நினைவு ஆசரிப்பு தினத்துக்கு ஆயத்தமாக
அனுசரிப்பு நடக்கக்கூடிய சரியான நேரமும் இடமும் பேச்சாளர் உட்பட எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதா? பேச்சாளருக்கு போக்குவரத்து வசதி இருக்கிறதா?
சின்னங்களை எடுத்துவந்து சரியான நேரத்தில் அதற்குரிய இடத்தில் வைக்கத் திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?
ஒரு சுத்தமான மேசைவிரிப்பைப் போட்டு, போதிய கிளாஸ்களும் தட்டுகளும் மேசையில் வைக்க முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?
முன்கூட்டியே ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்ய என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
துணையாளர்களும் பரிமாறுபவர்களும் நியமிக்கப்பட்டனரா? நினைவு ஆசரிப்புத் தினத்துக்கு முன்பு அவர்கள் செய்யவேண்டிய வேலைகளை விமர்சிக்க ஒரு கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதா? எப்போது? எல்லாருக்கும் சிறந்த விதத்தில் பரிமாறுவதை உறுதிசெய்ய என்ன முறை பின்பற்றப்படும்?
முதிர்வயதான, உடல்நலம் குன்றிய சகோதர சகோதரிகளுக்கு உதவ ஏற்பாடுகள் செய்தாகிவிட்டதா? அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் யாராகிலும் சபைக்கு வரமுடியாமல் படுக்கையிலிருந்தால் அவர்களுக்குப் பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?