நவம்பர் மாத ஊழியக் கூட்டங்கள்
நவம்பர் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 92 (51)
10 நிமி:சபை அறிவிப்புகள், நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகள், மற்றும் தேவராஜ்ய செய்திகளிலிருந்து சிறப்புக்கூறுகள். தற்போது புதிதாகவுள்ள பத்திரிகைகளிலிருந்து முனைப்பானக் கட்டுரைகளுக்குத் திரும்பப் பார்வை செலுத்துங்கள்; முதல் வேதவசன கலந்தாலோசிப்புக்குப் பின் அவற்றை எவ்வாறு அளிக்கலாமெனக் காட்டுவதற்கு ஒன்று அல்லது இரண்டு சுருக்கமான நடிப்புகளை வையுங்கள். வெளி ஊழியத்தில் தங்கள் பங்கை அதிகப்படுத்துவதற்கு நவம்பரின்போது இருக்கும் வெதுவெதுப்பாயுள்ள வானிலையை அனுகூலப்படுத்திக் கொள்ளும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள்.
15 நிமி:“பத்திரிகைகளை நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு பத்தி 6-ஐக் கலந்தாலோசிக்கையில், ஒரு பத்திரிகை மார்க்கத்தைத் தொடங்குவது எவ்வாறு என்பதன்பேரில் ஆலோசனைகள் கொடுங்கள்: எளிதான, நேர்முக அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்; ஒரு நல்ல வீட்டுக்குவீடு பதிவை வையுங்கள்; வரவிருக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடுவதன்மூலம் எதிர்கால வெளியீடுகளில் அக்கறையைத் தூண்டுங்கள்; கட்டுரைகள் விடைகொடுக்கும் கேள்விகளை எழுப்புங்கள்; ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்குப் பின்னும் திரும்பச் சென்று பார்க்க நிச்சயமாயிருங்கள்.—8/84 km பக். 8.
20 நிமி:“நம்முடைய பிரச்னைகள் புரொஷூரை முழுமையாய்ப் பயன்படுத்துதல்.” ஆகஸ்ட் மாத நம் ராஜ்ய ஊழியம் பிரதியின் 4-ம் பக்கத்திலுள்ள, “நம்முடைய பிரச்னைகள் புரொஷூரில் படிப்புகள் தொடங்குதல்” என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட மூப்பரின் பேச்சு. பலன்தரும் மறுசந்திப்புகள் செய்வதும், பைபிள் படிப்பைத் தொடங்குவதற்கு ஓர் அஸ்திபாரம் போடுவதும் எவ்வாறெனக் காட்டுங்கள். பாராக்கள் 2-ஐயும் 3-ஐயும் சிந்தித்தப் பின், இந்தப் புரொஷூரின் உதவியைக் கொண்டு பைபிளைப் படிப்பதற்கு வீட்டுக்காரரை ஊக்கப்படுத்துவது எவ்வாரெனக் காட்டும் சுருக்கமான நடிப்புகள் வையுங்கள். பைபிளைப்பற்றி எந்த அறிவும் இராத ஆட்களை மறுசந்திப்புகள் செய்வதாக மேடை அமைப்புகளைக் கொண்டிருக்கலாம்.
பாட்டு 63 (32), முடிவு ஜெபம்.
நவம்பர் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 77 (41)
10 நிமி:சபை அறிவிப்புகள். மாதாந்தர கணக்கு அறிக்கையை வாசியுங்கள்; 2 கொரிந்தியர் 9:6, 7-ஐ ஆதாரமாகக் கொண்டு போற்றுதலைக் கூறுங்கள். நவம்பரின்போது பத்திரிகைகளையும் சந்தாக்களையும் அளித்ததில் சிறப்பான அனுபவங்களைக் கூறும்படி தயார்செய்த பிரஸ்தாபிகளை அழையுங்கள்.
15 நிமி:“தூண்டுவிக்கும் அறிமுகத்தைத் தோற்றுவியுங்கள்.” நவம்பர் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளைப் பயன்படுத்தி எப்படி அளிப்புகளைத் தயாரிக்கலாம் என்ற காரியத்தைக் கலந்தாலோசிக்கும் பேச்சைக் கொடுங்கள். ஆலோசனையாக கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்புகளை இரண்டு அல்லது மூன்று திறமையுள்ள பிரஸ்தாபிகளைக் கொண்டு நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி:“அக்கறையுள்ளோருக்குக் கரிசனைக் காட்டுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். பாரா 2-ஐச் சிந்திக்கையில், மற்றவர்களுக்கு அக்கறைக் காட்டுவதில் இயேசுவின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாமென்பதை, ஜூலை 1, 1981, காவற்கோபுரம், பக்கங்கள் 4-6-லிருந்து, தேர்ந்தெடுத்தக் குறிப்புகளைக் கொண்டு விளக்கிக் கூறுங்கள். வீட்டுக்குவீடு பதிவுச் சீட்டை நிரப்புவது எவ்வாறு, மற்றும் அக்கறை காட்டுவோரைத் திரும்பச் சந்திப்பதற்கு அதைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பதன்பேரில் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கொடுக்கும் ஆலோசனைகளில் ஒன்றைச் சுருக்கமாய் நடித்துக் காட்டுங்கள். திறம்பட்ட பிரஸ்தாபி ஒருவர் அந்தக் குறிப்பிட்ட முறையை நடித்துக் காட்டும்படி செய்தபின், சபைக்குரிய பிராந்தியத்தில் படிப்புகளைத் தொடங்குவதற்கு அது ஏன் திறம்பட்ட முறையாக இருக்கலாம் என்பதற்கானக் காரணங்களின்பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரை அழையுங்கள்.
பாட்டு 88 (42), முடிவு ஜெபம்.
நவம்பர் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 164 (73)
5 நிமி:சபை அறிவிப்புகள். டிசம்பரின் அல்லது ஜனவரியின்போது, வழக்கமாய் விடுமுறைக் காலங்களில் கூடுதலான நேரம் கிடைக்கக்கூடியபோது துணைப் பயனியர் ஊழியம் செய்யும் சாத்தியத்தைப் பற்றிச் சிந்திக்கும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள்.
20 நிமி:“யெகோவாவை இருதயத்திலிருந்து சேவிக்கும்படி பிள்ளைகளுக்கு உதவிசெய்யுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. ஊழியத்தில், பெற்றோர் தாங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள்தாமே முன்மாதிரியை வைத்து அவர்களைத் தாங்கள் நேரில் பயிற்றுவிக்க வேண்டிய தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்கானத் தேவையை அறிவுறுத்துங்கள். தாங்கள் என்ன செய்து நல்ல பலன்களை அடைந்தார்களென்பதைக் கூறும்படி பெற்றோர் ஒருவரை அல்லது இருவரை அழையுங்கள். வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு அவர் அல்லது அவள் பைபிள் கலந்தாலோசிப்பு ஒன்றைத் தயாரிக்கும்படி ஒரு பிள்ளைக்கு உதவிசெய்தது எவ்வாறென பெற்றோர் ஒருவர் நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். ஆலோசனை கொடுக்கப்பட்ட கலந்தாலோசிப்புகளில் ஒன்றை இளைஞர் ஒருவர், முடிவாக, நடித்துக் காட்டும்படி செய்யுங்கள்.
10 நிமி:கேள்விப் பெட்டி. சபையோடு கலந்தாலோசியுங்கள். பிள்ளைகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகத் தகுதிபெறுவதற்கு அவர்கள் நல்நடத்தையுள்ளவர்கள் மற்றும் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு உள்ளப்பூர்வமான ஆவலுடையவர்கள் என்று அறியப்பட்டிருப்பது அவர்களுக்கு ஏன் முக்கியமென்பதை அறிவுறுத்திக் கூறுங்கள்.
10 நிமி:இளம் பிரஸ்தாபிகள் தங்கள் உள்ளத்தில் உணர்வதை வெளிப்படுத்திக் கூறுதல். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகும்படி தாங்கள் எவ்வாறு தகுதிபெற்றனர் என்றும் வெளி ஊழியத்தைத் தாங்கள் அனுபவித்து மகிழ்வதற்கும் மேலுமதிக பங்குகொள்ள விரும்புவதற்கும் காரணமென்னவெனவும் விளக்கிக் கூறும்படி தயார்செய்துள்ள இளைஞர்கள் சிலரை அழையுங்கள். பேட்டிக் காணப்படுவோர் தங்கள் உள்ளத்திலிருந்துவரும் சொந்த நம்பகமான கூற்றைக் கூறவேண்டும், அவர்கள் சொல்லும்படி கேட்கப்பட்ட வார்த்தைகளை வெறுமென ஒப்பித்துக்கொண்டு இருக்கக்கூடாது.
பாட்டு 221 (78), முடிவு ஜெபம்.
நவம்பர் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 46 (20)
5 நிமி:சபை அறிவிப்புகள். சந்தாச் சீட்டுகளை நிரப்புவது எவ்வாறெனக் காட்டி, சந்தாக்களை ஏற்பதற்கு நியமிக்கப்பட்ட சகோதரரை(களை) அடையாளங்கண்டுகொள்ளச் செய்யுங்கள்.
15 நிமி:நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 58-64-லுள்ள “பைபிள்” என்ற பொருளின்பேரில் பேச்சு. பைபிள் நியமங்களை நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதால் தனிப்பட்டோராய் நாம் அடையும் நன்மையை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.
15 நிமி:எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் என்ற புத்தகத்தை டிசம்பரின்போது முக்கிய அளிப்பாகக் கொடுத்தல். பேச்சும் நடிப்பும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் 209-ம் 210-ம் பக்கங்களில் ‘இயேசு கிறிஸ்து’ என்ற தலைப்பின்கீழுள்ள குறிப்புகளை ஆராயுங்கள். பின்பு இந்தப் பிரசுரத்தில் வீட்டுக்காரரின் அக்கறையைத் தூண்டுவதற்கு இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்துவது எவ்வாரென நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி:“அதிக வேலையாய் இருப்பது—செத்த கிரியைகளிலா அல்லது யெகோவாவின் சேவையிலா?” அக்டோபர் 1, 1992 காவற்கோபுரம், பக்கம் 26-ல் உள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட மூப்பரின் பேச்சு (ஆங்கிலப் பதிப்பு ஜூலை 1, 1992.) கூடுமானால் முழுநேர ஊழியத்தில் அனுபவமுடைய ஒரு சகோதரர் இதைக் கொடுக்க நியமிக்கப்பட்ட வேண்டும்.
பாட்டு 111 (100), முடிவு ஜெபம்.