சரியான மனச்சாய்வுள்ளவர்களைத் தேடுங்கள்
1 பிரசங்க வேலையின் ஒரு நோக்கம் என்னவென்றால், ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கேற்ற சரியான மனச்சாய்வுள்ளவர்களை’ கண்டுபிடிப்பதாகும். (அப். 13:48, NW) இதை நிறைவேற்றுவதற்கு, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை விநியோகிப்பது ஒரு சிறந்த வழியாக நிரூபித்திருக்கிறது, ஏனென்றால் நம் பத்திரிகைகள், ராஜ்ய நம்பிக்கையைக் குறித்து மக்களை உணர்வுள்ளவர்களாக்கி இருக்கின்றன. ஏப்ரலில் இந்தப் பத்திரிகைகளுக்காக சந்தாக்களை நாம் அளிப்போம். அக்கறை காண்பிக்கப்படும் இடத்தில், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் நாம் புதிய பைபிள் படிப்புகளைத் தொடங்கலாம். உங்களுக்கு பயனளிக்கக்கூடிய ஆலோசனைகள் சில இங்கே:
2 ஏப்ரல் 1, “காவற்கோபுரம்” பத்திரிகையை பயன்படுத்தும்போது, கடந்த வருட மாவட்ட மாநாட்டின் பொதுப்பேச்சாகிய “நித்திய ராஜாவை துதியுங்கள்!” என்பதில் கவனம்செலுத்தும் கட்டுரையைக் காண்பித்து, நீங்கள் இவ்வாறு சொல்லக்கூடும்:
◼ “நாங்கள் சந்தித்து பேசுகிற அநேகர் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். ஒருசிலருக்கு கடவுளில் நம்பிக்கை வைப்பதே கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கத்தக்க நிஜமான அத்தாட்சிகளால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். [சங்கீதம் 104:24-ஐ வாசியுங்கள்.] ஒரு காமராவை அல்லது ஒரு கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது, புத்திக்கூர்மையுள்ள ஒரு திட்டமைப்பாளரால் அது உண்டாக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நாம் உடனடியாக ஒத்துக்கொள்கிறோம். அதைவிட சிக்கல் வாய்ந்த காரியங்களாகிய பூமி மற்றும் மனிதராகிய நம்மைப் போன்ற படைப்புகள், தற்செயலாக தோன்றின என்று சொல்லுவது நியாயமானதாக இருக்குமா?” கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு ஒரு நியாயமான காரணத்தைக் காட்டுவதற்காக அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பாராவை பயன்படுத்துங்கள். அந்தப் பத்திரிகையின் மதிப்பைப் பற்றி விளக்கி, ஒரு சந்தா அளியுங்கள்.
3 “உண்மையான வணக்கம் ஏன் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறது” என்ற கட்டுரையை ஏப்ரல் 15, “காவற்கோபுரம்” பத்திரிகை சிறப்பித்துக் காட்டுகிறது. பொருத்தமாக இருந்தால், அதை அளிப்பதற்கு முன், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “உலகில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருக்கையில், அவை அனைத்துமே கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்கு அனுமதியுங்கள்.] மதப்பற்றுள்ள அநேகர் எவ்வளவு உரிமைபாராட்டிக் கொண்டிருந்தாலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்யாதவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என்று இயேசு முன்னறிவித்தார். [மத்தேயு 7:21-23-ஐ வாசியுங்கள்.] இயேசுவால் போதிக்கப்பட்ட உண்மை மதத்தை நாம் அடையாளம் கண்டுகொள்வது முக்கியமாக இருக்கிறது.” பக்கம் 16-ல் தொடங்கும், “உண்மையான மதம் என்ன கனியைக் கொடுக்க வேண்டும்” என்ற தலைப்புக்குத் திருப்பி, அந்தக் குறிப்பை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தைக் கலந்துபேசுங்கள்.
4 ஏப்ரல் 22, “விழித்தெழு!” பத்திரிகையிலிருந்து, “இனி போர்களே இல்லாமல் போகையில்” என்ற முக்கிய பொருளை சிறப்பித்துக் காட்டுகையில், நீங்கள் இவ்வாறு சொல்லக்கூடும்:
◼ “இந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போர்கள் நடந்திருக்கின்றன. இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா உலகத் தலைவர்களுமே சமாதானத்தை விரும்புவதாகச் சொல்லுகிறார்கள். எனக்கு தெரிந்த அனைவரும் அதே காரியத்தைத்தான் சொல்லுகிறார்கள். எல்லாருமே சமாதானத்தை விரும்புகிறார்கள் என்றால், ஏன் அவர்களால் அதை அடைய முடியவில்லை? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பூமியில் உண்மையான சமாதானத்தைக் காண நமக்கு என்ன தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” வீட்டுக்காரர் பதிலளித்த பின், 8 மற்றும் 9-ம் பக்கங்களுக்குத் திருப்பி, சங்கீதம் 46:8, 9 போன்ற வசனங்களை வாசியுங்கள். படங்களையும், மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனங்களையும் பயன்படுத்தி, என்றென்றும் நிலைத்திருக்கும் உலகளாவிய சமாதானத்தை கடவுளுடைய ராஜ்யம் எப்படி கொண்டு வரும் என்று காண்பியுங்கள். பின்னர் சந்தாவை அளித்து, திரும்பவும் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
5 அலுவலாக இருக்கும் பலரை நீங்கள் கண்டீர்களானால், இவ்வாறு சொல்லிப் பார்க்கலாம்:
◼ “ரொம்ப வேலையாகவே உள்ள வாழ்க்கையை நடத்தி, வாழ்க்கையின் ஆவிக்குரிய அம்சத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க குறைந்த நேரத்தையே உடைய மக்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறோம். எங்கள் பத்திரிகைகளாகிய காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கிற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி சுருக்கமான தகவலை அளிப்பதற்கு ஏற்றவண்ணம் திட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதிகளை நீங்கள் பெற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”
6 சந்தாவை மறுக்கிறவர்களுக்கு, ஒரு பத்திரிகைக்கு ரூ. 4.00 என்ற நன்கொடைக்கு பல பிரதிகளை அளிக்க நிச்சயமாய் இருங்கள். ‘மேம்பட்ட ஒன்றைப் பற்றிய நற்செய்தியை’ கொண்டுவருகிற காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதன் மூலம் அவர்கள் நிச்சயமாகவே நன்மை அடைவார்கள்.—ஏசா. 52:7, NW.