தேவராஜ்ய செய்திகள்
கம்போடியா: நம்முடைய வேலைக்காக பிப்ரவரி 8, 1993 அன்று ஓர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அனுமதியளிக்கிற அதிகாரப்பூர்வமான ஆவணம் பெறப்பட்டது; இது, மிஷனரிகள் அந்த நாட்டிற்குள் நுழைவதற்கு வழிவகுத்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, கம்போடியாவில் நற்செய்தி வெளிப்படையாக மீண்டும் பிரசங்கிக்கப்படுவதைக்குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சைப்ரஸ்: மார்ச்சில் 1,462 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சிநிலையோடுகூட, மணி நேரங்கள், மறு சந்திப்புகள், மற்றும் பைபிள் படிப்புகளில் உச்சநிலையை அந்தக் கிளைக்காரியாலயம் அறிக்கைசெய்தது.
லைபீரியா: மார்ச்சின் போது சகோதரர்கள் “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டை, கிளை அலுவலகத்திற்கு அடுத்துள்ள சங்கத்தின் ஒரு சிறிய நிலத்தில் நடத்தக்கூடியவர்களாய் இருந்தார்கள். ஆஜரானவர்களின் உச்சநிலை எண்ணிக்கை 2,711, மற்றும் 78 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர்.
ஜப்பான்: மார்ச்சில் அவர்களுடைய பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 1,77,591.
பிலிப்பைன்ஸ்: மார்ச்சில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,15,044 என்ற புதிய உச்சநிலையைச் சென்றெட்டியது.