தேவராஜ்ய செய்திகள்
கொலம்பியா: ஞாபகார்த்த நாளுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை 2,05,355 என்ற புதிய உச்சநிலையை அடைந்தது, இது சென்ற வருடத்தைவிட 23,000 அதிகமாயிருந்தது. ஏப்ரல் மாதத்தில் 48,774 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையோடு இதை ஒப்பிடுகையில், ஆஜரானவர்களில் 76 சதவீதம் அக்கறை காண்பிக்கும் ஆட்களாய் இருந்தனர்.
கிரீஸ்: 24,504 பிரஸ்தாபிகள் என்ற ஏப்ரல் மாத அறிக்கை ஒரு புதிய உச்சநிலையாய் இருந்தது, 1,516 ஒழுங்கான பயனியர்கள் என்ற புதிய உச்சநிலையும் இருந்தது.
ஹங்கேரி: ஏப்ரல் மாதத்தில் 11,296 பிரஸ்தாபிகள் 8,084 வீட்டு பைபிள் படிப்புகள் அறிக்கை செய்தனர்.
ஃபிலிப்பீன்ஸ்: ஏப்ரல் 13-ம் தேதி புதிய கிளைக்காரியாலய வசதிகளின் பிரதிஷ்டை நடைபெற்றது, 1,718 பேர் ஆஜராயிருந்தனர். அடுத்த நாள் ஒரு விசேஷ பேச்சு ஆறு இடங்களில் கேட்கப்பட்டது, 78,501 பேர் ஆஜராயிருந்தனர். ஏப்ரல் மாதத்தின் போது ஃபிலிப்பீன்ஸ் 1,10,225 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது.