நம்முடைய பிரச்னைகள் புரொஷூரில் படிப்புகள்தொடங்குதல்
1 இராஜ்ய செய்தியில் அக்கறை காட்டின ஒருவரோடு நீங்கள் கடைசியாகப் பேசி சிறிது காலம்—ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு நாட்கள், ஒருவேளை ஒரு வாரம்—கடந்துவிட்டது. அவர் பைபிள் புத்தகத்தை ஏற்றிருந்தாலும் இல்லாவிடினும், இருக்கும் எந்த அக்கறையையும் கூடிய சீக்கிரத்தில் தூண்டி வளரச் செய்வது முக்கியம்.
2 முதல் சந்திப்புக்குப் பின் நீங்கள் கவனமாய்ச் செய்த குறிப்புகளைத் திரும்ப எடுத்துப் பாருங்கள். பின்பு, உங்கள் சாட்சி பையை நிரப்புகையில், நீங்கள் அவரிடம் கொடுத்த புத்தகத்தின் ஒரு பிரதியையும், மறுசந்திப்பின்போது அதைக் குறிப்பிட்டு பயன்படுத்தக்கூடும்படி, அதில் வைக்க நிச்சயமாயிருங்கள்.
“நம்முடைய பிரச்னைகள்” புரொஷூரை நீங்கள் அளித்திருந்தால், பின்வருமாறு நீங்கள் சொல்லலாம்:
▪ “நான் உங்களை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். போன தடவை நாம் பேசினபோது, நான் உங்களுக்கு இந்தப் புரொஷூரைக் காட்டினேன் மேலும், கடவுள் தம்முடைய ராஜ்யத்தின் மூலம், நம்முடைய பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் ஒரு பரிகாரத்தை அருளுவார் என்பதை நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசித்தோம். இதில் நோயாலும் உடல் தளர்ச்சி சம்பந்தப்பட்டவற்றாலும் உண்டுபண்ணப்படுகிற பிரச்னைகளுங்கூட உட்பட்டுள்ளன. இதை நம்புவதைக் கடினமாகக் காண்கிறீர்களா? [வீட்டுக்காரரின் பதிலுக்கு நேரம் அனுமதியுங்கள்.] நான் உங்களிடம் விட்டுச் சென்ற புரொஷூரின் பக்கம் 19-ல் பாரா ஒன்றிலுள்ள இந்தக் குறிப்பைக் கவனியுங்கள்.” அந்தப் பாராவை வாசித்து, அடுத்த பாராவிலுள்ள வேதவசனங்கள் ஒன்று அல்லது இரண்டைக் கலந்தாலோசியுங்கள். ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்படுகிறது!
3 எதிர்கால சந்திப்பு ஒன்றுக்கு வழியை ஆயத்தஞ்செய்ய, நீங்கள் அந்த உரையாடலைப் பின்வருமாறு சொல்லி முடிக்கலாம்:
▪ “நிச்சயமாகவே நாம் ஆலோசித்த எல்லாம் பைபிளில் உள்ளது, ஆனால் பைபிள் சொல்வதை நாம் உண்மையில் நம்ப முடியுமாவென பல ஆட்கள் நினைக்கின்றனர்? அடுத்த தடவை நான் வருகையில், இந்தப் பொருளின்பேரில் உங்களுடன் சிந்திக்க சில நிமிடங்கள் செலவிட விரும்புகிறேன்.” இந்த அக்கறையை வளர்க்க நீங்கள் திரும்பி வருகையில், கலந்துபேசுவதை புரொஷூரின் பக்கம் 24-ல் “அறிவுரைக்குரிய புத்தகம்” என்ற உபதலைப்பில் பாரா இரண்டிலிருந்து தொடங்கி நடத்துங்கள்.
4 சொற்ப புத்தகங்களே அளிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில்: ஓரளவு அக்கறைகாட்டின ஆனால் புத்தகத்தை ஏற்காத ஆட்களைச் சந்திக்கையில் இதே பொதுமுறையான பிரசங்கத்தைப் பயன்படுத்தலாம். முந்தின சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்கும்படி காட்டின புரொஷூரைப்பற்றி நீங்கள் குறிப்பிடலாம். வீட்டுக்காரர் ஒரு புரொஷூரை ஏற்பதற்கு முன்னால் நீங்கள் பைபிளையும் உங்கள் சொந்த புரொஷூர் பிரதியையும் பயன்படுத்தி திரும்பத்திரும்ப பல சந்திப்புகளைச் செய்ய தேவைப்படலாம். நீங்கள் ஒரு பத்திரிகையைக் கொடுத்திருந்தால், அக்கறையை வளர்க்க திரும்ப செல்கையில் நம்முடைய பிரச்னைகள் புரொஷூரில் அதோடு சம்பந்தப்பட்ட ஒரு பொருளைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
5 நம்முடைய பிரச்னைகள் புரொஷூரில் பைபிள் படிப்புக்கு வழிநடத்தும் நல்ல மறு சந்திப்புகளை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 154-6-ம் பக்கங்களிலுள்ள பொருளிலிருந்து தயாரிக்கலாம். பின்வரும் கேள்வியைக் கேட்கலாம்: “பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்பொழுதும் தவறாமல் நிறைவேற்றமடைந்திருக்கின்றனவென உங்களுக்குத் தெரியுமா? இந்த புரொஷூர் இன்று நிறைவேற்றமடைந்துகொண்டிருப்பதாக நாம் காணக்கூடிய தீர்க்கதரிசனங்களில் ஒன்றை விவரித்து, அதே தீர்க்கதரிசனம் நம்முடைய எதிர்காலத்தைப்பற்றிக் குறிப்பதென்னவெனக் காட்டுகிறது.” பின்பு 12-ம் பக்கத்துக்குத் திருப்பி “அடையாளம்” என்ற உபதலைப்பின்கீழுள்ள பொருளைக் கலந்துபேசுங்கள்.
6 எவருடனாவது நீங்கள் நம்முடைய பிரச்னைகள் புரொஷூரை, இரண்டு பத்திரிகைகளை அல்லது புத்தகம் ஒன்றை அளித்திருந்தால் அல்லது வெறுமென அக்கறையைக் கவரும் பைபிள் உரையாடல்மட்டுமே செய்திருந்தால், அந்த அக்கறையை வளர்க்கச் செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின்போது உயிரைக் காக்கும் இந்த வேலையில் பங்குகொள்ள ஓரளவு நேரத்தை ஒதுக்கி வைக்கும்படி உங்களெல்லாரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.—1 தீமோ. 4:16.