உங்கள் அயலாரிடம் சத்தியத்தைப் பேசுங்கள்
1 இரண்டு பிரதானக் கட்டளைகளில் ஒன்றானது: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரவேண்டும்,” என்பதாகும். (மத். 22:39, தி.மொ.) இத்தகைய அன்பானது, நமக்கு இருக்கும் மிகச் சிறந்ததை—கடவுளுடைய வார்த்தையில் நாம் கண்டடைந்திருக்கும் சத்தியத்தை—நம்முடைய அயலாருடன் பகிர்ந்துகொள்ளும்படி நம்மைத் தூண்டுவிக்கும். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள், சத்தியத்தைப் பற்றிய பைபிளின் செய்தியை விவரித்துரைப்பதால், மே மாதத்தின்போது இந்தப் பத்திரிகைகளுக்குச் சந்தாக்கள் ஏற்கும்படி அளிப்பது, ‘நம்முடைய அயலாரிடம் சத்தியத்தைப் பேசுவதற்கு’ ஒரு வழியாக நமக்கு இருக்கிறது.—எபே. 4:25, NW.
2 உங்கள் கையிருப்பிலுள்ளவைத் தீரும் வரையில் ஏப்ரல் 22 “விழித்தெழு!” பத்திரிகையை முதன்மைப்படுத்தி அளிக்க வேண்டும். இவ்வாறு கேட்பதன்மூலம் உங்கள் பேச்சைத் தொடங்கலாம்:
◼ “போரில்லாத ஓர் உலகத்தினிடம் உங்கள் பிரதிபலிப்பு என்ன? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] உலகத்தின் மதங்கள் போர்களையும் கொலை செய்தலையும் உண்மையில் முன்னேற்றுவிக்கின்றனவென்பது உங்களுக்குத் தெரியுமா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] முற்றிலும் மாறாக, கடவுளுடைய உண்மையான வணக்கத்தார் என்ன செய்வார்கள் என்று பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்.” பத்திரிகையின் 4-ம் பக்கத்தில் தொடக்கத்திலிலுள்ள ஏசாயா 2:2-4-ஐ வாசியுங்கள், பின்பு 10-வது பக்கத்தில், “சமாதானப் பிரியர்களுக்கு அழைப்பு” என்ற உபதலைப்பின் கீழுள்ள முதல் பாராவை வாசியுங்கள். அடுத்தபடியாக, இவ்வாறு கேளுங்கள்: “கடவுள் இதை எவ்வாறு செய்வார் என்று உங்களுக்குத் தெரியுமா? இதற்குப் பதில் இந்தப் பத்திரிகையில் காணப்படுகிறது.” சந்தாவை ஏற்கும்படி அளியுங்கள்; அது மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப் பிரதிகளை அளியுங்கள்.
3 சந்தாக்கள் ஏற்கும்படி அளிப்பதற்கு மே 15 ‘காவற்கோபுரத்தை’ முதன்மைப்படுத்திக் காட்டுகையில், மக்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்திருக்கிற சமீப சம்பவம் ஒன்றைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட முயற்சி செய்யுங்கள், பின்பு இவ்வாறு கேளுங்கள்:
◼ “இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே பாதுகாப்பாய் உணரும்படி நம்மைச் செய்விக்க எது தேவைப்படுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், மனிதவர்க்கத்தை எதிர்ப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மனிதனில் நம்பிக்கை வைப்பது நடைமுறையான காரியமா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்; பின்பு சங்கீதம் 146:3-ஐ வாசியுங்கள்.] எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையுடையோராக இருப்பதற்குக் காரணத்தைச் சங்கீதக்காரன் அடுத்தபடியாக நமக்குக் கொடுக்கிறார். [சங்கீதம் 146:5, 6-ஐ வாசியுங்கள்.] இந்தக் கட்டுரை, பூமியில் மேம்பட்ட நிலைமைகளைக் கொண்டுவருதற்கு நாம் ஏன் யெகோவா தேவனில் நம்பிக்கை வைக்கலாம் என்பதை, ‘உண்மையான பாதுகாப்பு இப்போதும் எப்போதும்,’ என்ற இந்தக் கட்டுரை விளக்குகிறது.” சந்தா ஏற்கும்படி அளியுங்கள், பாதுகாப்பான வாழ்க்கையை இப்போதே அனுபவித்து மகிழ்வது எவ்வாறு என்பதைக் கலந்துபேசுவதற்குத் திரும்பவும் வருவதாகக் கூறுங்கள்.
4 வேலை கிடைக்காதிருக்கும் பிரச்சினையின்பேரில் பரவலாக இருந்துவரும் கவலையைக் கருதுகையில், மே 22 “விழித்தெழு!” பத்திரிகையின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள “அவர் எதிர்பார்த்தது நேர்மை” என்ற அனுபவம் ஒருவேளை நன்றாக ஏற்கப்படலாம். இவ்வாறு கேட்பதன்மூலம் அதை நீங்கள் அறிமுகம் செய்யலாம்:
◼ “போட்டி மனப்பான்மை நிறைந்த இன்றைய தொழில் சந்தையில், வேலை கொடுப்பவர்கள், தாங்கள் வேலையில் அமர்த்தும் ஆட்களில் என்ன பண்புகளை எதிர்பார்க்கின்றனரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நாம் வேலை கொடுப்பவராகவோ, வேலை செய்பவராகவோ, அல்லது வேலைக்காகத் தேடுபவராகவோ, எவ்வாறிருந்தாலும், வேலைசெய்யும் இடத்தில் நேர்மையாயிருப்பதன் அவசியத்தை நிச்சயமாகவே மதிக்கிறோம். நேர்மையுள்ள வேலையாளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த அனுபவம் ஊக்கமளிப்பதாய்க் காட்டுகிறது.” சந்தா ஏற்கும்படி அளித்து, பின்பு இவ்வாறு சொல்லுங்கள்: “அடுத்த சந்திப்பில், மற்றொரு பைபிள் நியமத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன், அதைப் பொருத்திப் பயன்படுத்தும்போது, அநிச்சயமான இந்தக் காலங்களில் நம்முடைய வேலைகளை இழக்காமல் காத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்யக்கூடும்.”
5 சுருக்கமாய்ப் பேச நீங்கள் விரும்பினால், இதை நீங்கள் பயன்படுத்தலாம்:
◼ “பொதுமக்களிடையே பிரபலமாயுள்ள இன்றைய பத்திரிகைகள் பெரும்பான்மையானவை, வாணிகம், பாலினம், அல்லது வன்முறை ஆகியவற்றை மட்டுக்குமீறிய அளவில் முதன்மைப்படுத்திக் காட்டுகின்றனவென்று பலர் உணருகின்றனர். [காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளைக் காட்டுங்கள்.] பைபிளின் ஆதாரமான, நன்மை பயக்கும் இந்தப் பத்திரிகைகளை நாங்கள் பரவலாக அளித்து வருகிறோம். இவை மிகுந்த அறிவு புகட்டுபவையாக இருக்கின்றன; கடவுளை வணங்குவதற்கும், நம் அயலாரை நேசிப்பதற்கும், நேர்மையான நடத்தையைக் காத்துவருவதற்கும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இந்த வகையான தகவல்களை வாசிப்பது உங்களுக்குப் பிரியமாக இருந்தால், இந்த இதழ்களில் நீங்கள் காண்பதை அனுபவித்து மகிழ்வீர்களென்று நான் அறிந்திருக்கிறேன்.”
6 நம்முடைய அயலாரிடம் சத்தியத்தைப் பேசுவதில் நாம் ஆர்வமுள்ளோராக இருந்தால், பலருக்கு மிகுதியான சந்தோஷத்தைக் கொண்டுவரக்கூடியவர்களாக இருப்போம்—அப். 8:4, 8.