உங்களுடைய முன்னேற்றத்தை விளங்கப்பண்ணுங்கள்
1 நீங்கள் ராஜ்ய செய்தியை முதலில் கேட்ட அந்த சமயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். எளிய சத்தியங்கள், அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கான உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டிற்று. யெகோவாவின் வழிகள் உங்களுடைய வழிகளைக் காட்டிலும் மிக அதிக உயர்ந்ததாயிருக்கிற காரணத்தினால் உங்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யவேண்டிய அவசியத்தைச் சீக்கிரத்தில் நீங்கள் காணமுடிந்தது. (ஏசா. 55:8, 9) நீங்கள் முன்னேற்றம் செய்து, உங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டீர்கள்.
2 சில ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்த பிறகும்கூட, மேற்கொள்ளப்படவேண்டிய பலவீனங்கள் இன்னுமிருந்தன. (ரோ. 12:2) ஒருவேளை உங்களுக்கு மனித பயமிருந்தது, அது வெளி ஊழியத்தில் பங்குகொள்ள உங்களைத் தயங்கச்செய்தது. அல்லது ஒருவேளை கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதில் நீங்கள் குறைவுபட்டிருந்திருக்கலாம். பின்வாங்குவதற்குப் பதிலாக, நீங்கள் உங்களுக்கென்று தேவராஜ்ய இலக்குகளை வைப்பதன்மூலமாக முன்னேற்றம் செய்ய தீர்மானமாயிருந்தீர்கள்.
3 நீங்கள் உங்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்து இப்போது அநேக ஆண்டுகளாகியிருக்கலாம். பின்னோக்கிப் பார்க்கும்போது, உங்களில் நீங்கள் என்ன முன்னேற்றத்தைக் காண்கிறீர்கள்? உங்களுடைய இலக்குகளில் சிலவற்றை நீங்கள் அடைந்திருக்கிறீர்களா? “ஆரம்பத்திலே கொண்ட” அதே விதமான வைராக்கியத்தைக் கொண்டிருக்கிறீர்களா? (எபி. 3:14) “நீ தேறுகிறது [“உங்களுடைய முன்னேற்றம்,” NW] யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்துத்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” என்று பவுல் துரிதப்படுத்தினபோது, தீமோத்தேயு ஏற்கெனவே பலவருடங்கள் அனுபவம் பெற்ற ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராயிருந்தார்.—1 தீ. 4:15.
4 தனிப்பட்ட பரிசோதனை தேவை: நம்முடைய பழைய போக்கைக் குறித்து நாம் சிந்திக்கும்போது, துவங்கினபோது நமக்கிருந்த சில பலவீனங்கள் இன்னும் இருப்பதை நாம் காண்கிறோமா? நாம் வைத்த சில இலக்குகளை அடைய தவறியிருக்கிறோமா? அப்படியிருந்தால், ஏன்? நமக்கு நல்ல உள்நோக்கங்கள் இருந்திருந்தாலும், நாம் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருக்கலாம். ஒருவேளை வாழ்க்கையின் கவலைகள் அல்லது இந்த ஒழுங்குமுறையின் அழுத்தங்கள் நம்மைப் பின்வாங்கச்செய்ய நாம் அனுமதித்திருக்கலாம்.—லூக். 17:28-30.
5 கடந்தகாலத்தைக் குறித்து எதுவும் செய்ய முடியாமல் போனாலும், எதிர்காலத்தைக் குறித்து நிச்சயமாகவே எதையாவது நாம் செய்ய முடியும். நம்மை நாமே நேர்மையாக மதிப்பீடு செய்து, எங்கே குறைவுபடுகிறோமென்பதைத் தீர்மானித்து, முன்னேற்றம் செய்வதற்காக முழு முயற்சியெடுக்க முடியும். இச்சையடக்கம், சாந்தம், அல்லது நீடியபொறுமை போன்ற கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதில் நாம் இன்னும் முன்னேற்றம் செய்யவேண்டியிருக்கலாம். (கலா. 5:22, 23) மற்றவர்களோடு பழகுவதில் அல்லது மூப்பர்களோடு ஒத்துழைப்பதில் நமக்கு பிரச்சினையிருக்குமேயானால், மனத்தாழ்மை மற்றும் மனப்பணிவை வளர்த்துக்கொள்ளவேண்டியது முக்கியம்.—பிலி. 2:2, 3.
6 ஊழிய சிலாக்கியங்களை எட்ட முயலுவதன் மூலமாக நம்முடைய முன்னேற்றத்தை விளங்கப்பண்ண முடியுமா? கூடுதலான முயற்சியோடு சகோதரர்கள் உதவி ஊழியர்களாவதற்கோ அல்லது மூப்பர்களாவதற்கோ தகுதிபெற முடியும். நம்மில் சிலர் ஒழுங்கான பயனியர்களாக முடியும். இன்னும் அநேகருக்கு துணைப் பயனியராகச் சேவிப்பது அடையத்தக்க ஒரு இலக்காக இருக்கக்கூடும். மற்றவர்கள் தனிப்பட்ட படிப்பு பழக்கங்களை மேம்படுத்துவதற்கும், சபை கூட்டங்களில் இன்னும் அதிக சுறுசுறுப்பாக பங்குகொள்வதற்கும், அல்லது சபைப் பிரஸ்தாபிகளாக இன்னுமதிக பலன் தரத்தக்கவர்களாவதற்கும் முயற்சி செய்யக்கூடும்.
7 நாம் எங்கே முன்னேற்றம் செய்யவேண்டுமென்று தீர்மானிப்பது, சந்தேகமில்லாமல், நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும். “முதிர்ச்சியை நோக்கி முன்னேற” நாம் எடுக்கும் உள்ளார்ந்த முயற்சி நம்முடைய சந்தோஷத்தை அதிகரித்து நம்மை இன்னும் அதிக பலன்தரக்கூடிய சபை அங்கத்தினர்களாக்கும் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.—எபி. 6:1, NW.