யெகோவாவே நம் படைப்பாளர்
1 கடவுள் உயிரைப் படைத்தார் என இலட்சக்கணக்கான ஆட்கள் நம்புகின்றனர். மற்ற பலர் பரிணாமத்தை நம்புகின்றனர். எதை நம்புவது என்று தெரியாமல் நிச்சயமற்றிருக்கும் ஆட்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கான புத்தகம் உயிர்—அது எவ்வாறு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? உயிர் எவ்வாறு இங்கு வந்தது, இது நம் எதிர்காலத்திற்கு எதைக் குறிக்கிறது என்பதன் பேரில் முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்த விளக்கத்தை இந்தப் பிரசுரம் அளிக்கிறது. ஜூன் மாதத்தில், இச்சிறந்த புத்தகத்தைக் கூடிய போதெல்லாம் நாம் அளிப்போம். வீட்டுக்காரருக்கு ஆங்கிலம் தெரியாதென்றால், புதிய 192-பக்க புத்தகங்களில் ஒன்று அளிக்கப்படவேண்டும்.
2 விஞ்ஞான சமுதாயத்திலுள்ள முதன்மையான நபர்களும்கூட இப்புத்தகத்தின் தர்க்கரீதியை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். நெதர்லண்ட்ஸிலுள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் எழுதினார்: “இப்புத்தகம் உண்மையில் எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சிவிடுகிறது. அதிகாரங்கள் தர்க்கரீதியில் எழுதப்பட்டுள்ள முறையும் படங்களும் அந்தளவுக்கு இந்நாளின் அறிவியலுக்கு ஒத்திருப்பதால் இவற்றுக்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்க ஒருவர் கூருணர்வற்றவராய் இருக்கவேண்டும்.” ஒரு வழக்குரைஞர் சொன்னார்: “நான் அதை நான்கு முறை படித்துவிட்டேன், அதை உருவாக்குவதில் உட்பட்டிருந்திருக்கக் கூடிய ஆழ்ந்த ஆராய்ச்சியையும் புலமையையும் ஆதாரப்பூர்வ சான்றுகளையும் இன்னும் வியக்கிறேன்.” ஆகவே இப்புத்தகத்தை இன்னும் அநேகர் மதித்துணர்வர் என்று நாம் நிச்சயமாய் நம்பலாம்.
3 நீங்கள் இதைப்போன்ற ஒரு சுருக்கமான அளிப்பைக் கொடுக்க விரும்பக்கூடும்:
◼ பக்கம் 6-க்குத் திறந்து சொல்லவும்: “நம் அழகிய பூமியும் அதிலுள்ள உயிரும் தற்செயலாக விளைந்தன என்று அநேகர் நினைக்கின்றனர். இவையெல்லாம் எப்படி வந்தன என்பதற்கு நியாயமான விளக்கம் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] அதிக வல்லமையுள்ளவராக இருப்பது மட்டுமன்றி நம்மை அதிகமாய் நேசிக்கும் ஒரு படைப்பாளரைப் பற்றிய பைபிள் பதிவை திரளான ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. அவருடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.” சங்கீதம் 83:17-ஐ வாசித்து, எப்படி இந்த முழு பூமியையும் பரதீஸாக ஆக்குவது அவருடைய சித்தம் என்பதை சுருக்கமாக விளக்குங்கள்.
4 முக்கிய குறிப்புக்கு சீக்கிரமாக வர விரும்பினால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இந்தக் கேள்வியைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?” புத்தகத்தின் தலைப்பை சுட்டிக்காட்டுங்கள், பக்கம் 7-க்குத் திருப்பி, பத்தி 2-ல் உள்ள கேள்விகளை வாசித்து, இந்தப் புத்தகம் பைபிளிலிருந்து திருப்திகரமான பதில்களை அளிக்கிறது என விளக்குங்கள்.
5 அல்லது இதை நீங்கள் முயற்சிசெய்யலாம்:
◼ “இப்பூமி எப்படி வந்தது என எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? பிரபஞ்சத்தில் ஏற்பட்ட ஏதோ பிரமாண்டமான வெடிப்பின் விளைவாகத்தான் இது உருவானது என அநேகர் சொல்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுள் பூமியை நம் நிரந்தர வீடாக இருக்கும்படி படைத்தார் என்று பைபிள் கற்பிக்கிறது. நம் சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கிரகங்களைவிட இது வித்தியாசமானது. நமக்குத் தெரிந்தவரை, உயிரை ஆதரிப்பதற்குத் தேவையான எல்லா சிக்கலான ஏற்பாடுகளும் கொண்ட ஒரே இடம் பிரபஞ்சத்தில் இது ஒன்றுதான்.” பக்கம் 130-ல் உள்ள பாரா 5-க்குத் திருப்பி, ஏன் இப்பூமி முதன்மையான உருவமைப்பாளரின் வேலையாக இருக்கவேண்டும் என்று விளக்குங்கள்.
6 மற்றொரு அணுகுமுறை இதைப்போன்று இருக்கக்கூடும்:
◼ “நாம் மனிதக் குரங்கிலிருந்து பரிணமித்திருக்கிறோம் என்று சிலர் நினைக்கின்றனர். நம் முன்னோர்கள் இதைப்போன்று தான் இருந்தனர் என்று அவர்கள் கூறுகின்றனர். [பக்கம் 89-ல் உள்ள படத்தைக் காட்டுங்கள்.] அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பாரா 20-ல் சொல்லப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, பிறகு அப்போஸ்தலர் 4:24-ஐ வாசியுங்கள், அது யெகோவாவை நம் படைப்பாளராகவும் உயிரளிப்பவராகவும் குறிப்பிடுகிறது. “பைபிளில் உரைக்கப்பட்டிருப்பவற்றோடு தொடர்புபடுத்தி முழு பரிணாமக் கொள்கையையும் இப்புத்தகம் ஆராய்கிறது.” பக்கம் 5-ல் உள்ள பொருளடக்கத்தைக் குறிப்பிட்டு, அதிகாரங்கள் 1, 7, 15, 19 போன்றவற்றின் தலைப்புகள் சிலவற்றை சுட்டிக்காட்டுங்கள்.
7 யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசமற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கும் உண்மை மனதுள்ள ஆட்களுக்கு இப்புத்தகம் ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும். படைப்பு புத்தகத்திலுள்ள உண்மைத் தகவல், நம்மை அன்புடன் கவனித்துக் கொள்ளும் நம் படைப்பாளரின் பேரில் போற்றுதலில் வளர அத்தகையோருக்கு உதவக்கூடும்.