தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராவது—நாம் உறுதியாய் நிற்பவர்களாயிருக்க இன்றியமையாதது
1 “விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களா”யிருக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை உந்துவித்தார். (தீத். 1:9, 14) சபைக் கூட்டங்களில் நாம் ஆரோக்கியமான கருத்துக்களை சிந்திக்கிறோம் மற்றும் “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்”பதற்கு எவ்வாறு ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தால் நம்மை நாமே தொடர்ந்து முழுமையாக உடுத்துவித்துக்கொள்ளுவது என போதிக்கப்படுகிறோம்.—எபே. 6:11; பிலி. 4:8.
2 நமக்குத் தேவையானவற்றை கூட்டங்கள் அளிக்கின்றன: நாம் உறுதியாக நிற்பவர்களாயிருக்க சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் ஆஜராவது இன்றியமையாதது. (1 கொ. 16:13) கூட்டங்களில் கடவுளுக்கு நன்றிசெலுத்தவும் துதிக்கவும், அதோடுகூட சபையாரின் சார்பாகவும், சபையின் தேவைகளின் சார்பாகவும் அவரிடம் விண்ணப்பிப்பதற்கும் ஜெபங்கள் செய்யப்படுகின்றன. (பிலி. 4:6, 7) யெகோவாவை வணங்குகையில் இராஜ்யப் பாடல்களில் கலந்துகொள்வது நம்மை எழுச்சியடையச் செய்து, நம்முடைய விருப்பார்வங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த உதவி செய்கிறது. (எபே. 5:19, 20) இராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் நம்முடைய ஒருமித்த தோழமை நம்மை உற்சாகப்படுத்துகிறது, கட்டியெழுப்புகிறது, மேலும் நமக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது.—1 தெ. 5:11.
3 கடந்த ஏப்ரலில் கொடுக்கப்பட்ட “பொய் மதத்தின் முடிவு சமீபம்” என்ற விசேஷித்த பேச்சு, மகா பாபிலோனிலிருந்து வெளிவர உடனடியாக செயல்பட வேண்டியதன் அவசரத்தன்மையை சத்தியத்தை நேசிக்கிறவர்களின் மனங்களில் பலமாக பதியவைத்தது. (வெளி. 18:4) ஜூன், ஜூலை மாதங்களில், நீதிமான்களின் பாதைக்கு அறிவொளியூட்டிய ஒளிப் பிரகாசங்களைப் பற்றிய மூன்று காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளைக் கற்றறிந்தது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது! (நீதி. 4:18) அந்தக் கூட்டங்களுக்கு ஆஜராவதை அசட்டை செய்திருப்போமேயானால் எதைத் தவறவிட்டிருப்போம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
4 நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் பக்கம் 72-ல் குறிப்பிடுவதுபோல, தேவராஜ்ய ஊழியப் பள்ளி முழு சபையின் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பயிற்றுவிப்புக்கான ஒரு ஏற்பாடாகும். தற்போதைய ஆங்கில மொழி அட்டவணையின் ஒரு அம்சம், அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தை உபயோகிப்பதன்மூலம் அமைப்பின் நவீன கால சரித்திரத்துடன் நன்கு அறிமுகமானவர்களாவதற்கு நமக்கு உதவிசெய்கிறது. இந்தப் பயிற்றுவிப்புக்கான வாய்ப்பை நாம் தவறவிடுவதன்மூலம் ஆபத்துக்குள்ளாகக்கூடாது.
5 ஊழியத்தில் அதிக திறம்பட்டவர்களாக ஆவதற்கு நம்முடைய ஊழியக் கூட்டம் நம்மை ஆயத்தப்படுத்துகிறது. ராஜ்ய செய்தி எண் 34-ன் விரிவான விநியோகிப்பில் நாம் கலந்துகொள்ளுவதற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட அந்தக் கூட்டத்தால் இது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. இந்த வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதங்கள் மிகுதியாயிருந்ததை உலகளாவிய விதத்தில் பெற்ற வழக்கத்துக்கு மாறான பலன்களில் காணமுடிந்தது. (2 கொரிந்தியர் 9:6, 7-ஐ ஒப்பிடுக.) தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜரானவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர், அந்த ஏற்பாட்டிற்கு அளித்த ஆதரவைத் திரட்ட அவர்கள் உதவினர்.
6 சபை புத்தகப் படிப்பில், வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தின் உதவியுடன் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்கிற காரியங்களால் நம்முடைய அவசரத்தன்மையின் உணர்வுத்திறன் உயர்ந்திருக்கிறது. உலகக் காட்சியில் சம்பவங்கள் வேகமாகக் கடந்துசெல்கையில் வெளிப்படுத்துதலின் ஆழமான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
7 தவறாமல் கூட்டங்களில் ஆஜராவதற்கு முன்னுரிமை அளியுங்கள்: அநேக தேசங்களில் நம்முடைய சகோதரர்கள் துன்புறுத்துதலை அனுபவித்து வருகின்றனர், இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் கூடிவருவது தங்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணருகின்றனர். உதாரணமாக, புருண்டி, ருவாண்டா, லைபீரியா, பாஸ்னியா, ஹெர்ட்ஸகோவினா ஆகிய நாடுகளில் ஆஜராகும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்குக்கும் அதிகமான அநேக புதியவர்கள் கூட்டங்களில் காணப்படுகிறார்கள். இவ்விதமாக ஒரே ஆவியில் உறுதியாய் நிலைத்துநிற்க சகோதரர்களுக்கு யெகோவா உதவுகிறார்.—பிலி. 1:27; எபி. 10:23-25.
8 தவறாமல் கூட்டத்தில் ஆஜராவதை அசட்டை செய்துகொண்டிருக்கும் எவரும் இந்தப் போக்கை சரிசெய்வதற்கு இப்போதே நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். (பிர. 4:9-12) உறுதியாய் நிற்பதற்கு தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராவது அளிக்கும், முதிர்ச்சியடைந்தவர்களுடனான பரஸ்பர பரிமாற்றம் நமக்குத் தேவை.—ரோ. 1:11.