பலன்தரும் மறுசந்திப்புகளை செய்யுங்கள்
1 “தேவனுக்கு உடன்வேலையாட்களா”க மறுசந்திப்புகள் செய்வது நம்முடைய ஊழியத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. (1 கொரி. 3:6-9) சத்தியத்தின் பேரில் ஏற்கெனவே அக்கறைக் காட்டிய நபரை நாம் மீண்டும் சென்று சந்திப்பதால், வீட்டுக்காரருடைய பிரதிபலிப்பைப் பற்றி நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அந்த நபருடைய கவனத்தை கவரும் பைபிள் விஷயத்தின் பேரில் கலந்தாலோசிப்பதற்கு நல்ல தயாரிப்பு நம் பங்கில் செய்யப்படும்போது அவர் மீது ஓர் உண்மையான தனிப்பட்ட அக்கறையை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை அது பிரதிபலிக்கும்.
2 திட்டவட்டமாய் எடுத்து சொல்லுங்கள்; சாதுரியமான கேள்விகளை கேளுங்கள்.
முதல் சந்திப்பில் எடுத்த குறிப்புகளைக் கொண்டு நீங்கள் இப்படியாக கேட்கலாம்:
◼ “பூமியை நீதியாய் அரசாளப்போகும் கடவுளுடைய வாக்குகளின் பேரில் நீங்கள் மேலுமாக யோசித்துப் பார்த்தீர்களா?”
நீங்கள் கேட்கக்கூடிய மற்றொரு கேள்வி:
◼ “பைபிளிலிருந்து நாம் சென்ற வாரம் கலந்தாலோசித்ததிலிருந்து கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக செய்யப்படும் உங்களுடைய ஜெபம் அதிக அர்த்தமுள்ளதாய் இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?”
இது போன்ற கேள்விகளை நாம் கேட்கையில் ஒரு சிநேகப்பான்மையான உணர்ச்சியை வெளிக்காட்டும் நம்முடைய முகநாடியும் நம்முடைய குரலும் உண்மையில் நாம் அவர் மீது அக்கறை காட்டுவதை வெளிக்காட்டுகிறது என்பதில் சந்தேகமேயில்லை.
3 பொறுமையாய் பேசுங்கள்; வீட்டுக்காரர் சொல்லும்போது கவனமாய் கேளுங்கள்: பதில் கொடுப்பதற்கு முன்பாக வீட்டுக்காரர் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் கவனமாய் கேட்டு, சொன்னதன் பேரில் ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போமேயானால், நாம் அவர் மீது தனிப்பட்ட விதத்தில் உண்மையில் அக்கறையுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை அது எடுத்துக்காட்டும். அவர் சொல்வதை பொறுத்து உங்களுடைய முதல் சந்திப்பில் பேசிய காரியத்தின் பேரில் ஒரு வேதப்பூர்வமான கருத்தை நீங்கள் எடுத்துக் கூறலாம். வீட்டுக்காரரை ஒவ்வொரு முறை நீங்கள் சென்று சந்திக்கையிலும் அவருக்கு ஏதாவதொன்றை பற்றி போதிக்க தயார்செய்து செல்லுங்கள். எதிர்பாராத ஒரு பொருளின் பேரில் கேள்வி எழுப்பப்பட்டால் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து அதைப் பற்றி எடுத்துப் பேச அவ்வாய்ப்பை உபயோகியுங்கள்.
4 மே 1, 1992 “காவற்கோபுர”த்தை நீங்கள் அளித்து வந்திருந்தால், இப்படியாக சொல்லலாம்:
◼ “சென்ற முறை, 1914-ம் ஆண்டை பற்றி நாம் பேசினோம். அந்த ஆண்டில் தொடங்கிய யுத்தம் அநேக அரசாங்கங்களில் மாற்றங்களை கொண்டுவந்தது. அது முதற்கொண்டு அநேக மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவ்வெல்லா மாற்றங்களும் அல்லது எந்த ஒரு மாற்றமும் மக்களுடைய தேவைகளை உண்மையிலேயே பூர்த்தி செய்திருக்கிறதா, அல்லது நிரந்தரமான சமாதானத்தை அவை உறுதியளிக்கக்கூடுமா? [பதில் சொல்ல நேரம் அனுமதியுங்கள்.] இன்று நாம் எதிர்ப்படும் பெரிய பிரச்னைகளை உண்மையிலேயே தீர்க்கப் போகும் ஓர் அரசாங்கத்திற்காக ஜெபிக்கும்படி இயேசு எவ்வாறு தம்மை பின்பற்றினவர்களுக்கு கற்பித்தார் என்பதை கவனியுங்கள். [மத்தேயு 6:9, 10-ஐ வாசித்துக் காட்டுங்கள்.] கடவுளுடைய ராஜ்யம் என்ன காரியங்களை நிறைவேற்றும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல நேரம் அனுமதியுங்கள்.] இதன் சம்பந்தமாக பைபிள் கொடுக்கும் விளக்கமும் மிகவும் அக்கறையூட்டுவதாயிருக்கிறது.” பின்பு தானியேல் 2:44-ஐ வாசித்துக் காட்டுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கங்கள் 12, 13-லும் உள்ள விளக்கப் படங்களை பயன்படுத்தி கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் இருக்கப்போகும் நிலைமைகளைப் பற்றி எடுத்துக் காட்ட நீங்கள் விரும்பலாம்.
5 மாதாந்தர இந்திய மொழி மே 1, 1992 “காவற்கோபுர”த்தை அளித்து வந்திருந்தால் இப்படியாக சொல்லலாம்:
◼ “நான் சென்ற முறை உங்களை சந்தித்த போது, குடும்ப வாழ்க்கையை எவ்விதமாக முன்னேற்றுவிப்பது என்பதைக் குறித்து நாம் பேசினோம். குடும்பங்களுக்கு வரும் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டு வரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருவதால், நம்மில் பெரும்பான்மையர் அதைப் பற்றி பேசுவதை போற்றுவோம். குடும்ப வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றுவிக்க உதவி பெறுவதைக் குறித்து அநேகர் விரும்புவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களல்லவா?” பிரதிபலிப்பைப் பொறுத்து “உங்கள் குடும்ப வாழ்க்கையில் கடவுளை முதலாவது வையுங்கள்” என்ற கட்டுரையை எடுத்துக் காட்டுங்கள், அதில் உள்ள உபதலைப்புகளுக்கு முதலில் கவனத்தை திருப்பி பின்னர் ஒவ்வொரு தலைப்பின் கீழுள்ள முக்கிய கருத்துக்களை சுருக்கமாக சொல்லுங்கள். முடிவாக யோவான் 17:3-ஐயும் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐயும் வாசித்துக் காட்டுங்கள்.
6 நம்முடைய மறுசந்திப்புகள் வெற்றிகரமானவையாய் இருப்பதற்கு கவனத்தை கவரும் பைபிள் விஷயங்களை மனதில்கொண்டு தனிப்பட்ட அக்கறையை நாம் தொடர்ந்து வெளிக்காட்டுவோமாக.