ஞாபகார்த்த நாளைப் பின்தொடர்ந்து செயல்படுங்கள்
1 “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத். 20:28) இயேசு கிறிஸ்து மனிதவர்க்கத்துக்காக செய்ததை பூமியில் வாழ்ந்த வேறெந்த மனிதனாலும் செய்ய முடியவில்லை. அவருடைய வாழ்க்கை முறையின் மூலமும், வாதனை கழுமரத்தின் மீது அவரது இறுதி மரணத்தின் மூலமும், நித்திய ஜீவன் என்ற மிகப் பெரிய பரிசை பெற்றுக் கொள்ளும் வழியில் நாம் வழிநடத்தப்பட்டிருக்கிறோம். என்றபோதிலும், பெரும்பான்மையான ஜனங்கள் கிறிஸ்து செய்தவற்றுக்காக போற்றுதல் அற்றவர்களாய் இருக்கின்றனர்.
2 பத்து குஷ்டரோகிகளை இயேசு எதிர்ப்பட்ட ஒரு சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இயேசுவைக் கண்ட போது, “இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்டார்கள். (லூக். 17:13) அவர் அவர்கள் பேரில் இரக்கங் காட்டினார், நியாயப்பிரமாண சட்டத்தின்படி, ஆசாரியர்களிடம் சென்று காண்பிக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் வழியில் சென்று கொண்டிருக்கையில், பத்து குஷ்டரோகிகளும் குணமானார்கள்.
3 ஆனால் ஒரே ஒரு குஷ்டரோகி மட்டும் நன்றி தெரிவிப்பதற்காக இயேசுவிடம் திரும்பிச் சென்றான். மற்ற ஒன்பது பேரும்? தங்களுக்கு நல்லது செய்தவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே அவர்கள் தங்கள் வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். (லூக். 17:15-17) நாம் யாரைப் போன்று இருக்கிறோம்? திரும்பிச் சென்ற மனிதனைப் போல் இருக்க நாம் விரும்புகிறோம். அவனுக்கு மெய்யான போற்றுதல் இருந்தது. கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து நாம் அவ்வாறு தான் உணருகிறோமா?
4 நம்முடைய போற்றுதலை காண்பித்தல்: ஞாபகார்த்த தினத்துக்கு முன்பு இருக்கும் வாரத்தின் போது, பைபிளில் இருக்கும் குறிப்பிடப்பட்ட வசனங்களை வாசிக்கும்படி ஒவ்வொரு வருடமும் சங்கம் ஆலோசனை கொடுக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய 1992-ம் ஆண்டு நாட்காட்டி-யில் இந்த வருடத்துக்கான பைபிள் வாசிப்புகள் ஏப்ரல் 12-17 வரை உள்ள தேதிகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுவின் மரணத்துக்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் நடந்த இப்படிப்பட்ட சம்பவங்களை வாசிப்பதன் மூலமும், தியானிப்பதன் மூலமும் நீங்கள் உங்கள் போற்றுதலை காண்பித்தீர்களா?
5 நம்முடைய வெளி ஊழிய வேலை ஞாபகார்த்த தினத்துக்கான போற்றுதலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. பயனியர்களும் பிரஸ்தாபிகளும் ஏப்ரல் மாதத்தின் போதும் அதைத் தொடர்ந்து மே மாதத்தின் போதும் அதிகரிக்கப்பட்ட வெளி ஊழியம் செய்ய திட்டமிடுவதற்கு மூப்பர்கள் நன்கு-ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடுகள் செய்திருப்பர். இந்த மாதங்களின் போது அநேகர் துணைப் பயனியர் ஊழியத்தில் பங்கு கொள்கின்றனர். சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் 877 பேர் பங்கு கொண்டனர், மே மாதத்தின் போது 1052 பேர் பங்கு கொண்டனர். இந்த வருடத்தைப் பற்றியென்ன? மே மாதத்தில் நீங்கள் அவ்வாறு செய்ய முடியுமா? மறுபட்சத்தில், துணைப் பயனியர் ஊழியம் உங்களால் செய்ய முடியவில்லையென்றால், சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் அளவுக்கு பிரசங்க வேலையில் உங்களுடைய பங்கை அதிகரிக்க திட்டமிடுங்கள்.
6 மற்றவர்களில் போற்றுதலை வளருங்கள்: ஒவ்வொரு வருடமும் ஞாபகார்த்த ஆசரிப்பின் போது அநேக அக்கறை காண்பிக்கும் நபர்கள் நம்மோடு கூடிவருகின்றனர். உதாரணமாக, சென்ற ஏப்ரல் மாதம் ஞாபகார்த்த தினத்துக்கு உலக முழுவதும் ஆஜரான 1,06,50,158 நபர்களில் 63,70,000-க்கும் மேற்பட்டவர்கள் அக்கறை காண்பித்த நபர்களாய் இருந்தனர். அமைப்பில் வளர்ச்சிக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இது காண்பிக்கிறது.
7 ஞாபகார்த்த ஆசரிப்பைப் பின்தொடர்ந்து செயல்பட நாம் என்ன செய்யலாம்? அச்சமயத்தின் போது அநேக புதியவர்கள் நம்மோடு கூட்டுறவு கொண்டனர். அந்த ஆர்வம் அணைந்து போக அனுமதியாதீர்கள். விரைவில் திரும்ப சென்று சந்தியுங்கள். அக்கறை காண்பிக்கும் ஆட்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிசயமான நம்பிக்கையை சிறப்பித்துக் காட்டுவதற்கு நீங்கள் வெளிப்படுத்துதல் 7:9, 14-ஐ உபயோகிக்கலாம். பழைய உலகின் முடிவை தப்பிப்பிழைப்பவர்களிடமிருந்து என்ன பிரதிபலிப்பு எதிர்பார்க்கப்படுகிறது? திரும்பவும் வெளிப்படுத்துதல் 7:10-க்குத் திருப்பி, அனைவரும் ‘விசுவாசம் காண்பிக்க’ வேண்டிய தேவையையும், வருடத்துக்கு ஒரு முறை கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்த தினத்துக்கு வெறுமென ஆஜராவது மட்டும் போதாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.—யோ. 3:16.
8 கேள்விக்கிடமின்றி, ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்த தினம் ஒரு விசேஷ நிகழ்ச்சியாய் இருக்கிறது. அதற்காக முழுமையாக தயாரிப்பதன் மூலம், யெகோவாவும் கிறிஸ்துவும் நமக்காக செய்திருக்கும் எல்லாவற்றையும் நாம் உண்மையிலேயே போற்றுகிறோம் என்பதை நாம் காண்பிக்கிறோம். நம்முடைய பைபிள் மாணாக்கரிலும், மற்ற அக்கறை காண்பிக்கும் நபர்களிலும் இதே போற்றுதலை வளர்க்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவின் மீட்பின் ஏற்பாட்டில் விசுவாசம் வைக்கவும் இது அவர்களுக்கு உதவி செய்யும்.