ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... பேச்சை நிறுத்த முயலுபவருக்குப் பதிலளித்தல்
ஏன் முக்கியம்? இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். பேரழிவு வரப்போவது உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. பாதுகாப்பான இடத்திற்குப் போனால்தான் எல்லோரும் தப்பிக்க முடியும். பக்கத்து வீட்டுக்காரரிடம் தகவல் சொல்லப் போகிறீர்கள். ஆனால், “வேலை இருக்கிறது, அப்புறம் பேசலாம்” என்று தட்டிக்கழித்து விடுகிறார். எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா? எப்படியாவது விஷயத்தை புரிய வைக்கத்தானே முயற்சி செய்வீர்கள்! ஊழியத்திலும் இதேதான் நடக்கிறது. உயிரைக் காப்பாற்ற வந்திருக்கிறோம் என்பது புரியாமல், ஜனங்கள் நம்மை அலட்சியப்படுத்தலாம். ஒருவேளை, அவர்கள் வேலையாக இருக்கலாம். (மத். 24:37-39) வதந்திகளை நம்பி நம்மைப் பற்றி தப்புக்கணக்குப் போட்டிருக்கலாம். (மத். 11:18, 19) கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்களில் நாமும் ஒருவர் என்று நினைக்கலாம். (2 பே. 2:1, 2) எனவே, ஒருவர் ஆர்வம் காட்டாவிட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் அவரிடம் தொடர்ந்து பேச நாம் முயற்சி செய்ய வேண்டும்.
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
பேச்சை நிறுத்த முயலும் வீட்டுக்காரரை சந்தித்திருந்தால், அங்கிருந்து வந்தபிறகு, அவரிடம் வேறு எப்படிப் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதை உங்களுடன் ஊழியம் செய்பவரோடு கலந்துபேசுங்கள்.