மக்களை கவனமாகச் செவி கொடுக்கச்செய்ய பிரயாசப்படுங்கள்
1 நம்முடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் சந்திக்கிற அநேக மக்கள் தங்களுடைய மனங்களில் ஆவிக்குரியக் காரியங்களைக் கொண்டில்லை. அவர்கள் ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள், பொருளாதாரக் கஷ்டங்கள், அல்லது தனிப்பட்ட பிரச்னைகளுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கலாம். ஒரு சம்பாஷணையைத் தொடங்குவதற்கு, சுற்றுவட்டாரத்திலுள்ள அநேகருக்கு அக்கறையாயிருக்கிறப் பொதுவான விஷயங்களைப்பற்றிப் பேசுவது அடிக்கடி மிகச் சிறந்ததாயிருக்கிறது. அக்கறையைத் தூண்டுவதற்குக் கேள்விகளைப் பயன்படுத்தலாம், ஏனென்றால் இது சம்பாஷணையில் அந்த வீட்டுக்காரரை உட்படுத்துகிறது. மக்களைச் சங்கடப்படுத்தாத நோக்குநிலைக் கேள்விகள் அதிகப் பலன்தரத்தக்கவையாய் இருக்கின்றன.
2 நீங்கள் இதுபோன்ற ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்துவதன்மூலம் செவிகொடுத்துக்கேட்போரைச் சென்றெட்டலாம்:
◼ “வணக்கம். என்னுடைய பெயர் -----. நான் இந்தச் சுற்றுவட்டாரத்தில் வசிக்கிறேன். இன்று காலையில் நான் பேசினவர்களில் அநேகர் இதைக் குறித்து [சமீபத்தில் சுற்றுவட்டாரத்தில் நடந்த சம்பவத்தையோ உள்ளூருக்கு அக்கறையுள்ள விஷயத்தையோ குறிப்பிடுங்கள்] அக்கறையுடையவர்களாய் இருக்கிறார்கள். இந்த உலகம் இது மாதிரியிருக்கும்படி கடவுள் எண்ணங்கொண்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதிலுக்காக அனுமதியுங்கள். இந்தச் சமயத்தில் சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற இந்தத் துண்டுப்பிரதியை முக்கியப்படுத்திக்காட்டலாம். நேரம் அனுமதிக்கிறபடி, பக்கம் 1-லுள்ள விளக்கப்படத்தையும் பத்திகள் 1-3-லுள்ள தகவலையும் சுருக்கமாகச் சிந்தித்து, என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்பதற்கு வழிநடத்துங்கள். அல்லது என்றும் வாழலாம் புத்தகத்தை நேரடியாக அறிமுகப்படுத்தலாம். பக்கம் 157-ல் மேற்கோளிடப்பட்டிருக்கிறபடி, நீங்கள் சங்கீதம் 37:9, 10-க்குக் கவனத்தை ஈர்த்து, அந்தப் புத்தகத்திலிருந்து அதை வாசிக்கலாம். பக்கங்கள் 156-7-லுள்ள படங்களைப் பயன்படுத்தி, துன்மார்க்கம் இல்லாதபோது உலகமுழுவதும் நிலவியிருக்கும் நீதியுள்ள நிலைமைகளை விளக்கிக்காட்டுங்கள்.
3 அந்தப் புத்தக அளிப்பு மறுக்கப்பட்டால் அல்லது அந்த வீட்டுக்காரர் அதிக வேலையாக இருந்தால், எப்பொழுதும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை அளிப்பதற்குத் தயாராயிருங்கள். ஒழுக்கச்சீர்குலைவினால் எல்லா இடங்களிலும் மக்கள் கலவரமடைகிறார்கள். ஆகஸ்ட் 8 ஆங்கிலப் பதிப்பு விழித்தெழு!-வில் நீங்கள் வாசிக்கிறபடி, உங்களுடைய பிராந்தியத்திலுள்ள மக்கள் மத்தியில் அக்கறையைத் தூண்டும் என்று நீங்கள் உணருகிற சில குறிப்புகளைத் தெரிந்தெடுங்கள். சமீபத்திய மோசமான நிலைமைகளின்பேரில் அதிகமாகப் பேசிக்கொண்டில்லாமல், வீட்டுக்காரரின் கவனத்தை இந்தப் பதிப்பு ஆங்கில விழித்தெழு!-விலுள்ள “பரிபூரண ஒழுக்கநெறி வழிகாட்டி” என்ற கட்டுரைக்குக் கொண்டுவாருங்கள். மேலும் கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையைப் பின்பற்றுவதன் பயன்களைப்பற்றி நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசுங்கள். இந்த மாதத்திற்குப் பின்பு, ஆகஸ்ட் 22 ஆங்கிலப் பதிப்பு விழித்தெழு!-வை அறிமுகப்படுத்தும்போது, “எல்லா இனங்களும் சமாதானத்தில் ஒன்றுகூடி வாழும்போது” என்ற கட்டுரைக்குக் கவனத்தைத் திருப்புங்கள். வேறுபட்ட இன மக்களிடையே சமாதானமான உறவுகளை அடைவதற்கான பைபிளின் அறிவுரையைச் சிறப்பித்துக்காட்டுங்கள். இந்திய மொழிப் பதிப்புகளின் ஆகஸ்ட் 8 விழித்தெழு!-வின் முதல் கட்டுரைத் தலைப்பு, அநேக மக்கள் கேட்கிற ஒரு கேள்வியைக் கேட்கிறது: “கடவுள் யுத்தத்தில் எப்பக்கத்தையாவது ஆதரிக்கிறாரா?” நீங்கள் வீட்டுக்காரருடைய கவனத்தை, நமக்கு முன்பாக இருக்கிற அதிசயமான எதிர்பார்ப்புக்கு ஈர்க்கலாம்; இது அந்த இதழின் இரண்டாவது கட்டுரையாகிய, “யுத்தம் முடிவடையுமென என்ன நம்பிக்கை இருக்கிறது?” என்பதில் கலந்தாராயப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட விசேஷித்த நாட்களோடுகூட, எந்தச் சந்தர்ப்பத்திலும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் சமீபத்திய மற்றும் பழைய இதழ்களைச் சிறப்பித்துக்காட்டலாம்.
4 ராஜ்ய செய்தியில் அக்கறையைத் தூண்டுவதே நம்முடைய குறிக்கோள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். செவிகொடுத்துக்கேட்போரைச் சென்றெட்டுவதற்கு, முதலாவது நாம் வீட்டுக்காரரின் கவனத்தைச் சென்றெட்டி, அவருடைய சிந்தனையைத் தூண்டவேண்டும். இது செம்மறியாடுபோன்ற மக்கள் மனிதவர்க்கத்திற்கான அவருடைய நோக்கம் சம்பந்தமாக ‘கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்க’ விரும்பும்படிச் செய்விக்கும்.—சங். 85:8.