மறுசந்திப்புகளில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைஉபயோகியுங்கள்
1 “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான்.” அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறினார். (1 கொரி. 3:6) சீஷர்களை உண்டுபண்ணுவதில் முதல் இரண்டு படிகளுக்கான எளிய சுருக்கத்தை இந்த நான்கு வார்த்தைகள் கொடுக்கின்றன. மறுசந்திப்பு வேலை “நீர்ப்பாய்ச்சும் வேலை” என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. முதல் சந்திப்புக்கும், அந்த நபர் ஒரு முழுக்காட்டப்பட்ட சீஷராக ஆவதற்கும் இடையே உள்ள இன்றியமையாத இணைப்பாக அது இருக்கிறது. நாம் ‘அறிவை இறைப்பதற்கும்,’ காண்பிக்கப்பட்ட அக்கறையை விதையைப் போன்று கவனித்து வளர்த்து, அது வேர் கொண்டு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்படும் வரை, மறுசந்திப்பு வேலை நமக்கு உதவி செய்கிறது.—நீதி. 15:7.
2 என்ன சொல்வது என்பதைக் குறித்து நிச்சயமற்றவர்களாய் இருப்பதால் சிலர் ஒருவேளை அக்கறை காண்பித்த ஆட்களை திரும்பவும் சென்று சந்திப்பதற்கு தயங்குவர். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற நம்முடைய கைப்புத்தகம் இந்த நீர்ப்பாய்ச்சும் வேலையை செய்வதில் அதிக பிரயோஜனமுள்ளதாய் நிரூபித்திருக்கிறது. ஒழுங்காக அட்டவணையிடப்பட்ட பைபிள் படிப்புக்கு வீட்டுக்காரர் ஒத்துக் கொள்வதற்கு முன்பு, தொடர்ச்சியான, சுருக்கமான சந்திப்புகள் செய்ய வேண்டும். வேதாகம பொருள்களின் பேரில் முக்கிய குறிப்புகளை சுருக்கமாக நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் கொடுக்கிறது, அவைகளை வீட்டுக்காரரோடு கலந்தாலோசிக்கலாம். மறுசந்திப்புக்காக நன்கு தயாரியுங்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பின்வரும் ஆலோசனைகளை நீங்கள் உபயோகிக்கலாம்.
3 ஜெபம் என்ற பொருளின் பேரில் ஏப்ரல் 15, 1992, “காவற்கோபுரம்” இதழை நீங்கள் அளித்திருந்தீர்களானால், மறுசந்திப்பு செய்யும் போது நீங்கள் இந்தக் கேள்வியை கேட்கலாம்:
▪ “எது ஒரு நபரின் ஜெபங்களை கடவுள் ஏற்கத் தகுந்ததாக ஆக்கக்கூடும்?” வீட்டுக்காரர் பதில் சொல்வதற்காக நேரம் அனுமதித்து விட்ட பிறகு, உங்களுடைய நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை எடுத்து பக்கம் 293-க்குத் திருப்புங்கள். அந்தப் பொருளுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வேத வசனங்களில் சிலவற்றை அவரோடு கலந்தாலோசியுங்கள், புத்தகத்திலிருந்து நேரடியாக வாசிக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். அக்கறை இருப்பதை நீங்கள் கண்டுபிடித்தால், சந்தாவை அளியுங்கள்.
4 “நீங்கள் நினைப்பதை விட காலம் பிந்தி விட்டதா?” என்ற பொருளின் பேரில் உள்ள ஏப்ரல் 1, 1992 இந்திய மொழி “காவற்கோபுரம்” இதழை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நபரை மறுபடியும் சென்று சந்திக்கும் போது:
▪ அந்தக் கட்டுரையின் முடிவான பாராவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை வீட்டுக்காரர் சந்தேகமின்றி கவனித்திருப்பார் என்று குறிப்பிடுங்கள். ஒன்றாக சேர்ந்து வாசியுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 234-ல் உள்ள “கடைசி நாட்கள்” என்ற சொல்லின் விளக்கத்தோடு தொடருங்கள். நேரம் அனுமதிக்கும் அளவுக்கு முதல் பகுதியில் இருக்கும் சில குறிப்புகளை சிந்தியுங்கள். ஒரே சமயத்தில் எல்லா குறிப்புகளையும் சிந்திப்பதற்கு பதிலாக, அடுத்த முறை சிந்திப்பதற்காக பக்கம் 239-லிருந்து சில கேள்விகளை எழுப்புங்கள்.
5 மற்றொரு சந்தர்ப்பத்தில், “வாழ்க்கை—அதன் நோக்கம் என்ன?” என்ற ஏப்ரல் 22, 1992, விழித்தெழு! இதழை வீட்டுக்காரர் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
▪ “பூமியில் என்றென்றுமாக வாழ்வதற்கென மனித உடல் உருவமைக்கப்பட்டது என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா?” அல்லது, “உயிரோடிருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை மரித்தவர்கள் அறிவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” இப்படிப்பட்ட கேள்விகள் ஒருவேளை வீட்டுக்காரரின் அக்கறையைத் தூண்டும், ஏனென்றால் அவைகள் அவரை தனிப்பட்ட விதமாக பாதிக்கின்றன. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 247, 100 ஆகியவற்றில் இருக்கும் பதில்களோடு திரும்பவும் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
6 முதல் கலந்தாலோசிப்பு பூமியின் எதிர்காலத்தைக் குறித்து இருந்திருந்தால், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
▪ “பூமியை ஏதாவது ஒரு விதத்தில் அழிப்பதற்கு கடவுள் மனிதர்களை அனுமதிப்பாரா?” பிறகு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 44-5-க்குத் திருப்பி, வேதப்பூர்வ பதிலை கலந்தாலோசியுங்கள். அல்லது வீட்டுக்காரர் ஒருவேளை கேட்கலாம்: “கோடிக்கணக்கானோர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டால், அவர்கள் எல்லாரும் எங்கே வாழ்வர்?” இதற்கு பதில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 340-ல் நாம் காணலாம்.
7 எல்லா சத்தியங்களையும் ஒரே சமயத்தில் வீட்டுக்காரருக்குத் தெரிவிக்க முயற்சி செய்யாதீர்கள். அடுத்து வரும் சந்திப்புகளில் பதிலளிப்பதற்கு சில கேள்விகளை விட்டு வாருங்கள். கடவுளுடைய உடன் வேலையாட்களாக, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை திறம்பட்ட விதத்தில் உபயோகிப்பதன் மூலம் நடுகிற வேலையையும், நீர்ப்பாய்ச்சும் வேலையையும் நாம் திறமையுடன் செய்து முடிக்க விரும்புகிறோம். கடவுள் அதை வளரச் செய்வார் என்று நாம் உறுதியாயிருக்கலாம்.