உங்கள் பிராந்தியம் முழுவதிலும் ஊழியம் செய்யுங்கள்
1 மளிகைக் கடை, சிற்றுண்டிச்சாலை அல்லது சில்லறை விற்பனைக் கடை போன்ற ஒரு சிறிய வியாபாரத்தலத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் எப்போதாவது நாம் எதிர்ப்படுகிறோம். இப் பிராந்தியத்திலுள்ள ஏனைய பகுதிகளோடு சேர்த்து இந் நிறுவனங்களிலும் ஊழியம் செய்யப்பட வேண்டுமானால், குடியிருப்புப் பகுதிகளில் செய்வதைப் போலவே, அவர்களையும் சந்திக்க வேண்டும்.
2 ஒருவேளை, “என்னிடம் உள்ள ஒன்றை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்” என்று கூறுவது போன்ற எளிய, சுருக்கமான ஓர் அளிப்பை நீங்கள் பயன்படுத்தலாம். முதலாளி அப்போதைக்கு அதிக வேலையாய் இருப்பவரைப் போன்று தோன்றினால், வெறும் ஒரு துண்டுப்பிரதியை அளித்து, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் சாவகாசமாய் இருக்கும்போது நான் மறுபடி வருகிறேன். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
3 இவ்வாறு சாட்சிகொடுப்பதைப் பற்றி, பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு பிரஸ்தாபி இவ்வாறு அறிக்கை செய்தார்: “சாதகமற்ற பிரதிபலிப்பாய் இருக்குமென்று நான் எதிர்பார்த்தேன். என்றபோதிலும், நான் ஆச்சரியப்படும் வகையில், ராஜ்ய செய்திக்கான பிரதிபலிப்பு நேர் எதிர்மாறானதாய் இருந்தது. அவர்கள் உண்மையிலேயே கண்ணியமானவர்களாயும் சிநேகப்பான்மையானவர்களாயும் இருந்ததோடு, பத்திரிகைகளை பெரும்பாலும் எப்பொழுதுமே ஏற்றுக்கொண்டனர்.”
4 ரியல்-எஸ்டேட் கம்பெனியில் வேலைபார்க்கும் ஒரு பெண், சாட்சிகளை அவளுடைய அலுவலகத்துக்குள் வரவேற்றாள். அவள் பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டதோடு, ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதற்கும் ஆர்வம் காட்டினாள். அறிவு புத்தகம் அவளுக்குக் காட்டப்பட்டது, உடனடியாக அவளுடைய அலுவலகத்திலேயே ஒரு படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது!
5 உங்கள் பிராந்தியம் முழுவதிலும் ஊழியம் செய்யும் இந்த நியமிப்பு, அக்கம்பக்கத்திலுள்ள வியாபாரங்களை நடத்தும் தனிநபர்களைச் சந்திப்பதையும் உள்ளடக்குகிறது. (அப். 10:42, NW) தனி வீடுகளில் சந்திப்பதைப் போலவே இவ்விடங்களிலும் சந்திப்பதற்குத் திட்டமிடுங்கள். இவ்வாறு செய்வதால், இது உங்கள் பிராந்தியம் முழுவதிலும் ஊழியம் செய்வதற்கு மேம்பட்ட வழியாய் இருப்பதோடல்லாமல், மகிழ்ச்சியளிக்கும் சில அனுபவங்களாலும் நீங்கள் வெகுமதியளிக்கப்படுவீர்கள்!