நீங்கள் அதைச் செய்யமுடியுமா?
1 ‘எதைச் செய்யமுடியுமா?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். நீதிமொழிகள் 3:27 பதிலளிக்கிறது: “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.” உங்களுடைய நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் துணைப் பயனியர் அல்லது ஒழுங்கான பயனியர் சேவையில் பங்குகொள்ளவும் ‘உங்களுக்குத் திராணி’யிருக்கிறதா? அதை உங்களால் செய்யமுடியுமா?
2 இந்தியாவில் 8 பிரஸ்தாபிகளுக்கு 1 பயனியர் என்ற விகிதத்தில், சராசரியாக 1,501 விசேஷித்த, ஒழுங்கான மற்றும் துணைப் பயனியர்கள் இருந்தார்கள் என்பதை 1993 வருடாந்தரப் புத்தகத்தில் வாசிப்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருந்தது. ஆம், கடந்த வருடத்தில் 100-க்கு மேற்பட்ட ஆட்கள் ஒழுங்கான பயனியர் சேவையைத் தொடங்கினர். இது ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஏறக்குறைய 1 பிரஸ்தாபி, தன்னுடைய சூழ்நிலைமைகளைப் பரிசோதித்து ஊழியத்தில் தான் அதிகத்தைச் செய்யமுடியும் என்று கண்டுபிடிப்பதற்கு ஈடாக ஆகிறது.
3 துணைப் பயனியர் சேவை மற்றவர்களுக்கு நன்மைசெய்ய ஒரு வழியாக இருக்கிறது. கடந்த வருடத்தில் உச்சநிலையாக 1,198 துணைப் பயனியர்கள் இருந்தர்கள். அது மெச்சத்தகுந்தது. அநேக பிரஸ்தாபிகள் ஆண்டு முழுவதுமாக அடிக்கடி துணைப் பயனியர் செய்வதற்கு வழிகளை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.
4 நீங்கள் ‘அதைச் செய்ய’ முடியுமா அல்லது முடியாதா என்பதைத் தீர்மானிப்பதற்கு, முதலாவது நீங்கள் உங்களுடைய இருதயப்பூர்வமான ஆசையைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். (மத். 22:37-39) அப்போஸ்தலர் 20:35 சொல்கிறது: “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” சந்தேகமில்லாமல், இருதயத்திலிருந்து தாராளமாக ஆவிக்குரிய உதவியை அளிப்பவர்கள் சரியான ஆசையைக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமான ஒரு பிரஸ்தாபியாகவோ பயனியராகவோ இருப்பதற்கு, அந்த ஆசை இன்றியமையாதது.
5 இரண்டாவதாக, உங்களுடைய தற்போதையச் சூழ்நிலைமைகளைச் சிந்தித்துப் பாருங்கள். முழு நேரமாக சேவிப்பதற்கு உங்களுடைய அன்றாட காரியங்களில் சரிப்படுத்தல்களை உங்களால் செய்யமுடியுமா? எல்லாரும் செய்யமுடியாது. ஆனால் ஜெபசிந்தையோடுகூடிய சுய-பரிசோதனைக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ‘அதைச் செய்யும்படி’ வழியைக் கண்டுபிடிக்கின்றனர். (கொ. 4:5; w77 பக். 701) உதாரணமாக சில குடும்பங்கள், சிலர் அல்லது குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு குறிப்பிட்ட மாதங்களைத் தெரிவுசெய்கின்றன. மற்ற குடும்பங்கள் தங்களுடைய அங்கத்தினர்களில் ஒருவர் ஓர் ஒழுங்கான பயனியராக ஆதரவாளராயிருக்கின்றனர். உங்களுடைய குடும்பம் இந்தச் சாத்தியங்களுக்குக் கவனத்தைக் கொடுத்திருக்கிறதா?—நீதிமொழிகள் 11:25-ஐப் பாருங்கள்.
6 சத்தியத்தை அறிந்துகொள்வதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்வது, நீங்கள் ஒரு பிரஸ்தாபியாகச் சேவை செய்தாலுஞ்சரி ஒரு பயனியராகச் சேவை செய்தாலுஞ்சரி, உண்மையான திருப்தியைக் கொண்டுவருகிறது. உண்மையான சந்தோஷம் மற்றவர்களுக்கு நன்மையானதைச் செய்வதிலிருந்து வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம், விசேஷமாக அதைச் “செய்யும்படி உனக்குத் திராணியிரு”ந்தால் அப்படியாகும்.