“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்துகொண்டிருங்கள்”
1 இயேசு தன் மரணத்தின் ஆண்டு நிறைவு நாளை ஆசரிக்கும்படி தன்னைப் பின்பற்றினவர்களுக்குக் கட்டளையிட்டார். (லூக்கா 22:19) மனிதவர்க்கத்தின் சார்பாக இயேசு செய்த மிகப் பெரிய பலியின் நினைப்பூட்டுதலாக இந்த ஆசரிப்பு சேவிக்கும். இந்த வருடம் உலக முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்தத்தை ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமையன்று சூரிய மறைவுக்குப் பின்னர் ஆசரிப்பர்.
2 தனிப்பட்ட தயாரிப்பு: இந்த முக்கியமான நிகழ்ச்சியின் பொருத்தமான ஆசரிப்புக்கு நாம் எவ்வாறு தயார் செய்யலாம்? இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும் ஜெப சிந்தையோடு திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வருவது ஒரு வழியாகும். தம்முடைய பரிபூரண மனித ஜீவனை பலியாக கொடுப்பதன் மூலம் அவர் மனிதவர்க்கத்தின் மீட்பராக ஆனார். (மத். 20:28) இந்த ஏற்பாட்டை ஒவ்வொருவரும் போற்றுவதற்கு உதவி செய்ய, எக்காலத்தில் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் என்ற புத்தகத்திலிருந்து அதிகாரங்கள் 112-116 வரை சிந்திக்கும்படி நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.
3 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த வருட ஞாபகார்த்த தினத்துக்கு முன் நம்முடைய பைபிள் வாசிப்பு பைபிள் புத்தகமாகிய மாற்குவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்கள் அடங்கியதாயிருக்கிறது. இந்த விசேஷ பைபிள் வாசிப்பு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, ஏப்ரல் 12-17, ஆறு-நாளைய காலப்பகுதிக்கு அட்டவணையிடப்பட்டிருக்கிறது, இப்படிப்பட்ட ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சம்பவங்களின் பேரில் தியானிப்பதற்கு போதுமான நேரம் எடுத்துக்கொள்ள நாம் அனைவரும் விரும்புவோம்.
4 மூப்பர்கள் செய்ய வேண்டிய முழுமையான தயாரிப்பு: ஞாபகார்த்த நாள் அழைப்பிதழ்கள் இருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஆஜராகப் போகும் அனைவருக்கும் போதுமான இருக்கைகள் இருக்கின்றனவா? ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் மன்றத்தை உபயோகிக்க வேண்டியதாக இருந்தால், ஞாபகார்த்த தினத்தை ஆசரிப்பதற்கு ஒவ்வொரு சபைக்கும் போதுமான நேரம் இருப்பதற்கு ஒழுங்கான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. அட்டென்டென்டுகளாக சேவிப்பவர்களுக்கு அவர்களுடைய வேலைகளைப் பற்றிய தகவலை கொடுக்க வேண்டும். ஆஜராகும் புதிய நபர்களை வரவேற்பதில் அவர்கள் முந்திக்கொள்ள விரும்புவர். தகவலை தெளிவாகவும், வேதப்பூர்வமாகவும் அளிப்பதற்கு நல்ல தகுதிவாய்ந்த பேச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அடையாளச் சின்னங்களை அனுப்புவதற்கு உத்தரவாதமுள்ள மூப்பர்களையாவது அல்லது உதவி ஊழியர்களையாவது நியமியுங்கள். புளிப்பில்லாத அப்பமும், கலப்படமற்ற செந்நிற திராட்சரசமும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதலான நினைப்பூட்டுதல்களுக்கு, ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1985 இதழில் பக்கம் 19-ஐ பாருங்கள்.
5 முழுமையாக முன்கூட்டியே தயாரிப்பதன் மூலம், இந்த விசேஷ சமயத்தின் முக்கியத்துவத்தை நாம் முழுவதுமாக போற்றுகிறோம் என்பதையும், கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்தத்தை இயேசுவின் கட்டளைக்கு இணக்கமாக ஆசரிக்க விரும்புகிறோம் என்பதையும் நாம் வெளிக்காட்டுவோம்.—1 கொரி. 11:23-26.
[பக்கம் 3-ன் பெட்டி]
1. ஆசரிப்பின் இடம், சரியான நேரம் ஆகியவை பேச்சாளர் உட்பட அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதா? பேச்சாளருக்கு போக்குவரத்து வசதி இருக்கிறதா?
2. அடையாளச் சின்னங்களை தயாரிப்பதற்கு திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?
3. யாராவது ஒருவர் ஒரு சுத்தமான மேசை துணியும், தேவையான கோப்பைகளும், தட்டுகளும் கொண்டு வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?
4. ஞாபகார்த்த தினத்துக்கு முன் மன்றத்தை சுத்தம் செய்வதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? மற்றொரு சபை மன்றத்தை அந்த மாலை உபயோகிக்கப் போகிறது என்றால், முதல் கூட்டம் முடிந்தவுடன் மன்றத்தை இலேசாக சுத்தம் செய்வதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
5. அட்டென்டென்டுகளும், பரிமாறுபவர்களும் நியமிக்கப்பட்டு விட்டனரா? ஞாபகார்த்த தினத்துக்கு முன்பு அவர்களுடைய வேலைகளைப் பற்றி சிந்திக்க அவர்களோடு ஒரு கூட்டம் அட்டவணையிடப்பட்டுள்ளதா? எப்போது? அனைவருக்கும் பரிமாறப்பட்டுவிட்டதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள என்ன முறை கையாளப்படும்?
6. வயதான, வியாதியாயிருக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்வதற்கு ஏற்பாடுகள் முழுமையாய் செய்யப்பட்டுவிட்டதா? நோய் காரணமாக ராஜ்ய மன்றத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?