நம்முடைய அறிமுகத்தை அளிப்புடன் இணைத்தல்
1 இந்த மாதம் உங்கள் பிரசங்கத்தைத் தயாரிக்கையில், உங்கள் பிராந்தியத்தில் ஜனங்கள் எதிர்ப்படும் பெரும்படியான பிரச்னைகளை நீங்கள் முதலாவது கவனித்து, நடைமுறையான, வேதப்பூர்வ பரிகாரத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் நம் ஆகஸ்ட் மாத அளிப்பு புரொஷூர்கள் ஒன்றிலிருந்து கூற்றுகளைத் தெரிந்தெடுக்கலாம்.
2 சில சூழ்வட்டாரங்களில், ஆட்கள் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டே இருப்பதையும் வாழ்க்கைச் செலவு அதிகமாவதையும் பற்றிக் கவலையுற்றிருக்கலாம். இந்தச் சூழ்நிலைமையை நீங்கள் எதிர்ப்பட்டால், இந்தப் பிரச்னையை முக்கியமாய் உங்கள் அறிமுகத்தில் தனிப்படக் குறிப்பிடலாம்.
நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪“வேலையும் வீட்டுவசதியும் எல்லாருக்கும் இருப்பதை நிச்சயப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதைப்பற்றி நாங்கள் எங்கள் அயலாருடன் பேசி வருகிறோம். மனித அரசாங்கம் இதை நிறைவேற்றுமென்று எதிர்பார்ப்பது நியாயமென நீங்கள் நம்புகிறீர்களா? [வீட்டுக்காரரின் பதிலுக்கு நேரம் அனுமதியுங்கள்.] இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது எவ்வாறென அறிந்திருக்கிற ஒருவர் இருக்கிறார். ஏசாயா 65:21-23-ல் அவருடைய உறுதியளிக்கும் வாக்கைக் கவனியுங்கள். [வாசியுங்கள்.] நம்முடைய சிருஷ்டிகர் நம்முடைய ஊக்கமூட்டுதலுக்காக இந்த வாக்கு எழுதிவைக்கப்படும்படி செய்தார், இந்த இக்கட்டான காலங்களில் நம்மெல்லாருக்கும் இது தேவை, அல்லவா?”—நிபே, பக். 11.
3 உங்கள் பிரசங்கத்தின் இந்தக் கட்டத்தில் நீங்கள் நம்முடைய பிரச்னைகள் புரொஷூரிலிருக்கும் குறிப்பை இணைக்கலாம். உதாரணமாக, 4-ம் பக்கத்தில் பாரா 2-ல் சாதாரண மனிதன் எதிர்ப்படும் பல பிரச்னைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் இந்தப் பிரச்னைகளில் ஒன்றை அல்லது மேற்பட்டவற்றைத் தாங்கள்தாமே அனுபவித்துக்கொண்டிருக்கலாம். பின்பு வீட்டுக்காரரின் கவனம் 5-ம் பக்கத்துக்குச் செலுத்தப்பட செய்யலாம், அங்கே ஆசிரியர் ஆனந்துவினிடம் பின்வருமாறு சொல்கிறார்: “ஒருவர் நம்முடைய எல்லா பிரச்னைகளையும் சீக்கிரத்தில் தீர்க்கப்போகிறாரென நாங்கள் குடும்பமாக உறுதியாய் நம்புகிறோம்.” பக்கம் 6 பாரா 2-ல் ஆசிரியர் சொல்வதைச் சுருக்கமாய்க் குறிப்பிட்டு, யெகோவா ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவாரென வாக்குக் கொடுத்திருப்பதைக் காட்டுங்கள். புரொஷூரை அளித்தப் பின்பு, கடவுள் நம்முடைய எல்லா பிரச்னைகளையும் எவ்வாறு தீர்க்கப்போகிறார் என்பதைக் கலந்துபேச நீங்கள் சீக்கிரத்தில் திரும்ப வரும்படி விரும்புகிறீர்களென சொல்லி முடிக்கலாம்.
4 “இதோ! புதிதாக்குகிறேன்” புரொஷூரை அளிக்கையில், புரொஷூரின் முன் மற்றும் பின் அட்டைகளில் எல்லாருக்கும் வீட்டு மற்றும் வேலை வசதி இருக்கப்போவதைப்பற்றிய வருணிப்பைக் காட்டலாமல்லவா? வீட்டுக்காரர் அந்த முழு படவருணிப்பையும் ஒரே நேரத்தில் காணுமாறு நீங்கள் அதைத் திறந்து காட்டலாம். நீங்கள் அப்போது வாசித்த வேதவசனத்தோடு இணைத்து, கடவுளுடைய வாக்கு நிறைவேற்றமடைந்த பின்பு இருக்கப்போகும் நிலைமைகளை அது நன்றாய் விளக்கிக் காட்டுகிறதெனக் குறிப்பிடுங்கள்.
“அரசாங்கம்” புரொஷூரை நீங்கள் அளிக்கிறீர்களென்றால் பின்வருமாறு சொல்லலாம்:
▪ “கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதற்காகவும் ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்பித்தார். கடவுளுடைய சித்தம் இங்கே எப்போதாவது செய்யப்பட்டால், இந்தப் பூமி உண்மையில் ஒரு பரதீஸாகுமென நீங்கள் நினைக்கிறீர்களா?” வீட்டுக்காரர் பதில் சொன்னபின்பு, வெளிப்படுத்துதல் 21:3-5-ஐ அறிமுகப்படுத்தி வாசியுங்கள்.
5 பின்பு 3-ம் பக்கத்திலுள்ள அறிமுகப் பாராவிலிருந்து தேர்ந்தெடுத்தப் பகுதிகளை வாசியுங்கள். “இந்த ராஜ்யத்தின் மூலமாகவே, போர்கள், பசி, நோய், குற்றச் செயல்கள் ஆகியவற்றைக் கடவுள் சீக்கிரத்தில் ஒழித்துக்கட்டுவார்.” இந்தப் பிரச்னைகளில் எதை வீட்டுக்காரர் மிக அதிக வினைமையானதாய் உணருகிறாரெனக் கேளுங்கள்.
6 இளைஞருங்கூட ராஜ்ய செய்தியை, முதியோருக்கும், பலன்தரத்தக்க முறையில் அளிக்க முடியும்.
ஏசாயா 65:21-23-ஐ அறிமுகஞ்செய்கையில், இளம் பிரஸ்தாபிகள் பின்வருமாறு சொல்லலாம்:
▪ “முதியோராக நீங்கள் வாழ்க்கையில் என்னைவிட மிக அதிக அனுபவமுள்ளவர்களென நான் அறிந்திருக்கிறேன், எனினும் இந்த வேதவசனம் நம்மெல்லாருக்கும் ஆறுதலளிக்கிறது.”
7 அளித்த குறிப்பிட்ட புரொஷூர் அல்லது பத்திரிகைகள் உட்பட, அளித்தது எதுவாயினும் கவனமாய்ப் பதிவு செய்து வைக்க நிச்சயமாயிருங்கள். அக்கறையை வளர்க்க நீங்கள் மறுபடியும் செல்கையில் இந்தத் தகவல் உங்களுக்குத் தேவைப்படும்.