மே உங்களுக்கு விசேஷ மாதமாக இருக்குமா?
1 மார்ச், ஏப்ரல் மாதங்களை ஞாபகார்த்த நாள் காலம் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுகிறோம். ஞாபகார்த்த நாள் ஆசரிப்பு ஆண்டின் இச்சமயத்தில் எப்போதும் நடைபெறுவதால், யெகோவாவின் ஜனங்கள் வெளி ஊழியத்தில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்கு தூண்டப்படுகின்றனர்.
2 ஏப்ரல் மாதத்தில் துணைப்பயனியர்களாக சேர்க்கப்பட்டவர்களில் சிலர் தொடர்ந்து செய்வர், மே மாதத்தின் போது இந்த விரிவாக்கப்பட்ட ஊழியத்தில் மற்றவர்கள் இவர்களோடு சேர்ந்து கொள்வர். நீங்கள் பங்குகொள்ளக்கூடுமானால், உங்களுடைய விண்ணப்பத் தாளை உடனடியாக கொடுக்க வேண்டும்.
3 பயனியர் ஊழியம் செய்ய முடியாதவர்களும் கூட தங்கள் வெளி ஊழியத்தை அதிகரிப்பதன் மூலம் மே மாதத்தை ஒரு விசேஷ மாதமாக ஆக்கலாம். நிச்சயமாகவே, செய்வதற்கு அதிகம் இருக்கிறது. சபை பிரஸ்தாபிகளும் பயனியர்களும் முழுக்காட்டப்படாத புதிய பிரஸ்தாபிகளை வெளி ஊழியத்தில் தங்களோடு வேலை செய்ய அழைக்கலாம்.
4 ஆஜராகும் புதியவர்களை வரவேற்பதற்கு விழிப்புள்ளவர்களாயிருப்பதன் மூலம், மற்றொரு பைபிள் படிப்பை நீங்கள் ஆரம்பிக்க முடியும். உங்களுடைய அதிகரிக்கப்பட்ட முயற்சிகளின் மீது யெகோவாவின் ஆசீர்வாதத்தால், உங்களுடைய ஊழியம் பலனளிப்பதாய் இருக்கும். மே மாதம் உங்களுக்கு ஒரு விசேஷ மாதமாக நிரூபிக்கும்.—சங். 34:8; நீதி. 10:22.