தற்போதைய சம்பவங்களின் முக்கியத்துவத்தை மதித்துணர்தல்
1 “இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறது.” (1 கொரி. 7:31) விரைவாக நடந்துகொண்டிருக்கும் தற்போதைய சம்பவங்களில் இது பிரதிபலிக்கப்படுகிறது. யெகோவாவின் அமைப்புக்குள் நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றோடும் சேர்த்து காண்கையில், இது உங்களுக்கு தனிப்பட்டவிதமாய் எதை அர்த்தப்படுத்துகிறது?—லூக். 21:28.
2 இந்த முழு பொல்லாத காரிய ஒழுங்கு முறையும் அதனுடைய கடைசி நாட்களில் இருக்கிறது என்பதை இந்த இருபதாம் நூற்றாண்டில் பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றம் உறுதி செய்கிறது. (மத். 24:3–14; லூக். 21:7–11) “இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு சொன்னார். (லூக். 21:32) உங்களுடைய பிராந்தியத்தில் யெகோவாவின் பக்கத்தில் இன்னும் நிலைநிற்கை எடுக்காத ஜனங்களுக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நீங்கள் மதித்துணருகிறீர்களா? அப்படி செய்தால், உங்களுடைய வெளி ஊழியத்தில் இது என்ன பாதிப்பை கொண்டிருக்கிறது?—லூக். 21:34–36.
3 நேரம் இருக்கும் போது மற்றவர்களுக்கு உதவுங்கள்: நற்செய்தியை அறிவிப்பதற்கு சாதகமான நிலைமைகள் இருக்கும் போத அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு இயேசு தம் சீஷர்களை ஊக்குவித்தார். (யோ. 9:4) “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கொலாசெ பட்டணத்தில் இருந்த சகோதரர்களை ஊக்குவித்தபோது அப்போஸ்தலனாகிய பவுல் இதே அறிவுரையை எதிரொலித்தார்.—கொலோ. 4:5.
4 காலத்தை வாங்குங்கள் என்ற அப்போஸ்தலனின் புத்திமதிக்கு சிலர் செவி கொடுத்து ஒழுங்கான பயனியர்களாக ஆகியிருக்கின்றனர். அநேக இளைஞர்கள் பள்ளியில் இருக்கும் போத ஒழுங்கான பயனியர் சேவையை எடுத்துக் கொண்டிருக்கின்றனர், அவ்வாறு செய்கையில் நல்ல வெற்றியையும் அடைந்திருக்கின்றனர். இன்று நடந்துகொண்டிருக்கும் காரியங்களின் முக்கியத்துவத்தையும் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் எதிர்காலத்துக்கான பிரகாசமான நம்பிக்கையையும், வகுப்பு தோழர்கள் புரிந்து கொள்ள உதவி செய்வதற்கும் பள்ளியில் இருக்கும் இளைஞர்கள் தகுதியான நேரத்தை வாங்கலாம்.—பிர. 12:1.
5 நவம்பர் மாதத்தின் போது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விழித்தெழு! பத்திரிகையை சிறப்பித்துக் காட்டுவதன் மூலம் வெளி ஊழியத்தில் நம்முடைய நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தலாம். இந்தப் பிரசுரம் தற்போதைய சம்பவங்களின் உண்மையான அர்த்தத்துக்குள் உட்பார்வையை கொடுக்கிறது. வீட்டுக்கு வீடு வேலை செய்யும் போது இதை எல்லாருக்கும் அளியுங்கள். பள்ளி தோழர்களுக்கு அல்லது நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள ஜனங்களுக்கு அளிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் அறிந்திருக்கும் ஜனங்களுக்கு குறிப்பாக அக்கறையாயிருக்கும் பொருள்களை சிறப்பித்துக் காட்டுங்கள். உதாரணமாக அக்டோபர் 8, 1991, ஆங்கில விழித்தெழு!-வில் பிள்ளைகள் துர்ப்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றிய கட்டுரைகள் இருக்கின்றன. இந்தப் பொருள் அநேக ஜனங்களுக்கு கவனிப்பிற்குரிய விஷயமாகும்.
6 தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் எவ்வாறு உபயோகிக்கப்படலாம்? உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, நீங்கள் வீட்டுக்காரரை இவ்வாறு கேட்கலாம்: “இன்று நாம் ஏன் சலிப்பூட்டும் நிலைமைகளை எதிர்ப்படுகின்றோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” அவருடைய பிரதிபலிப்புக்கு பிறகு, நீங்கள் இவ்வாறு கூடுதலாக சொல்லலாம்: “அநேகருக்கு வாழ்க்கை நம்பிக்கையற்றதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது என்பதை பைபிள் ஒப்புக்கொள்கிறது. பிரசங்கி 2:17-ல் இங்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். [வாசியுங்கள்.] இங்கு சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? [பிரதிபலிப்புக்காக அனுமதியுங்கள்.] அநேக பிரச்னைகளோடு போரடிக்கொண்டிருக்கும் ஒரு நபருக்கு எது ஆறுதலளிக்கும் என்று நீங்கள் சொல்வீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] வாழ்க்கையின் பேரில் ஓர் உடன்பாடான நோக்குநிலையை நமக்கு கொடுக்கும் ஒரு வேதவசனத்தை இங்கே பாருங்கள். [சங்கீதம் 37:39, 40-ஐ வாசியுங்கள்.] இதன் காரணமாகத்தான் யெகோவாவின் சாட்சிகள் பைபிள் கல்வியை உற்சாகப்படுத்துகின்றனர். உதாரணமாக, எங்களுடைய சமீபத்திய விழித்தெழு! ஆங்கில பத்திரிகையில் சிந்திக்கப்பட்ட பொருளை கவனியுங்கள்.” பின்பு, சந்தாவை அளியுங்கள். சந்தா ஏற்றுக்கொள்ளப்படாதபோது பத்திரிகைகளை அளிக்க முயற்சி செய்யுங்கள்.
7 யெகோவாவை சேவிப்பதில் கிளர்ச்சியடைய செய்யும் சமயங்கள் இவை என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய சம்பவங்களின் உண்மையான அர்த்தத்தை இன்னுமதிகமான உண்மை மனதுள்ள நபர்கள் காண்பதற்கு உதவி செய்ய இந்த மாதத்தில் சந்தர்ப்பங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்ள இந்த உண்மை நம்மை உந்துவிக்கட்டும்.