யெகோவாவை இருதயத்திலிருந்து சேவிக்கும்படிபிள்ளைகளுக்கு உதவிசெய்யுங்கள்
1 “இதோ, பிள்ளைகள் [குமாரர், NW] யெகோவாவினால் வரும் சுதந்தரம்” என்று சாலொமோன் கூறினார். (சங். 127:3-5, தி.மொ.) அவர்கள் நிச்சயமாகவே, விலையிட முடியாத மதிப்புள்ள சுதந்தரம். பெற்றோர், தங்கள் பிள்ளைகளைக் கற்பித்து, பயிற்றுவித்து, சிட்சித்து வளர்க்கவேண்டிய, கடவுள் கொடுத்திருக்கும் பொறுப்பை உடையவர்கள். இது ஊழியத்தில் அவர்களைப் பயிற்றுவித்து, யெகோவாவையும் ராஜ்யத்தையும் பற்றி இருதயத்திலிருந்து பேசும்படி பிள்ளைகளை ஊக்குவிப்பதும் உட்படுத்துகிறது.—எபே. 6:4.
2 பெற்றோர் இந்தப் பயிற்றுவிப்பை எந்த வயதில் தொடங்கவேண்டும்? பைபிளின் பதில் தெளிவாயுள்ளது: அதைக் குழந்தைப்பருவத்திலிருந்து தொடங்கவேண்டும். (2 தீமோ. 3:14, 15, NW) அது எவ்வளவு சீக்கிரத்தில் தொடங்கப்படுகிறதோ அவ்வளவு அதிகமாய்ப் பிள்ளைகள், சத்தியத்தில் உறுதியான ஆதாரத்தை ஊன்றசெய்து, ஊழியத்தைத் தங்கள் வாழ்க்கை சேவையாக்கிக்கொள்வர். இந்தச் சிறுவயது பயிற்றுவிப்பு, உலகப்பிரகாரமான சிந்தனையிலிருந்தும் மனப்பான்மைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கவும் உதவிசெய்யும்.
3 பள்ளிக்குச் செல்லும் வயதையடையாத பலர் சிக்கலான திறமைகளைக் கற்றுத் தேர்வதற்குப் போதிய தகுதியைக் காட்டியிருக்கின்றனர். சிறுவயதில் கற்பதற்கு இருக்கும் இந்த இயல்திறமையை யெகோவாவின் அங்கீகாரத்தைக் கொண்டுவரும் செயலாற்றல்களில் அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு வழிநடத்தவேண்டும். (w88 8/1 பக். 15; w89 12/1 பக். 31) மிகச் சிறுவயதினர் பலர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகும் நிலைக்கு முன்னேறியிருக்கின்றனர். சில பிள்ளைகள் பதிமூன்றுக்கு உட்பட்ட வயதிலேயே ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுகின்றனர். இது, தங்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே துணைப் பயனியர்களாகவும் ஒழுங்கான பயனியர்களாகவுங்கூட சேவிக்க அவர்களுக்கு வழியைத் திறந்திருக்கிறது. இந்த இலக்குகளை அடைய அவர்கள், மற்ற ஆட்களிடம் வெவ்வேறு பைபிள் பொருள்களின்பேரில் கலந்துபேசுவதற்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
4 பொதுவில் இன்றைய இளைஞர்களை மதியற்றவர்களாகவும் மரியாதையற்றவர்களாகவும் கருதும் மனப்போக்குடைய முதியோர் சிலருக்கு, வீட்டுவாசலில் வந்திருக்கும் இளைஞனோடு கலந்துபேசுவதில் ஒருவேளை அக்கறை இராது. அத்தகைய தடங்கலை வெற்றிகரமாய் மேற்கொண்டு முதிய வீட்டுக்காரரின் கவனத்தைக் கவர்ந்திழுக்க வீட்டுவாசலில் இளம் பிரஸ்தாபி என்ன சொல்லலாம்? ஓர் இளம் பிரஸ்தாபி பின்வருவதைப்போன்று சொன்னான்: “வணக்கம், என் பெயர் இன்று பலர், எதிர்காலத்தைப்பற்றி அக்கறையுடையோராக இருப்பதால் நான் என் அயலகத்தாரைச் சந்தித்து வருகிறேன். முதியோராக நீங்கள், வாழ்க்கையைப் பற்றிய காரியங்களில் என்னைவிட மிக அதிகமான அனுபவத்தை நிச்சயமாகவே உடையவர்கள். எனினும், இங்கே நம்மெல்லாருக்கும் ஆறுதலாயிருக்கும் ஒரு வேதவசனம் இருக்கிறது.” வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசித்தப் பின்பு, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியில் உரையாடலை ஊன்றவைக்கலாம்.
5 மற்றொரு ஆலோசனை பின்வருமாறு: “வணக்கம், என் பெயர் இந்தச் சுற்றுப்புறத்தில் நான் சுருக்கமான சந்திப்புகள் செய்துகொண்டிருக்கிறேன், ஏனெனில் இன்று இளைஞர் ஏற்கும் போக்கைப்பற்றி முதியோர் பலர் கவலையுடையோராக இருக்கின்றனரென நான் அறிந்திருக்கிறேன். சிலசமயங்களில் இளைஞர் அவமரியாதையான, கலகத்தனமுமான மனப்பான்மையைக் காட்டுகின்றனர். ஆனால் ஒருநாள் எவ்வாறு எல்லாரும் சமாதானத்துடன் ஒன்றாக வாழப்போகின்றனரெனக் காட்டும் வேதவசனம் ஒன்றை நான் பகிர்ந்துகொள்கிறேன்.” பின்பு சங்கீதம் 37:11-ஐ வாசித்து, பொருத்தமாய்க் குறிப்பு சொல்லுங்கள். நம் இளம் பிரஸ்தாபிகள் சொல்லும் இத்தகைய உள்ளப்பூர்வமான கூற்றுகளை முதிய வீட்டுக்காரர்கள் கேட்கையில், அவர்களில் பலர் நிச்சயமாகவே உகந்த முறையில் மனங்கவரப்படுவர்.
6 ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ராஜ்ய-பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலைக்கு நல்ல முறையில் தங்கள் பங்கை அளித்து வருகின்றனர். அவர்களை அன்போடு மெச்சிக்கொள்ள வேண்டும். தெய்வபக்தியுள்ள பெற்றோரால் குழந்தைப்பருவத்திலிருந்து பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள், ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் மேலும் முழுமையாக பங்குகொள்வதை நோக்கி பிரயாசமெடுத்து உழைக்கும்படியான உண்மையான ஊக்கமூட்டுதலுக்கு உடனடியாகப் பிரதிபலிக்கின்றனர். பள்ளியில் இருப்போர் உடன் மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒன்றுபோல் சாட்சிகொடுக்கும் தனிப்பட்ட வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தனிப்பட்ட பிராந்தியத்தில் சாட்சிகொடுப்பதில் மகிழ்ச்சிதரும் அனுபவங்களைப் பலர் அனுபவித்திருக்கின்றனர்.
7 ஆகையால், இளமைக்குரிய வலிமையுடன் யெகோவாவைச் சேவித்து, இருதயத்திலிருந்து அவரைத் துதிப்பதற்கான இந்த வாய்ப்பை அனுகூலப்படுத்திக்கொள்ளும்படி உங்கள் சபையிலுள்ள இளம் பிரஸ்தாபிகளுக்கு உதவிசெய்யுங்கள்.—பிர. 12:1.