நாம் பெற்றிருக்கிறவற்றிற்கு நன்றியுடனிருத்தல்
1 “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோ. 5:8) நம் சார்பாக யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் செய்த மிக உயர்ந்த தியாகத்திற்காக நாமனைவரும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! கிறிஸ்துவினுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம், நமக்கு எந்த மனிதனும் கொடுக்க முடியாத ஒன்றாகிய நித்திய ஜீவனுக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 நாம் எவ்வாறு நம்முடைய போற்றுதலைக் காண்பிக்கலாம்? மெய்யான அறிவுக்காக தாகத்தோடிருக்கிற மக்கள் அநேகர் இருக்கிறார்கள், அந்த அறிவைக் கடவுளுடைய பரிசுத்த வார்த்தையில் மட்டுமே காணமுடியும். அவர்கள் சத்தியத்தின் அறிவை அடைய வேண்டும் என்பது யெகோவாவின் சித்தமாயிருக்கிறது. (1 தீ. 2:4) ‘தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிப்பதன்’ மூலம் சத்தியத்திற்கான நம்முடைய போற்றுதலை காண்பிக்கிறோம். (லூக். 4:43) கிறிஸ்து நமக்காக மரித்ததைப் போற்றுகிறோம் என்பதையும் மற்றவர்களை சீஷராக்குவதற்கான அவருடைய கட்டளைக்கு உண்மையுடன் கீழ்ப்படிவதன்மூலம் அவரைப் பின்பற்ற விரும்புகிறோம் என்பதையும் இந்த வேலையில் முழு இருதயத்தோடுகூடிய பங்கெடுப்பு காண்பிக்கிறது.—மத். 28:19, 20.
3 நமக்குத் திறந்திருக்கிற பிரசங்க மார்க்கங்கள் சில யாவை? அவ்வப்போது துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்வது நமக்குக் கூடியகாரியமாக இருக்கிறதா? தேவைப்படுத்தும் முயற்சியைக் கணக்குப் பார்த்தப் பிறகு, ஒருசிலர் ஒழுங்கான பயனியர் சேவையை செய்யக் கூடியவர்களாய் இருக்கலாம். இந்த நல்ல வாய்ப்புகளை அனுகூலப்படுத்திக்கொள்வதன் மூலம், ராஜ்ய நற்செய்தியைப் பரப்புவதில் நாம் செலவழிக்கிற நேரத்தின் அளவை அதிகரிக்கலாம். நீங்கள் சேர்ந்துகொள்வதைப் பற்றி கடந்த காலத்தில் சிந்தித்திருக்கலாம், ஆனால் தடைகள் இருந்தன. ஒருவேளை உங்களுடைய சூழ்நிலைமைகள் மாறியிருக்கலாம். அப்படியானால், ஒழுங்கான பயனியர் சேவையில் நுழைவதை அல்லது துணைப் பயனியராக சேவை செய்வதைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்களா?
4 நம்மைச் சுற்றி நடப்பதைப் பார்க்கையில் நம்முடைய நன்றியுணர்வு அதிக தீவிரமடைகிறது. வன்முறை, பகை, சண்டை ஆகியவை உலகமுழுவதும் அதிகரித்து வருகின்றன. நம்முடைய காலங்களை ‘கொடிய,’ ‘கையாளுவதற்குக் கடினமான,’ என்பதாக பவுல் நன்றாக விவரித்தார். (2 தீ. 3:1, NW) வேதனையூட்டும் இந்த நிலைமைகளின் மத்தியில், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நம்மிடம் நற்செய்தி ஏராளம் இருக்கிறது. காவற்கோபுரம், விழித்தெழு! என்ற இரண்டு சிறந்த பத்திரிகைகள் நம்மிடம் இருக்கின்றன, நாம் அவற்றை தனிப்பிரதிகளாக அல்லது சந்தாமூலம் இந்த மாதத்தில் அளிக்கலாம். எண்ணற்ற பொருள்களில் சிற்றேடுகளும் நம்மிடம் இருக்கின்றன. அவற்றை வாசிப்பவர்களுக்கு இந்தப் பிரசுரங்கள் மெய்யான புத்துணர்ச்சியை கொண்டுவரக்கூடும். நாம் பெற்றிருக்கிறவற்றிற்கான நன்றியுணர்வு, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தாராளமானவர்களாக இருக்கும்படி நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்.—எபி. 13:16.
5 நீங்கள் வாழ்கிற பகுதியில், ஆவிக்குரிய காரியங்களில் மக்கள் அதிக அக்கறை காட்டாமல் இருக்கலாம். அதற்கு மாறாக, பலனளிக்கிறவையாக உள்ள பிராந்தியங்கள் உள்ளன. உங்களுடைய தாய்மொழியைத் தவிர மற்றொரு மொழியை நீங்கள் பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், உங்களுடைய உதவி உண்மையிலேயே தேவையாயிருக்கிற இந்நாட்டிலுள்ள ஒரு பிராந்தியத்தில் ஓர் ஒழுங்கானப் பயனியராக சேவை செய்வதற்கு மனமுவந்து செல்வது உங்களுக்குச் சாத்தியமா? உங்களுடைய வட்டாரக் கண்காணி இந்த விஷயம் சம்பந்தமாக ஒருசில ஆலோசனைகளை வைத்திருக்கலாம்.
6 நாம் பெற்றிருக்கிறவற்றிற்கு, உண்மையிலேயே ஏராளமான நல்ல காரியங்களுக்கு, நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு யெகோவாவுடைய நாமத்தையும் நோக்கங்களையும் தெரியப்படுத்துவதன் மூலம் அவருக்கான நம்முடைய நன்றியை மிகச் சிறந்த விதத்தில் தெரியப்படுத்தலாம்.—ஏசா. 12:4, 5.