவன் நன்மையடைவான்.” (நீதி. 19:8) இந்த வார்த்தைகளின் ஞானம் உண்மையென நம்முடைய பிரசங்க வேலையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பகுத்தறிதலையும், சாதுரியத்தையும் உபயோகிப்பதன் மூலம் அநேக பிரஸ்தாபிகள் சம்பாஷணை நிறுத்தங்களை மேலுமதிகமாக சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளாக மாற்றியிருக்கின்றனர். அல்லது பின்னால் ஒரு சமயம் சாட்சி கொடுப்பதற்கு ஓர் அடிப்படையையாவது போட்டு விட்டு வந்திருக்கின்றனர். இது எவ்வாறு செய்யப்படலாம்?
சம்பாஷணை நிறுத்தங்களை கையாளுவது
2 “நான் அதிக வேலையாயிருக்கிறேன்” என்று சொல்லும் ஜனங்களை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். வீட்டுக்காரர் உண்மையிலேயே அதிக வேலையாயிருக்கிறாரா அல்லது ஒரு நீண்ட கலந்தாலோசிப்பில் உட்பட்டு விடாமல் இருக்க அவர் இதை வெறுமென சொல்கிறாரா? பகுத்தறிதல் தேவைப்படுகிறது. அவர் உண்மையிலேயே அதிக வேலையுள்ளவராக இல்லாமல் இருப்பதாக தெரிந்தால், இந்தச் சம்பாஷணை நிறுத்தத்தை மேற்கொள்ள நாம் முயற்சி செய்யலாம். “அப்படியென்றால் நான் சுருக்கமாகச் சொல்கிறேன்” என்று நாம் சொல்லலாம். அதற்குப் பின்பு, நம்முடைய சம்பாஷணையை கட்டுப்படுத்துவதற்கு நாம் செய்த ஒப்பந்தத்தை மனதில் வைத்தவர்களாய் நாம் கலந்தாலோசிக்க விரும்பினதை சுருக்கிக் கூறலாம். நம்முடைய கரிசனை மற்றும் அக்கறை–எழுப்பக்கூடிய குறிப்புகளின் விளைவாக அப்போதே கலந்தாலோசிப்பை தொடர்வதற்கான விருப்பத்தை அந்த நபர் ஒருவேளை தெரிவிக்கலாம்.
3 நீங்கள் அணுகும் நபர் உண்மையிலேயே அதிக வேலையுள்ளவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எளிதில் அவர் வேண்டாம் என்று சொல்வதை நாம் விரும்பாவிட்டாலும், நாம் வற்புறுத்தி விடாப்பிடியாக இருந்தோமென்றால் ஒரு சாதகமற்ற கருத்துப் பதிவை நாம் விட்டு வருவோம். சமையல் பாத்திரம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்காரர் கதவண்டை வந்தால், உணவு தயாரிக்கப்படும் வாசனையை நாம் முகர்ந்தால், அவள் உண்மையிலேயே அதிக வேலையுள்ளவளாக இருக்கிறாள் என்பது தெரிகிறது. ஆகையால் நல்ல பகுத்தறிதலும் நல்ல நிதானிப்பும் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் சம்பாஷணையில் விடாப்பிடியாக இருப்பது கரிசனை காண்பிப்பதாய் இருக்காது. சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு வீட்டுக்காரரிடம் ஒரு பத்திரிகையையோ அல்லது துண்டுப்பிரதியையோ விட்டுவருவது, மேலும் பின்னர் திரும்பி வந்து சந்திப்பதாக சொல்லிவிட்டு வருவது, எவ்வளவு மேலானதாக இருக்கும். இது அதிக சாதகமான பதிவை ஏற்படுத்தும், அடுத்த முறை ஒரு சாட்சி சந்திக்கும் போது ஒரு சிறந்த சாட்சி கொடுக்கப்படலாம்.
நபரின் மனநிலைக்குப் பிரதிபலித்தல்
4 வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் செல்லும் போது முரட்டுத்தனமாக இருக்கும் நபர்களை சில சமயங்களில் நாம் சந்திக்கலாம். அந்தச் சமயத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும்? நீதிமொழிகள் 17:27 புத்திமதி கொடுக்கிறது: “விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.” என்னே ஒரு சிறந்த புத்திமதி! அக்கறையை தெரிவிக்கும் ஒரு கனிவான குரல் அப்பேர்ப்பட்ட நபரை தளர்ந்த நிலைக்கு வரச்செய்யும். மேலும், நாம் சாதுரியமாக அவருக்கு அக்கறையாய் இருக்கும் ஒரு பிரச்னையைக் குறித்து அவர் எடுத்து சொல்லுமாறு செய்தால் அது அவரது எதிர்க்கும் மனப்பான்மையை தணியச் செய்யலாம். அவர் சம்பாஷணையைக் குறுக்கிட்டு குறைத்தாலும், நம்முடைய கனிவான பிரதிபலிப்பு யெகோவாவின் சாட்சிகளின் வேலையை பற்றி அவர் மேலான மனநிலையைக் கொண்டிருக்கச் செய்யும். அது ஒரு சிறந்த சாதனையாக இருக்கும். ஒரு வீட்டுக்காரர் கோபமடைந்து நிலைகுலைந்து போவரேயானால், அமைதியாக அவ்விடத்தை விட்டுச் செல்வது சிறந்ததாயிருக்கும். மற்றொரு சமயம் அவருக்கு சாட்சி கொடுக்க முயற்சி செய்யலாம்.
5 தர்க்கம் செய்கிறவர்களாயிருந்தாலும், உண்மையுள்ளவர்களாயிருக்கும் ஆட்கள் இருக்கின்றனர். இப்பேர்ப்பட்ட சூழ்நிலைமைகளில், அவர்களோடு சம்பாஷணையைத் தொடருவது நம்முடைய பொறுமைக்கு ஓர் உண்மையான பரீட்சையாயிருக்கும். ஆனால் நாம் பகுத்தறிதல் உள்ளவர்களாயிருந்தால், வீட்டுக்காரர் அதிக பலமாக ஒரு வித்தியாசமான எண்ணத்தை எடுத்துச் சொல்கிறார் என்பதற்காக அவருக்கு அக்கறை இல்லை என்ற முடிவுக்கு நாம் வர மாட்டோம். அவர் ஏன் அவ்வாறு நம்புகிறார் என்பதை முயற்சி செய்து கண்டுபிடிப்பதற்கு சாதுரியமான கேள்விகளை நாம் கேட்கலாம். அதற்குப் பின்பு, அந்தப் பொருளின் பேரில் பைபிள் என்ன சொல்கிறது என்பதை அவரிடம் காண்பியுங்கள். (நீதி. 20:5) அவருடைய பிரதிபலிப்பை அடிப்படையாகக் கொண்டு, சம்பாஷணையை தொடருவது அனுகூலமானதாக இருக்குமா என்பதை நாம் தீர்மானிக்கலாம்.
6 நேரமும் சூழ்நிலைமைகளும் ராஜ்ய செய்தியினிடமாக ஒரு வீட்டுக்காரரின் மனநிலையை மாற்றும் என்பதை பகுத்தறிதலுள்ள ஒரு பிரஸ்தாபி உணர்கிறார். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, அவருடைய பிரதிபலிப்பு வித்தியாசமானதாக இருக்கலாம். அந்த வீட்டுக்காரரை கடைசியாக நாம் சந்தித்த போது அவர் பிரதிபலித்த விதத்தை வைத்துக்கொண்டு, இப்போதும் நமக்கு எதிர்மறையான பிரதிபலிப்பு கிடைக்கும் என்று ஊகம் செய்து கொள்ளாதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும்.
7 ஒரு சம்பாஷணையை நாம் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிப்பது எளிதானதல்ல. என்றபோதிலும், கற்பிக்கும் திறமையை வளர்ப்பதன் மூலம், பகுத்தறிதலோடு நற்செய்தியை அறிமுகப்படுத்துவதில் நாம் அதிக திறம்பட்டவர்களாக ஆவோம். நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவை நோக்கியிருப்போம்.—1 கொரி. 3:6; தீத்து 1:9.