பயனியர் ஊழியம்—மிகுந்த பலன்களைக்கொண்டுவரும் ஒரு சேவை
1 யெகோவா நாம் களிகூரவேண்டுமென்றும் நம்முடைய எல்லாக் கடின உழைப்பின் பலனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். (பிர. 5:18) நாம் ஈடுபடக்கூடிய அரோக்கியமான வேலை ராஜ்ய பிரசங்கிப்பும் சீஷரை உண்டுபண்ணுவதுமாகும். பவுல் தீமோத்தேயுவுக்குப் பின்வரும் அறிவுரை கூறினார்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்று.” (2 தீமோ. 4:5) பவுல் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார். பவுலின் வார்த்தைகள் இன்று நாம் நம்முடைய ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு ஈடுபட நம் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது. சிலருக்கு, முழு ஆத்தும சேவை ஒரு ஒழுங்கான பயனியராக சேவிப்பதை ஒருவேளை உட்படுத்தலாம். உங்களுடைய சூழ்நிலைமைகள் முழு நேர ஊழியத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள உங்களை அனுமதிக்குமா என்று நீங்கள் ஏன் ஜெபசிந்தையுடன் சிந்திக்கக்கூடாது?
2 உடன்பாடான செயல் தேவைப்படுகிறது: பயனியர் வேலைக்குள் செல்ல நம்முடைய ஜெபங்களுக்கு இசைய தீர்மானமான படிகளை எடுப்பது தேவைப்படுகிறது. யெகோவாவின் சேவைக்கு இருதயப்பூர்வமான விருப்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதோடு ஜனங்கள் பேரில் அன்பைக் கொண்டிருங்கள். வெளி ஊழியத்தில் உங்கள் வேலையை அதிகரியுங்கள், மறு சந்திப்புகளையும் பைபிள் படிப்புகளையும் அதிகரியுங்கள். நடைமுறையான ஓர் அட்டவணையை உருவாக்குவதில் வேலை செய்யுங்கள்; நிலைமைகளை உண்மையில் உள்ளபடி காணுங்கள். மூப்பர்களிடமிருந்தும் பயனியர்களிடமிருந்தும் ஆலோசனைகளைக் கேளுங்கள். பிரசங்க வேலையில் பங்குகொள்வதற்கு நன்கு சிந்திக்கப்பட்ட நடைமுறையான அட்டவணையை உறுதியாய்க் கடைபிடியுங்கள். சுய சிட்சை, முயற்சி, தொடங்குவதில் துணிவு, மன உறுதி ஆகியவை அவசியமாயிருக்கின்றது. (1 கொரி. 9:23, 25, 27) இவை சமீப மாதங்களில் பயினியர் சேவையில் சேர்ந்திருப்பவர்கள் எடுத்திருக்கும் உடன்பாடான படிகளில் சில.
3 திட்டவட்டமான இலக்குகளை வைப்பதும், அவற்றை அடைவதன் பேரில் ஊக்கமாக உழைப்பதும் நம்முடைய திறமைகளைச் செம்மையாக்க முயற்சிக்கையில் நம்முடைய பிரசங்க வேலையில் நாம் படிப்படியாக முன்னேற நமக்கு உதவி செய்யும். வீடுகளில் நாம் கொடுக்கும் முன்னுரைகளை அல்லது எதிர்ப்புகளைக் கையாளும் விதத்தை நாம் மேம்படுத்த முடியுமா? கிடைக்கக்கூடிய எல்லாப் பிரசுரங்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? படிப்படியாக முன்னேறிக்கொண்டே செல்லும் ஒரு பைபிள் படிப்பை நாம் நடத்துகிறோமா? பின்னர், ஒழுங்கான பயனியர் சேவை செய்யலாம் என்ற எண்ணத்தோடு இப்போது நாம் துணைப்பயனியர் சேவை செய்ய ஆரம்பிக்கலாமா? இலக்குகள் நடைமுறையானதாக இருக்க வேண்டும். நம்மால் நிறைவேற்ற முடிவதற்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவது நம்முடைய திறம்பட்ட தன்மையை மேம்படுத்தும். நமக்கு அதிக திருப்தியும் கொண்டுவரும்.—1 தீமோ. 4:15, 16.
4 ஒரு பலன் தரும் வாழ்க்கை முறை: சரியான உள்நோக்கத்தோடு செய்யப்படும் பயனியர் சேவையும் ஆவிக்குரிய முன்னேற்றமடைய வேண்டும் என்ற விருப்பமும் அனேக நன்மைகளைக் கொண்டுவருகிறது. யெகோவாவின் பேரில் அதிகமாய்ச் சார்ந்திருக்க நாம் கற்றுக்கொள்கிறோம். கடவுளுடைய வார்த்தையைக் கையாளுவதில் அதிகத் திறமை அதை ஊழியத்தில் ஒழுங்காக உபயோகிப்பதிலிருந்து வருகிறது. சபையின் மேல் ஆரோக்கியகரமான விளைவை ஏற்படுத்துகிறது, மற்றும் நம்முடைய வைராக்கியமான முன்மாதிரியின் காரணமாக மற்றவர்கள் ஊழியத்தில் பெரும்பங்கைக் கொண்டிருக்க உற்சாகப்படுத்தப்படுவார்கள். வாழ்க்கையின் பேரில் ஆவிக்குரிய மனநிலையைப் பெற்றுக்கொள்ள பயனியர் சேவை நமக்கு உதவும். உலகப்பிரகாரமான புகழார்வம், ஆசைகள், கூட்டுறவுகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
5 இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத். 9:37, 38) இயேசுவின் நாளில் இருந்ததைவிட வேலையாட்களுக்கான தேவை இப்போது இன்னும் அதிகம் இருக்கிறது. இந்த அவசரமான ஜீவனைக் காக்கும் வேலையில் நாம் முழு பங்கைக் கொண்டிருக்கும் வாய்ப்பைப் பயனியர் சேவை அனுமதிக்கிறது. நம்முடைய மகத்தான சிருஷ்டிகரின் முழு நேர ஊழியத்தில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை உபயோகிப்பதிலிருந்து வரும் மன நிறைவுக்கும் திருப்திக்கும் சமமாக எதுவும் இருக்க முடியாது.—நீதி. 10:22.