காவற்கோபுரம் பத்திரிகையோடு நற்செய்தியை அறிவியுங்கள்
1 காவற்கோபுரம் உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால் இது நற்செய்தியை அளிக்கிறது. இதற்கு நேர் எதிர்மாறாக, அநேக உலகப்பிரகாரமான பிரசுரங்கள் கெட்ட, சோர்வூட்டும் செய்திகளை சிறப்பித்துக் காட்டுகின்றன. காவற்கோபுரம் உண்மையிலேயே புத்துணர்ச்சியூட்டும் ஒரு செய்தியை கொண்டிருக்கும் வித்தியாசமான பத்திரிகை என்பதை நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு காண்பிக்கலாம்?
2 பத்திரிகையில் பக்கம் 2-ல் உள்ள “காவற்கோபுரம் பத்திரிகையின் நோக்கம்” என்ற பகுதிக்கு அவர்களுடைய கவனத்தை நாம் திருப்பலாம். யெகோவா சர்வலோக பேரரசர் என்பதை மேன்மைப்படுத்துவது, பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் உலக சம்பவங்களின் பேரில் கவனம் செலுத்துவது, ஒடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆறுதலான செய்தியை அளிப்பது, நம்முடைய இரட்சிப்புக்காக கடவுளுடைய ஏற்பாடுகளில் விசுவாசத்தை பலப்படுத்துவது ஆகியவை அதன் குறிக்கோள் ஆகும் என்பதை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
3 காவற்கோபுரம் பத்திரிகையைக் குறித்து நம்முடைய குறிப்புகள் நம்ப வைக்கும் விதத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறதாய் இருக்கிறதா? நாம் சொல்லும் விஷயம் வெறும் கணநேரமே நீடித்திருக்கும் அக்கறையைத் தூண்டும் ஒரு கவர்ச்சியுள்ள சொற்றொடராக இருக்கக் கூடாது; அது சாரம் உடையதாய் இருக்க வேண்டும், அதிகமாக கற்றறிய வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்கும் நம்பிக்கையை தோற்றுவிக்க வேண்டும்.
4 தயாரிப்பு தேவைப்படுகிறது: ஒவ்வொரு பத்திரிகையையும் நாம் கவனமாக வாசிக்க வேண்டும், நம்முடைய பிராந்தியத்தை மனதில் கொண்டு பல்வேறு பிரசங்கங்களை ஆராய வேண்டும். மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கும் வேத வசனங்களை எடுத்துப் பார்ப்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலை மேம்படுத்துகிறது. இது சத்தியத்துக்கான நம்முடைய போற்றுதலை ஆழப்படுத்தும், மற்றவர்களோடு இதை பகிர்ந்து கொள்ள நம்மை உந்துவிக்கும். சத்தியம் நம்முடைய இருதயங்களில் இல்லையென்றால், வெளிப்படையாக பேசுவதற்கு குறைவான தூண்டுதலையே நாம் கொண்டிருப்போம்.
5 உடன்பாடான மனநிலையைக் கொண்டிருப்பது பொதுவாக சிறந்ததாக இருக்கிறது, கூடுமானவரை சந்தாவை அளியுங்கள். ஒரு மேலான உலகத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களின் ஒரு பெரிய தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பத்திரிகையாய் இது இருக்கிறது என்பதை அழுத்திக் காட்டுங்கள். உடனடியாக கொடுப்பதற்கு பணம் இல்லாததால் சந்தா பெற்றுக்கொள்ளவில்லையென்றால், வசதியான நேரத்தில் சந்தாவுக்கு ஏற்பாடு செய்ய மறுபடியும் சந்திக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். அளிப்பை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டால், இரண்டு பத்திரிகைகளையும் ஒரு புரோஷூரையும் சேர்த்து ரூ9-க்கு அளியுங்கள்.
6 அண்மையில் வெளிவந்த காவற்கோபுரம் இதழில் உள்ள கட்டுரைகளை நீங்கள் வாசிக்கும் போது, நீங்கள் வீட்டுக்காரரோடு கொண்டிருந்த முந்தைய கலந்தாலோசிப்புகளின் போது இப்படிப்பட்ட விஷயங்கள் அக்கறையை தூண்டியதை திரும்ப நினைவுபடுத்திப் பார்க்க முயற்சி செய்யுங்கள். கூடுதலான கலந்தாலோசிப்புக்கு அந்த இதழோடு திரும்ப சென்று சந்திக்க தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
7 இன்னும் எவ்வளவு காலம் எந்த அளவுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது நமக்குத் தெரியாது. என்றபோதிலும், நிறைவேற்றப்படுபவைகளில் காவற்கோபுரம் ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். இந்த ஏற்பாட்டை உபயோகித்து, ஊக்கமாக ‘யெகோவாவுடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கிப்பதில்’ நாம் அப்போஸ்தலர்களை பின்பற்ற வேண்டும்.—அப். 15:35.