“தொடர்ந்து விழித்திருங்கள்”
1 மத்தேயு 26:38-41-ல் (NW) பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளை இயேசு சொன்னபோது, அவர் தம்முடைய மனித வாழ்க்கையின் மிக நெருக்கடியான தறுவாயை நெருங்கிக்கொண்டிருந்தார். அது மனித வரலாறு முழுவதிலுமே மிக முக்கியமான சமயமாக இருக்கும். மனிதகுலம் முழுவதன் இரட்சிப்பும் அதில் உட்பட்டிருந்தது. இயேசுவின் சீஷர்கள் ‘தொடர்ந்து விழித்திருக்க’ வேண்டிய அவசியம் இருந்தது.
2 மீட்பவராகவும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறவராகவும் தம்முடைய இரட்டை நியமிப்பில் இயேசு வரும் சமயத்தில் இன்று நாம் இருக்கிறோம். காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்திருக்கும் விழிப்புள்ள கிறிஸ்தவர்களாக நாம் மீட்பை எதிர்நோக்கியவர்களாய் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதில்லை. நாம் எல்லா நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறோம். யெகோவாவுக்கான நம்முடைய சேவையில் ‘கடினமாக உழைத்து, பிரயாசப்படுவது’ அவசியமாக இருக்கிறது. (1 தீ. 4:10, NW) தனிப்பட்ட விதத்தில் நம் ஒவ்வொருவரையும் பற்றியதென்ன? நாம் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாக இருக்கிறோமா?
3 நம்மைநாமே சோதித்துப்பார்த்தல்: இயேசு இவ்வாறும் எச்சரித்தார்: “உங்கள்மீது கவனம் செலுத்துங்கள்.” (லூக். 21:34, 35, NW) நாம் நம்மீது கவனம் செலுத்தி, ‘கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக’ இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும். (பிலி. 2:15) நாம் இயேசுவைப் பின்பற்றி, கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருக்கிற நியமங்களுக்கு இசைவாக நடந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா? “பொல்லாங்கனுக்குள் கிடக்கிற” உலகத்துக்கே உரித்தான கிறிஸ்தவமற்ற நடத்தையை நாம் தவிர்க்க வேண்டும். (1 யோ. 5:19; ரோ. 13:11-14) வேதவசனங்களின் நோக்கில் நம்மைநாமே சோதித்துப்பார்க்கையில், இயேசு போதித்ததுபோல் நாம் உண்மையிலேயே விழிப்புடன் இருக்கிறோமா?
4 மூப்பர்கள், சபையில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில், மந்தையை எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதைக்குறித்து அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு, ஊக்கமாகச் செயல்பட விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். (எபி. 13:17) குடும்பத்தலைவர்கள், தங்கள் குடும்பங்களை யெகோவாவின் வழிகளில் வழிநடத்திச்செல்லும் விசேஷித்த பொறுப்பை உடையவர்களாய் இருக்கிறார்கள். (ஆதி. 18:19; யோசு. 24:15; ஒப்பிடுக: 1 தீமோத்தேயு 3:4, 5.) மேலும், ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் என்ற வேதப்பூர்வ கட்டளையை நாம் எல்லாரும் நிறைவேற்றுவது எவ்வளவு இன்றியமையாதது! அது உண்மை கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கிறது.—யோவா. 13:35.
5 மற்றவர்களை எச்சரிக்க விழிப்புள்ளவர்களாய் இருங்கள்: தொடர்ந்து விழிப்புடன் இருப்பது, நம்மீது கவனம் செலுத்துவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. மற்றவர்களைச் சீஷராக்குவதற்கான கட்டளையை நாம் கொண்டிருக்கிறோம். (மத். 28:19, 20) இந்த உலகம் எதிர்ப்படும் அழிவைத் தப்பிப்பிழைக்கும்படியாக மற்றவர்களை எச்சரிப்பதற்கு அயலாருக்கான அன்பு நம்மைத் தூண்டவேண்டும். இது எல்லா கிறிஸ்தவர்கள் மேலுமிருக்கும் உத்தரவாதமாகும். இது நம் வணக்கத்தின் இன்றியமையாத பாகமாகும். (ரோ. 10:9, 10; 1 கொ. 9:16) உயிர்காக்கும் இந்த வேலையிடமாக நாம் அடிக்கடி அசட்டையான போக்கை அல்லது நேரடியான எதிர்ப்பை எதிர்ப்படுகிறோம். பெரும்பாலோர் நம் எச்சரிப்பை அசட்டைசெய்தாலும், விடாமல் தொடர்ந்திருக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. (எசே. 33:8, 9) கடவுளுக்கும் அயலாருக்குமான உண்மையான அன்பு, விடாமுயற்சியுடன் செயல்பட நம்மைத் தூண்டும்.
6 இது கவனமின்றி இருப்பதற்கான நேரம் அல்ல. நமக்கு ஒரு கண்ணியாகும் விதத்தில், வாழ்க்கையின் அன்றாட கவலைகள் நம்மைத் திசைதிருப்ப அனுமதித்துவிடவோ, இந்த உலகின் இன்பங்களில் அவ்வளவாக ஈடுபட்டுவிடவோ கூடாது. (லூக். 21:34, 35) அவசர உணர்விற்கான தேவை எப்போதையும்விட இப்போதே அதிகமாக இருக்கிறது. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராக இயேசு கிறிஸ்து நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காலம் விரைவாக நெருங்கிக்கொண்டிருக்கிறது. விழிப்புள்ளவர்களாக, கவனமுள்ளவர்களாக, எச்சரிக்கையுள்ளவர்களாக இருப்பவர்கள் மட்டுமே தப்பிப்பிழைப்பார்கள். இயேசுவின் போதனைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து, ‘இவைகளுக்கெல்லாம் தப்பினால்’ எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருப்போம்!—லூக். 21:36.