ஜூன் மாதத்தில் காவற்கோபுரம் பத்திரிகையை அளித்தல்
1 காவற்கோபுரம் பத்திரிகையின் நோக்கம் ஒவ்வொரு இதழிலும் 2-வது பக்கத்தின் மேற்பகுதியிலே சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கிற அந்த நோக்கத்திற்கிசைவாக நம்மால் முடிந்தளவு அநேக ஜனங்களுக்கு உதவி செய்ய நாம் என்ன செய்யலாம்? ஜூன் மாதத்தின்போது, ராஜ்ய செய்தியில் அக்கறை காண்பிக்கும் எல்லாருமே காவற்கோபுரம் பத்திரிகையை ஒழுங்காக படிப்பதற்கு உற்சாகப்படுத்த நாம் விசேஷித்த முயற்சியெடுப்போம்.
2 நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்பவரிடம் நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நாங்கள் எங்கள் அயலாரை ஒரு கேள்வி கேட்கிறோம், அதன்பேரில் உங்கள் குறிப்பையும் நாங்கள் போற்றுவோம். கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்காகவும் ஜெபிக்கும்படி இயேசு நமக்கு கற்பித்திருப்பதால், கடவுளுடைய சித்தம் மெய்யாகவே இங்கே பூமியில் செய்யப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் சொல்ல நேரம் அனுமதித்தப் பிறகு ஏசாயா 55:10, 11-ற்கு திருப்புங்கள், கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளும் எவ்வாறு கட்டாயமாக நிறைவேறும் என்பதை கவனிக்கும்படி வீட்டுக்காரரிடம் சொல்லுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் பக். 12, “ராஜ்யம்” என்ற தலைப்பின் கீழ் இரண்டாவது அறிமுகம்.
3 வீட்டுக்காரர் அக்கறை காட்டினால், நீங்கள் தொடர்ந்து இவ்வாறு சொல்லலாம்:
◼ “காவற்கோபுரம் பத்திரிகையின் ஒரு நோக்கம் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு கவனத்தை திருப்புவதாகும். இந்தக் கட்டுரையை பாருங்கள்.” பிறகு, “1914—உலகத்தை அதிரச் செய்த ஆண்டு” என்ற முதல் கட்டுரைக்கு, ஆங்கில மே 1 காவற்கோபுரம் இதழுக்கு அவருடைய கவனத்தை திருப்பி இவ்வாறு சொல்லலாம்: “‘1914-ல் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். 1914-ஐக் குறித்தும் காவற்கோபுரம் பத்திரிகையைக் குறித்தும் 2-வது பாரா என்ன சொல்லுகிறது என்பதை கவனியுங்கள்.” பிறகு, அந்தப் பாராவை வாசித்துக் காட்டுங்கள்.
4 நீங்கள் அதிக நேரமெடுத்து சம்பாஷிக்க விரும்பினால், வெளிப்படுத்துதல் 21:3-5-ல் உள்ள குறிப்பையும் உட்படுத்தி நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற பிரகாரம் அந்தப் பிரசங்கத்தையே விரிவாக்கலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில், ஏசாயா 55:10, 11-ஐ வாசித்தப் பிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “பூமிக்கான கடவுளுடைய சித்தம் சம்பந்தப்பட்ட அதிசயமிக்க தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேற்றப்படும். அது உங்களுடைய வாழ்க்கையையும் என்னுடைய வாழ்க்கையையும் பாதிக்கும். வெளிப்படுத்துதல் 21:3-5-ல் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கவனித்துக் கேளுங்கள்.” பிறகு வசனங்களை வாசித்து கடவுளுடைய ராஜ்ய ஆளுகையின் கீழ் வரவிருக்கும் ஆசீர்வாதங்களை கலந்து பேசுங்கள். காவற்கோபுரம் பத்திரிகை எப்படி கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தை அறிவிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள்.
நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “‘“ஆபத்துக்கால”த்தில் யார் தப்பிப்பிழைப்பர்?’ என்ற கட்டுரையை மே 1 இதழ் சிறப்பித்துக் காட்டுகிறது. வெளிப்படுத்துதல் 21-ல் நாம் வாசிக்கிறபடி கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் நீதியான புதிய உலகில் நீங்கள் எப்படி வாழலாம் என்பதைப் பார்க்க இது உங்களுக்கு உதவக்கூடும்.”
5 இந்திய மொழியிலுள்ள ஜூன் 1 காவற்கோபுரம் பத்திரிகையை உபயோகிக்கையில் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நம்மில் அநேகர் அவ்வப்போது நோய்வாய்ப்படுகிறோம். வாழ்க்கை எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து இருக்குமா?” (வீட்டுக்காரர் தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்த அனுமதியுங்கள்) பிறகு இவ்வாறு சொல்லுங்கள்: “சீக்கிரத்தில் வியாதியோ மரணமோ இருக்கப்போவதில்லை!” பத்திரிகையின் முன் பக்கத்தில் உள்ள படத்தை காட்டுங்கள். “இது உண்மையில் நடக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” (அவர் பதில் கொடுக்க காத்திருங்கள்) படத்தைக் காட்டி சிறிது நேரம் விளக்கிய பின்னர், அந்தக் கட்டுரையிலுள்ள கடைசி பாராவோடு அதை இணைத்துப் பேசுங்கள். சந்தாவை அளியுங்கள்.
6 ஒரு பைபிள் படிப்புக்கு அடிக்கல்லாக அமைய காவற்கோபுரம் பத்திரிகையை உபயோகியுங்கள்: மற்றவர்கள் சத்தியத்தை கற்றுக்கொள்வதே நம்முடைய இலக்காகும். அப்போது அவர்களுங்கூட யெகோவாவின் உடன் வேலையாட்களாகி, யெகோவாவின் ராஜ்யதை அறிவிப்பதில் பங்குக்கொள்வார்கள். அப்படியானால், அக்கறை காட்டும் ஜனங்களை நாம் காண்கையில் குறித்து வைத்துகொண்டு விரைவில் அவர்களை சென்று சந்திக்க வேண்டும்.
7 காவற்கோபுரம் பத்திரிகையை கொண்டு மற்றவர்களோடு சத்தியத்தை பகிர்ந்து கொள்ளும்போது, நம்முடைய வேலையிலே எப்போதும் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக நோக்கியிருப்போமாக, அப்போது நாம் செம்மறியாட்டைப் போன்ற ஜனங்களை கண்டடைந்து அவர்களை போஷிக்க முடியும்.—யோவான் 21:15-17.