வாலிபர்களே—உங்கள் நடைகளைத் திறமையாய் நடத்துங்கள்
1 நம்முடைய தகப்பனாகிய யெகோவா இளைஞரின் ஆவிக்குரிய முன்னேற்றத்தில் தனிப்பட்ட அக்கறையை எடுக்கிறார். வாலிபர்கள் அவருடைய அன்புள்ள கட்டளைகளுக்கு ஞானத்தோடு செவிசாய்ப்பதன் மூலம் அவருடைய இருதயத்தைப் பூரிப்படையச் செய்வதோடு தங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலையும் கண்டடைகின்றனர். (நீதி. 27:11; மத். 11:28-30) யெகோவா தங்களுடைய நடைகளுக்குத் திறம்பட்ட வழிநடத்துதலைக் கொடுக்கும்படி அனுமதிக்கின்றனர்.—பழ. 16:9, கத். பை.
2 கிறிஸ்து இயேசு தன்னுடைய வாலிபப் பிராயத்தில் கடவுள், மனிதர் ஆகிய இருவருடைய அங்கீகாரத்தைப் பெற்ற நபராக முன்மாதிரியை வைத்தார். (லூக். 2:52) இன்றைய வாலிபரும் அதையே செய்ய மனமார முயற்சி செய்யவேண்டும். ஓர் இளம் நபருடைய நடைகளில் உள்ள திறம்பட்ட வழிநடத்துதல், ஆவிக்குரிய காரியங்களின்பேரில் அவருக்கிருக்கிற நாட்டத்தினாலேயே வெளியாகிறது. இயேசு 12 வயதாயிருக்கையில், யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடத்தில் பேசுவதற்கு அவருக்கிருந்த விருப்பத்தைக் குறித்து யாவராலும் அறியப்பட்டிருந்தார். (லூக். 2:46, 47) இன்றைய இளைஞரும் தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களிடம் விளக்குவதற்கு அதேமாதிரியான விருப்பதைக் காட்டியிருக்கின்றனர்.—w90 7/1 பக். 29-30, ஆங்கிலம்; w87 12/1 பக். 21, ஆங்கிலம்.
3 இளைஞராகிய நீங்கள் ‘உங்களுடைய மதிப்புவாய்ந்த பொருட்களால் யெகோவாவை கனப்படுத்த’ இப்போதும், விசேஷமாக கோடைக்கால விடுமுறை மாதங்களின்போதும் என்ன செய்யலாம்? (நீதி. 3:9, NW) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்குமான இந்த வேலையில், ஒருவேளை ஒரு துணைப் பயனியராகவுங்கூட, எப்போதும் செலவிடும் நேரத்தை ஏன் நீங்கள் அதிகரிக்கக்கூடாது? ஊழியத்தில் அதிகமாகப் பங்குகொள்வதிலிருந்து வரும் மிகுதியான மகிழ்ச்சியையும் தானாக அபரிமிதமாக வரும் மற்ற நன்மைகளையும் கண்டு நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். மேலும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் வித்தியாசப்பட்ட பிரஸ்தாபிகளோடு சேர்ந்து வெளி ஊழியத்தில் வேலை செய்வதற்கு இது உங்களுக்கு வாய்ப்பை அளிக்கும். இந்த வார இறுதியில் ஓரிரண்டு அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபிகளை உங்களோடு வேலைசெய்ய அழைப்பதன் மூலம் நீங்கள் இப்போதே துவங்கலாம்.
4 பெற்றோர் ஊழியத்தில் தங்கள் பிள்ளைகளோடு செல்வதோடுகூட பழகிக்கொள்ளும் நேரங்களை (practice sessions) உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்கு அதிக உற்சாகத்தையும் உதவியையும் கொடுக்கலாம். சபையில் உள்ள மற்ற முதிர்ச்சிவாய்ந்த ஆட்கள், வீட்டுக்கு-வீடு ஊழியத்திலும் மறுசந்திப்பு, பைபிள் படிப்பு வேலையிலும் இளைஞரைத் தங்களோடு அழைத்துச் செல்வதற்குக் கேட்பதன் மூலம் முன்முயற்சியெடுக்கலாம். ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவர்களாக இருக்கும் இத்தகைய பிரஸ்தாபிகளோடு நெருங்கிய கூட்டுறவை வைத்துக்கொள்வது, இளைஞரைக் கட்டியெழுப்பி அவர்கள் “முதிர்ந்த நிலைமைக்கு முன்னேறிச்செல்”ல உதவக்கூடியதாயிருக்கும்.—எபி. 6:1, தி.மொ.
5 ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய போதனா திறமையில் முன்னேறவேண்டியது அவசியமாயிருக்கிறது. வாலிபர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. இளைஞரே, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் உங்களுக்குச் சிலாக்கியமாகக் கொடுக்கப்படும் நியமிப்புகளுக்கு நீங்கள் முழுவதுமாகத் தயார் செய்கிறீர்களா? வாசிப்பதற்கும் தனிப்பட்ட படிப்புக்கும் மேலும் தியானிப்பதற்கும் நீங்கள் ஒழுங்கான ஓர் அட்டவணையைக் கொண்டிருக்கிறீர்களா? சிந்திக்கப்படும் பொருளைத் தனிப்பட்ட வாழ்க்கையில் உடனடியாக நீங்கள் அப்பியாசிக்கிறீர்களா? விஷயங்களை முழுமையாய்ப் புரிந்துகொள்வதற்கும் குறிப்புகள் சொல்ல தயாராயிருப்பதற்கும் நீங்கள் கூட்டங்களுக்கு நன்றாக தயாரித்துச் செல்கிறீர்களா? கூட்டங்களின்போது சொல்லப்படும் உதவிக் குறிப்புகளை எடுத்து, நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை உபயோகிக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?
6 ராஜ்ய மன்றம் சுத்தம் செய்வதில் பங்குகொள்வது, முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டிருக்கிற சகோதர சகோதரிகளுக்கு வீட்டுவேலைகளில் உதவிசெய்வது அல்லது மற்ற நடைமுறையான வழிகளில் உதவுவதன் சந்தர்ப்பங்களை நழுவவிடாதீர்கள். ராஜ்ய மன்ற செலவுகளைப் பராமரிப்பதற்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கு உதவுவதற்கும் நீங்கள்தானே ஒழுங்காக உங்கள் நன்கொடைகளைக் கொடுக்காமல் அசட்டைசெய்துவிடாதீர்கள்.
7 நாம் ‘யெகோவாவுடைய வார்த்தையின்படி காத்துக்கொண்டு,’ அவர் நம்முடைய நடைகளை வழிநடத்த அனுமதிப்போமேயானால், நம்மை அவர் சந்தோஷத்திடமாகவும் அதிக ஊழிய சிலாக்கியங்களிடமாகவும் வழிநடத்துவார்.—சங். 119:9.