பைபிள் படிப்புகளுக்காகஊக்கமாகத் தேடுங்கள்
1 இந்தப் பழைய உலகிற்கு காலம் கடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு அதிகமான அத்தாட்சி இருக்கிறது. (2 தீ. 3:1-5) இது எதை அர்த்தப்படுத்துகிறது? மக்களின் ஜீவன் அபாயத்திலிருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. என்றபோதிலும், இரட்சிக்கப்பட சிலருக்கு உதவிசெய்வது நம்முடைய சக்திக்குள் இருக்கிறது. (நீதி. 3:27) இதன் காரணமாக, பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்துவதற்கு நாம் ஊக்கமாக முயற்சிசெய்யவேண்டும்.
2 நம்முடைய பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் அதிக நன்மை சாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு மிக அதிகமாகத் தேவைப்படுவது என்னவென்றால், ஒழுங்காக நடத்தப்படும் வீட்டு பைபிள் படிப்பின்மூலம் தனிப்பட்ட உதவியாகும். அதை மதித்துணர அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவிசெய்யலாம்?
3 அநேக மக்களுக்கு அக்கறையூட்டுகிறக் கேள்விகளை நாம் எழுப்பலாம். இப்படிப்பட்ட கேள்விகளானது, ஏன் ஒழுக்கநெறிகள் மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றன, ஏன் குடும்ப வாழ்க்கை அவ்வளவு நிலையற்றதாயிருக்கிறது, ஏன் வன்முறையும் குற்றச்செயலும் இத்தகைய அச்சுறுத்தலாக இருக்கின்றன, ஏன் அன்புள்ள கடவுள் தற்கால நிலைமைகளை அனுமதிக்கிறார் மற்றும் இவைபோன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடும். உங்களுடைய பிராந்தியத்திலுள்ள மக்களுக்குத் தனிப்பட்ட அக்கறையூட்டுகிற பிரச்னைகளுக்கும் சம்பவங்களுக்கும் விழிப்புடனிருங்கள். இந்தக் கேள்விகளுக்குப் பைபிளின் தெளிவான பதில்களைச் சுட்டிக்காட்டுங்கள். நம் அனைவரையும் பாதிக்கிற இந்தப் பிரச்னைகளையும் மற்ற இன்றியமையாதப் பிரச்னைகளையும்பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்பதைக் கற்றுக்கொள்ள நாம் அளிக்கிற பிரசுரங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவிசெய்யும் என்பதை எடுத்துக்காட்டுங்கள்.
4 வீட்டுக்காரரைச் சம்பாஷணையில் கலந்துகொள்ளச்செய்வது முக்கியமாயிருக்கிறது. அவருக்கு எது அக்கறையூட்டுகிறது என்பதைப் பகுத்துணர விழிப்புடனிருங்கள். அவருடைய அக்கறைகள் அல்லது கவலைகளைச் சுற்றியே உங்களுடைய சம்பாஷணையைப் படிப்படியாகக் கொண்டுச்செல்லுங்கள். மனிதவர்க்கத்தினுடைய பிரச்னைகளுக்குப் பைபிளின் பரிகாரத்தை விளக்குகிற ஒரு புத்தகம், சிற்றேடு, பத்திரிகை, அல்லது துண்டுப்பிரதியிலுள்ள தகவலுக்குக் கவனத்தைத் திருப்புங்கள். விட்டுவருவதற்கு முன்பாக, உங்களுடைய அடுத்தச் சந்திப்பிற்கு எதிர்பார்ப்பைத் தூண்டுவிக்கும் என்று நீங்கள் எண்ணுகிற ஒன்றிரண்டு கேள்விகளை எழுப்புங்கள். நீங்கள் திரும்பிச்செல்லும்போது, அவருக்கு இந்தக் கேள்விகளை நினைப்பூட்டுவதைக் குறித்து நிச்சயமாயிருங்கள், பிறகு அவருக்கு பைபிளின் பதில்களைக் கண்டுபிடிக்க உதவிசெய்வதில் அந்தப் பிரசுரத்தைப் பயன்படுத்துங்கள்.
5 நாம் படிப்புகளைத் தொடங்கி ஒழுங்காக அவற்றை நடத்துவது மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடும். நாம் வெளி ஊழியத்தில் அல்லது சந்தர்ப்பச் சாட்சிகொடுத்தலில் சந்திக்கிறவர்களின் கவலைகளில் உண்மையான அக்கறைகாட்டுவது அவசியம். அவர்களுடைய அக்கறையைப் படிப்படியாகத் தூண்டுவதற்கு நல்ல தயாரிப்பை இது தேவைப்படுத்துகிறது. ஆவிக்குரிய உணவளிப்பின் ஒழுங்கான மாதிரிக்குள் அவர்களைக் கொண்டுவரும் வரையாகத் தொடர்ந்து சந்திப்பது பொறுமையைத் தேவைப்படுத்துகிறது. மக்களில்தானே அன்பான அக்கறைகொள்வதை இது அவசியப்படுத்துகிறது. வரவிருக்கிற அழிவிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு நாம் உண்மையுடன் அவர்களுக்கு உதவிசெய்ய விரும்பவேண்டும். நம்முடைய பைபிள் படிப்பு வேலை, ஒழுங்கான மற்றும் ஊக்கமான ஜெபத்தில் வைக்கவேண்டிய காரியமாயிருக்கிறது.—1 தெ. 5:17.
6 கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் முழுக்காட்டப்பட்ட சீஷர்களாக ஆகியிருப்பதைக் காண்பது அதிக உற்சாகமூட்டுவதாயிருக்கிறது. (மத். 28:19, 20) நாம் இப்பொழுது ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய நாற்பத்தைந்து லட்சம் பைபிள் படிப்புகளை நடத்திவருகிறோம்; இது மற்றவர்களின் ஜீவனுக்கான நம்முடைய அக்கறையைக் காட்டுகிறது. உங்களைப் பற்றியென்ன? வீட்டு பைபிள் படிப்பு வேலையில் பங்குகொள்வதற்கு ஊக்கமான முயற்சியெடுத்து வந்திருக்கிறீர்களா? இந்த விஷயத்தில், நம்முடைய ஜீவனும் மற்றவர்களுடைய ஜீவனும் நம்முடைய உண்மைத்தன்மையின்பேரில் சார்ந்திருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.—எசே. 3:17-19.