திரும்பவும் சென்று சந்திக்க நிச்சயமாயிருங்கள்
1 “கடந்த இரண்டு வருடங்களாக, நான் நான்கு முறைகள் [படைப்பு புத்தகத்தை] வாசித்து, அதை பிரசுரிப்பதில் உட்பட்டிருக்கும் ஆழமான ஆராய்ச்சியும் புலமையும் ஆதார மூலச் சான்றையும் கண்டு தொடர்ந்து கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து இதை தொடர்ந்து பிரசுரியுங்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நபருடைய கைகளிலும் இந்தப் புத்தகம் இருக்கவேண்டும். இப்படி இது இருந்ததென்றால், நம்முடைய ஆரம்பத்தைப்பற்றிய பிழைகளும் குழப்பங்களும் நாஸ்திக கொள்கைகளும் உடனடியாக முடிவடைந்துவிடும்.” இப்படியாக முழுஓய்வுபெறாத வழக்கறிஞர் ஒருவர் எழுதியதாக அவேக்! ஏப்ரல் 22, 1992, பக்கம் 32-ல் அறிக்கைசெய்யப்பட்டுள்ளது.
2 இந்தப் பிரசுரத்திற்கு இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஏற்பிசைவு இருக்க, படைப்பு புத்தகத்தை நம்மால் கூடிய அநேக அக்கறையுள்ள ஆட்களின் கையில் கிடைக்கச்செய்ய நாமெல்லாரும் முழுஇருதயத்தோடு ஆதரவு கொடுப்பதற்கு விரும்பவேண்டும் அல்லவா? அப்படியானால் தலைசிறந்து விளங்கும் இந்தப் பிரசுரத்தின்பேரில் தொடர்ந்த அக்கறையை தூண்டுவிக்க மறுசந்திப்புகள் செய்வதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3 பரிணாமவாதிகளால் முன்னேற்றுவிக்கப்பட்ட எண்ணற்ற கொள்கைகளை நம்மில் அநேகர் ஆழ்ந்து படித்ததில்லை. என்றபோதிலும், பரிணாம போதனை, மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கு கெட்ட பெயரை கொண்டுவர சாத்தான் உபயோகிக்கும் மற்றொரு உபாயமேயாகும் என்பதை நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்கு வெகு பலமாக சான்றுபகருவதற்கு அது அவசியமில்லை. சில வீட்டுக்காரர்கள் குறிப்பிட்ட ஒருசில நுட்பமான கேள்விகளை எழுப்பும்போது அவற்றிற்கு பதிலளிக்க முடியாது என்று பயந்து திரும்பவும் சென்று சந்திப்பதற்கு தயங்காதீர்கள். பிரசுரம்தானே அது சொல்லும் ஒவ்வொரு கூற்றிற்கும் அபரிமிதமான ஆதாரமூல சான்றை அளிக்கிறது.
4 கூடுதலாக, அதிகாரம் 16 முதல் அதிகாரம் 20 வரை, மனிதவர்க்கத்தின் ஆரம்பம், இந்தப் பூமிக்கும் மனிதனுக்குமான கடவுளுடைய நோக்கம், மற்றும் இன்று மனிதவர்க்கத்தை எதிர்ப்படும் தெரிவுகள் ஆகியவற்றைப்பற்றிய வேதப்பூர்வமான அடிப்படை போதகங்களைக் கொண்ட அநேக விஷயங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே மறுசந்திப்புகள் செய்வதற்கு அதிக சிறந்த தகவல்கள் இருக்கின்றன.
5 நீங்கள் பிரசுரம் அளித்துவிட்டுவந்த நபர்களை மறுசந்திப்பு செய்ய ஓரளவு தயங்குவீர்களென்றால், சபையிலுள்ள அனுபவம்வாய்ந்த நபரையோ பரிணாம போதனையைக் குறித்து நன்கு அறிந்திருக்கிற ஒரு நபரையோ ஒருவேளை நீங்கள் உங்களோடுகூட அழைத்துக்கொண்டு செல்லலாம். இது, இந்தப் பொருளின்பேரில் பள்ளியில் கொஞ்சம் நேரம் செலவிட்டு ஆராய்ச்சி செய்ய தேவைப்படுத்தப்பட்டு, இதனால் பரிணாம கொள்கைகளை நன்கு அறிந்திருக்கிற பள்ளி-வயது சகோதரராகவோ சகோதரியாகவோ ஒருவேளை இருக்கலாம். மறுபட்சத்தில், உங்களுடைய சபையில், ஒருசமயம் பரிணாமவாதத்தை நம்பி வந்து, பின்னால் பைபிளின் சத்தியத்தை கற்று, பரிணாமத்தின் பொய் போதகங்களை இப்போது பொய்யென நிரூபிக்க அறிந்துள்ள ஒரு நபர் இருக்கலாம்.
6 படைப்பு புத்தகத்தில் அதிகாரம் 19-ற்கு கவனத்தை திருப்ப தயங்காதேயுங்கள், உங்களுடைய மறுசந்திப்பிற்கு ஆதாரமாக எதிர்காலத்துக்கான பைபிளின் நம்பிக்கையை பயன்படுத்தலாம். அந்த அதிகாரத்திலுள்ள அநேக குறிப்புகளை எதிர்காலத்துக்கான பைபிளின் வாக்குகளின்பேரில் ஒரு நபருடைய கவனத்தை திருப்ப, உற்சாகப்படுத்தப் பயன்படுத்தலாம். பக்கம் 236-ல் “மாற்றியமைக்கப்பட்ட பூமி” என்ற உபதலைப்போடு தொடங்கும் பிரிவோடு தொடங்கி அடுத்து பக்கம் 238-9-ல் “ஏழ்மைக்கு ஒரு முடிவு” மற்றும் “இனிமேலும் வியாதியில்லை, இனிமேலும் மரணமில்லை” என்பதை நீங்கள் உபயோகிக்கலாம்.
7 இந்த அருமையான பிரசுரம் ஜீவ பாதையை கண்டடைய அநேகருக்கு உதவியிருக்கிறது. உயிரைப் பற்றியும் அது எப்படி இங்கு வந்தது என்பதைப் பற்றியும் படைப்பு புத்தகம் என்ன சொல்லுகிறது என்று வாசித்து சிந்திக்க அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் நாம் இன்னும் மற்றவர்களுக்குங்கூட உதவமுடியும்.