சிற்றேடுகள் கொடுக்கப்பட்ட எல்லாரிடமும் மறுசந்திப்புகளைச் செய்யுங்கள்
1 அப்போஸ்தலன் பவுல், பிலிப்பியர்கள் ‘தன்னை விசாரிப்பதற்காக மறுபடியும் மனமலர்ந்ததற்காக’ அவர்களைப் பாராட்டினார். (பிலி. 4:10) அவர்களுடைய உதாரணத்தை வெளி ஊழியத்திற்கு முன்மாதிரியாக நாம் பயன்படுத்தினால், யாரிடம் சாட்சிகொடுக்கிறோமோ அவர்கள் சார்பாக ‘மறுபடியும் மனமலர்ந்து’ மறுசந்திப்புகளைச் செய்யும்படி தூண்டுவிக்கப்படுவோம்.
2 “நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?” என்ற சிற்றேட்டை அளித்திருந்தால் நீங்கள் இதுபோன்ற ஒன்றைச் சொல்லலாம்:
◼ “அன்று நடந்த நம் உரையாடலைப்பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்; அப்போது இரண்டு வசனங்கள் என் நினைவிற்கு வந்தன; அவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பூமியின்மீதாக கடவுள் ஆட்சி செய்வதைப்பற்றி நாம் பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இது சம்பவிக்கும் என்று பைபிளில் யெகோவா தேவன் வாக்களித்திருக்கிறார். [தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.] அது நிஜமாகவே சம்பவிக்கலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகத் தம்மிடமுள்ள திறமையைப்பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். [ஏசாயா 55:11-ஐ வாசியுங்கள்.] கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கையை வைப்பதற்கு அது நம்மை உற்சாகப்படுத்த வேண்டாமா? ஆனால் கடவுள் எப்போது தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்?” அடுத்த முறை வரும்போது அந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று சொல்லுங்கள்.
3 “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற சிற்றேட்டை பெற்றுக்கொண்ட ஒருவரிடம் மறுசந்திப்பு செய்யும்போது, நீங்கள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தக்கூடும்:
◼ “ஒருவரை மரணத்தில் இழந்துவிடுவது பற்றிய நம்முடைய கலந்தாலோசிப்பின் காரணமாக, மீண்டும் இங்கு வருவதற்கு நான் விசேஷ முயற்சி எடுத்தேன்.” பின்வருமாறு சொல்லுகையில், 30-ம் பக்கத்திலுள்ள படத்தைக் காண்பியுங்கள்: “மக்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு தங்கள் அன்பானவர்களுடன் மீண்டும் ஒன்றுசேரக்கூடிய இந்த மகிழ்ச்சியான காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது எங்கு சம்பவிக்கும், பரலோகத்திலா பூமியிலா என்ற கேள்வியை நான் உங்களிடம் கேட்டுவிட்டுச் சென்றேன். இந்தச் சிற்றேட்டின் 26-ம் பக்கத்தில் பைபிளின் பதிலை நீங்கள் ஒருவேளை கண்டிருக்கலாம்.” மூன்றிலிருந்து ஐந்து பாராக்களிலுள்ள முக்கிய குறிப்புகளை நீங்கள் கலந்துபேசிவிட்டு, யோவான் 5:21, 28, 29-ஐ வாசியுங்கள். நேரம் அனுமதிக்கும் அளவிற்கு, அந்தப் பக்கத்திலுள்ள மற்ற வசனங்களில் எவற்றையேனும் வாசியுங்கள்.
4 “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிற்றேட்டிலிருந்து ஒரு படிப்பைத் தொடங்கினீர்களா? மறுசந்திப்பின்போது நீங்கள் இவ்வாறு செய்யலாம்:
◼ மறுபடியும் 30-ம் பக்கத்துக்குத் திருப்பி, இந்தக் கேள்வியைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள்: “பைபிள் என்ன வழிகளில் தலைசிறந்தது?” பக்கங்கள் 3 மற்றும் 4-க்குத் திருப்பி, 1-4 பாராக்களையும் சிற்றேட்டின் அட்டையிலுள்ள படத்தையும் சிந்தியுங்கள். பாரா 4-ன் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிற ஓரிரு வசனங்களை வாசியுங்கள். அப்படிப்பட்ட மகத்தான நம்பிக்கையை அளிக்கும் புத்தகம் பைபிள் மட்டுமே என்பதை விவரியுங்கள். மறுபடியும் சந்திக்கச் செல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள். மூன்றாம் சந்திப்பிற்குப்பின், அந்தப் படிப்பு தொடருமென தோன்றினால், ஒரு புதிய படிப்பாக நீங்கள் அதை அறிக்கை செய்யத் தொடங்கலாம்.
5 “கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும்” என்பதன்பேரிலான கலந்தாலோசிப்பை இவ்விதமாக நீங்கள் மீண்டும் தொடரக்கூடும்:
◼ “பைபிளில் கடவுளுடைய பெயரை முன்பு நான் உங்களுக்குக் காண்பித்தேன். யெகோவா என்ற பெயரை அறிந்திருப்பதும் அதைப் பயன்படுத்துவதும் நம் வணக்கத்தின் இன்றியமையாத ஒரு பாகமாக இருக்கிறது.” பக்கம் 31-க்குத் திருப்பி, கடைசி நான்கு பாராக்களிலுள்ள முக்கிய குறிப்புகளைச் சிந்தித்துவிட்டு, யோவான் 17:3-ஐயும் மீகா 4:5-ஐயும் வாசியுங்கள். கடவுளுடைய பெயர் எப்படி சரியான வழியில் பரிசுத்தப்படுத்தப்படும் என்றும் ஒரு பரதீஸான பூமியில் நாம் எப்படி ஆசீர்வாதங்களை அனுபவிக்கமுடியும் என்றும் காண்பிக்கக்கூடிய பைபிள் படிப்பு திட்டம் ஒன்றை நாம் அளிக்கிறோம் என்பதை விவரியுங்கள்.
6 ஆகவே, நீங்கள் முதலில் சந்தித்தவர்களின் சார்பாக மறுபடியும் மனமலருங்கள். மீண்டும்போய் சந்திப்பதை விடாமல் தொடருங்கள்; பயனுள்ள ஏதோவொன்றைப் பகிர்ந்துகொள்ளும்படி தயாரியுங்கள். புதிய சீஷரை உண்டுபண்ணுவதில், ‘உண்மையில் பலன்தரத்தக்க’ ஒருவராக நீங்கள் இருக்கலாம்.—மத். 13:23, NW.