மார்ச் 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 115; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 12 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 40-42 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 41:1-16 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மரணமடைந்த மற்றவர்கள் பூமியில் எப்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?—நியாயங்காட்டி பக். 338 பாரா 1–பக். 339 பாரா 2 (5 நிமி.)
எண் 3: அபியூ—பேரும் புகழும் உள்ளவர்கள்கூட கீழ்ப்படியாமல் போனால் தண்டனை கிடைக்கும்—யாத். 24:1, 9-11; 28:1, 40-43; 29:10-46; 30:26-38; லேவி. 8:1-3, 13-36; 10:1-7; எண். 3:2-4; 1 நா. 24:1, 2 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: பலன் தரும் குடும்ப வழிபாடு. ஒரு குடும்பத்தைப் பேட்டி எடுங்கள். குடும்ப வழிபாட்டில் என்ன செய்கிறார்கள்? எதைப் பற்றி பேசுவது என்பதை எப்படித் தீர்மானிக்கிறார்கள்? jw.org-ஐ எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? குடும்ப வழிபாடு அவர்களுடைய ஊழியத்திற்கு எப்படி உதவியிருக்கிறது? அதைத் தவறாமல் நடத்த என்ன செய்கிறார்கள்? இதிலிருந்து எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்?
15 நிமி: “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... பேச்சை நிறுத்த முயலுபவருக்குப் பதிலளித்தல்.” கலந்தாலோசிப்பு. பேச்சை நிறுத்தும் இரண்டு அல்லது மூன்று சூழ்நிலைகளைச் சிந்தியுங்கள். அதற்கு எப்படிப் பதிலளிக்கலாம் என்று கேளுங்கள். ஏப்ரல் 7-ல் துவங்கும் வாரத்தில் சபையார் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதை ஞாபகப்படுத்துங்கள்.
பாட்டு 97; ஜெபம்