ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள்
1 ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதில் முன்னொருபோதும் இத்தனை அநேக இளைஞர்கள் பங்குகொண்டதில்லை! பத்தாயிரக்கணக்கானோர் பிரசங்கி 12:1-ல் உள்ள இந்த ஆலோசனையை பின்பற்றி வருகின்றனர்: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” ஊழியத்தில் ஓர் ஒழுங்கான பங்கை கொண்டிருக்க எது இந்த இளைஞரை உந்துவிக்கிறது, இவர்களில் அநேகர் ஏன் பயனியர் சேவையில் ஈடுபடுகின்றனர்?
2 அநேகர் சிறந்து விளங்கிய இளைஞனாகிய தீமோத்தேயுவின் நடத்தையை பின்பற்றுகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. அவனுக்கு ஆவிக்குரிய கல்வியினால் வரக்கூடிய பயனை குழந்தைப்பருவ முதல் கொடுத்து அவனுடைய அம்மாவும் அவனுடைய பாட்டியும் ஆவிக்குரிய இலக்குகளை நாடித்தேட அவனை உற்சாகப்படுத்தினார்கள். (2 தீமோ. 3:14, 15) இதன் காரணமாக, சேவையில் கூடுதலான சிலாக்கியங்கள் அடைவதற்கான சந்தர்ப்பம் எழும்பினபோது அவன் தகுதியுடையவனாயும் ஆயத்தமாயும் இருந்தான்.—அப்போஸ்தலர் 16:1-3.
3 ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதற்கு எவ்வாறு இன்னுமநேக இளைஞர்களை உற்சாகப்படுத்தலாம்? எப்படிப்பட்ட அஸ்திபாரத்தை போட வேண்டும்? பிள்ளைகளில் சத்தியத்தின் பேரில் போற்றுதலை வளர்ப்பதற்கும் நீண்ட-கால இலக்குகளை வைப்பதற்கும் பெற்றோர் எப்படி அவர்களுக்கு உதவலாம்?
4 வேதப்பூர்வமான அஸ்திபாரத்தை போடுங்கள்: பெற்றோர் தாங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் காரியங்கள் யெகோவாவிடமிருந்து வருவதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது அவர்களுடைய பிள்ளைகளை “இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவ”ர்களாக அது செய்விக்கக்கூடும். (2 தீமோ. 3:15) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் பேரில் ஆழமான அன்பை அவர்களில் வளர்க்க ஊக்கமாக பிரயாசப்படுங்கள். ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராவதோடுகூட அவர்களுடைய தேவைகளுக்கேற்ப ஓர் ஒழுங்கான, அர்த்தமுள்ள பைபிள் படிப்பை கொண்டிருப்பதை இது அவசியப்படுத்துகிறது. இளைஞர்களை ஆவிக்குரிய இலக்குகளை நாடித்தேட உந்துவிப்பது பலமான விசுவாசமாகும், இதற்கு அவர்கள் ஒரு சொந்த தனிப்பட்ட படிப்பு திட்டத்தை கொண்டிருக்க வேண்டும், மேலும் யெகோவாவோடு கொண்டிருக்கும் தங்கள் சொந்த உறவை அவர்கள் விருத்திசெய்ய வேண்டும்.—1 தெச. 5:21; எபி. 11:1.
5 பெற்றோரும் சபையில் முதிர்ச்சியுள்ள ஆட்களும் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்து “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்ப”தை பிரகாசிக்கச் செய்வார்களேயானால் கிறிஸ்தவ இளைஞர்கள் ஆவிக்குரிய அக்கறைகளை உடனடியாக தடையின்றி நாடித்தேடுவார்கள். (நெகே. 8:10) சந்தோஷத்தை வெளிக்காட்டுவதன் மூலம், மெய் கிறிஸ்தவத்துக்கு அவசியமான காரியங்கள் பாரமானவைகளல்ல என்பதை இளைஞர்கள் போற்றுவதற்கு நாமெல்லாருமே உதவலாம்.—1 யோவான் 5:3.
6 பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் போன்ற ஆட்கள் அவர்களோடு வெளி ஊழியத்தில் வேலை செய்ததன் மூலமும் அவர்களோடு உற்சாகமூட்டும் வார்த்தைகளை பகிர்ந்துகொண்டதனிமித்தமும் அநேக இளைஞர்கள் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கின்றனர். சிறந்த முன்மாதிரியாயிருக்கும் முழு-நேர ஊழியர்களை உணவருந்துவதற்கோ, அல்லது மற்ற சமயங்களில் கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவிப்பதற்கோ வீட்டிற்கு அழைப்பதன் மூலம் பெற்றோர் அவர்களுக்கு உதவி செய்யலாம். இளைஞர்களுக்கு சமநிலையான கவனத்தை கொடுப்பதில் இயேசு கிறிஸ்து மிகச் சிறந்த மாதிரியை வைத்தார்.—மாற்கு 10:13-16.
7 இலக்குகளை வையுங்கள்: பெற்றோர் சரியாக பிள்ளைகளை வழிநடத்தும்போது பிள்ளைகள் எப்போதும் சிறுவயதிலேயே தங்களுக்குத்தாமே ஆவிக்குரிய இலக்குகளை வைக்கின்றனர். இளைஞர்கள்—பயனியர் சேவை, தேவை அதிகமாயிருக்கும் இடத்துக்கு சென்று சேவிப்பது, பெத்தேல் சேவை அல்லது மிஷனரி சேவை—போன்ற ஏதோவொரு தகுதியுள்ள இலக்கை அடைய தீர்மானித்தவுடன், பெற்றோரோ சபையிலுள்ள மற்ற முதிர்ச்சியுள்ள அங்கத்தினர்களோ அந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் தொடர்ந்து பிரயாசப்பட நடைமுறையான ஆலோசனைகளை கொடுத்து தூண்டிவிடுவதன் மூலம் அன்புடன் அவர்களை உற்சாகப்படுத்த முடியும்.
6 ஒவ்வொரு சபையும் ஒரு குடும்பத்தைப் போல இருக்கிறது. ஆகவே இளைஞர்கள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கவும் ஆவிக்குரிய முன்னேற்றத்தை செய்யவும் அவர்களுக்கு உதவிசெய்வதில் நாம் ஒவ்வொருவரும் அக்கறையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் அன்பை உறுதிசெய்வதன் மூலமும் ஆவிக்குரிய இலக்குகளை நாடித்தேட அவர்களை நாம் உற்சாகப்படுத்துவதன் மூலமும் நம்மால் இதை செய்ய முடியும்.