1997-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
1997-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பாடபுத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் [uw-TL], “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” (1990-ன் பதிப்பு) (ஆங்கிலம்) [si], நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு [kl-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL], கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள் (தமிழ் பதிப்பு) [td-TL] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
பாட்டு, ஜெபம் மற்றும் வரவேற்புக் குறிப்புகளுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்வருமாறு நடத்தப்படும்:
பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் இது கையாளப்பட வேண்டும்; ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் அல்லது “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” என்பதன்பேரில் சார்ந்திருக்கும். இந்தப் பேச்சு நியமிப்பு 10 முதல் 12 நிமிட போதகப் பேச்சாகவும், அதைத் தொடர்ந்து இந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி 3 முதல் 5 நிமிட வாய்முறை மறுபார்வையுடனும் செய்யப்பட வேண்டும். இதன் குறிக்கோளானது குறிப்பிடப்பட்ட பகுதியைச் சிந்திப்பதாக மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் சபைக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதை சிறப்பித்துக் காண்பித்து, சிந்திக்கப்படும் விஷயங்களின் நடைமுறையான பயனின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும். காட்டப்பட்டுள்ள தலைப்பு பயன்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்திலிருந்து சபையார் முழுமையாகப் பயன்பெறுவதற்காக கவனமாக முன்தயாரிப்பு செய்யும்படி எல்லாரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் அல்லது பேச்சாளர் முன்னதாகக் கேட்டுக்கொண்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். உள்ளூர் தேவைகளுக்கு அந்த விஷயத்தைப் பலன்தரத்தக்க முறையில் பொருத்திக் கூறக்கூடிய மூப்பர் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும். இது, நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் வெறும் ஒரு சுருக்கமாக இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதைச் சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் பல்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணியால் சொல்லப்படுவர்.
பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரரால் கொடுக்கப்படவேண்டிய நியமிக்கப்பட்ட பகுதியினுடைய பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற துணைத் தொகுதிகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முகவுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக்குறிப்பைக் கொடுக்க அனுமதிக்கும்வண்ணம் வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்க்கப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடைநிறுத்தமின்றி வாசிக்கப்பட வேண்டும். நிச்சயமாகவே, வாசிக்கப்படவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசனத்தை மாணாக்கர் குறிப்பிடலாம்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இந்தப் பேச்சு ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சுக்குரிய பொருள் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்பதை சார்ந்ததாயிருக்கும். நியமிக்கப்பட்ட மாணாக்கர் வாசிக்கத் தெரிந்தவராய் இருக்கவேண்டும். இந்தத் தகவலை அளிக்கையில், மாணாக்கர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருக்கலாம். இந்தப் பாகத்திற்கு நியமிக்கப்பட்ட சகோதரி தலைப்புப் பொருளையும் சிந்திக்கப்படவிருக்கிற விஷயத்தையும் நடைமுறையான சூழலுக்கு ஏற்ப பொருத்தியமைக்க வேண்டும்; வெளி ஊழியம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதாக அமைப்பது விரும்பத்தக்கது. உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணி நியமிப்பார், ஆனால் கூடுதலான உதவியாளர் ஒருவரைப் பயன்படுத்தலாம். பேச்சு அமைப்புக்கு அல்ல, ஆனால் கொடுக்கப்பட்ட விஷயத்தைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படுகிறது. இது, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்பதையோ “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” சிறுபுத்தகத்தையோ சார்ந்ததாயிருக்கும். ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், இது முழு சபையாருக்கும் கொடுக்கும் ஒரு பேச்சாக இருக்கவேண்டும். இந்தப் பேச்சு அதை நேரில் கேட்பவர்களுக்கு உண்மையில் அறிவூட்டுவதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்படி, அந்தச் சகோதரர் ராஜ்ய மன்றத்தில் கூடியிருக்கும் சபையாரை மனதிற்கொண்டு தனது பேச்சைத் தயாரிப்பது பொதுவாக மிக நல்லது. ஒரு சகோதரிக்கு இந்தப் பாகம் கொடுக்கப்படுகையில், பேச்சு எண் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தப் பேச்சைக் கொடுக்கவேண்டும்.
ஆலோசனை மற்றும் குறிப்புகள் கொடுத்தல்: மாணாக்கர் பேச்சு ஒவ்வொன்றுக்கும் பின்னர், பள்ளி கண்காணி குறிப்பான ஆலோசனைகளைக் கொடுப்பார்; பேச்சு ஆலோசனைத் தாளில் (Speech Counsel slip) கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான ஆலோசனை வரிசையைக் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய அவசியமில்லை. மாறாக, மாணாக்கர் முன்னேறவேண்டிய அம்சங்களுக்கு அவர் கவனஞ்செலுத்த வேண்டும். பேச்சு கொடுக்கும் மாணாக்கர் “G” பெற தகுதியுடையவராய் இருந்து, வேறு எந்தப் பேச்சுப் பண்பிலும் “I” அல்லது “W” என்று குறிப்பிடப்படாவிடில், அப்பொழுது ஆலோசகர் “G,” “I,” அல்லது “W” என்று எழுதப்பட்ட பெட்டியில் அடுத்தபடியாக உழைக்கவேண்டிய பேச்சுப் பண்பைக் காட்ட ஒரு வட்டமிட வேண்டும். இதைக் குறித்து அன்று மாலை மாணாக்கருக்கு அவர் சொல்லுவார்; அதோடுகூட அடுத்த தேவராஜ்ய ஊழியப் பள்ளி பேச்சு நியமிப்புத் தாளிலும் (Assignment slip) (S-89) இந்தப் பேச்சுப் பண்பைக் குறிப்பிடுவார். பேச்சு கொடுப்பவர்கள் மன்றத்தின் முன் இருக்கைகளில் உட்காரவேண்டும். இது நேரத்தை சேமிக்கவும் அதே சமயத்தில் பள்ளி கண்காணி ஒவ்வொரு மாணாக்கரையும் நோக்கி நேராக ஆலோசனை கூறவும் உதவியாக இருக்கும். தேவையான நேரடி ஆலோசனை கொடுத்த பின்பு நேரம் அனுமதிக்கிறபடி, மாணாக்கரால் சிந்திக்கப்படாத அறிவூட்டும் நடைமுறையான குறிப்புகளின்பேரில் ஆலோசகர் குறிப்பு சொல்லலாம். பள்ளி கண்காணி ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்குப் பிறகும், ஆலோசனை கூறுவதற்கும் வேறு ஏதாவது சுருக்கமான குறிப்புகள் சொல்வதற்கும் மொத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்தாதபடி கவனமாயிருக்க வேண்டும். பைபிள் சிறப்புக் குறிப்புகளை கையாண்ட சகோதரருக்கு ஆலோசனை கொடுக்கவேண்டிய தேவை இருந்தால், இது தனிப்பட்டவிதமாக கொடுக்கப்படலாம்.
பேச்சுக்களைத் தயாரித்தல்: நியமிக்கப்பட்ட பாகத்தைத் தயாரிப்பதற்கு முன்பாக, மாணாக்கர் தான் உழைக்கவேண்டிய பேச்சுப் பண்பை சிந்திக்கிற பள்ளி துணைநூல் பிரசுரத்திலுள்ள பகுதியைக் கவனமாக வாசிக்கவேண்டும். இரண்டாம் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள மாணாக்கர்கள், வாசிக்கவேண்டிய பைபிள் பகுதிக்குப் பொருத்தமான தலைப்புப் பொருள் ஒன்றை தெரிந்துகொள்ளலாம். மற்ற பேச்சுக்கள் அச்சடிக்கப்பட்ட அட்டவணையில் காட்டியுள்ள தலைப்புப் பொருளுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும்.
நேரம்: எந்தப் பேச்சும் கொடுக்கப்படும் நேரத்தை மீறக்கூடாது, ஆலோசனை கூறுபவரின் ஆலோசனையும் குறிப்புகளுங்கூட நேரத்தை மீறக்கூடாது. பேச்சு எண் 2 முதல் 4 வரையுள்ள பேச்சுக்கள் நேரத்தை மீறுகையில் சாதுரியமாக நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தும் சமிக்கையை கொடுக்க நியமிக்கப்பட்டவர் அதை உடனடியாகச் செய்யவேண்டும். பேச்சு நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்கள் நேரத்தை மீறுகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கொடுக்கப்படவேண்டும். முழு நிகழ்ச்சி நிரல்: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.
எழுத்துமுறை மறுபார்வை: ஒழுங்கான கால இடைவெளிகளில் ஓர் எழுத்துமுறை மறுபார்வை கொடுக்கப்படும். அதற்குத் தயார்செய்கையில், கொடுக்கப்பட்ட பகுதிகளை மறுபார்வை செய்து, அட்டவணையிலுள்ள பைபிள் வாசிப்பு பகுதியை முடியுங்கள். இந்த 25 நிமிட மறுபார்வையின்போது பைபிள் மட்டுமே பயன்படுத்தப்படலாம். மீந்திருக்கும் நேரம் கேள்விகளையும் பதில்களையும் கலந்தாலோசிப்பதற்குச் செலவிடப்படும். ஒவ்வொரு மாணாக்கரும் அவரவருடைய தாள்களைத் திருத்துவர். பள்ளி கண்காணி இந்த மறுபார்வை கேள்விகளுக்கான பதில்களைச் சபையாரோடு கலந்தாலோசிப்பார்; கடினமான கேள்விகளின்பேரில் கூடுதலான கவனம் செலுத்தி, எல்லாரும் பதில்களைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவி செய்வார். ஏதோ காரணத்தினிமித்தம், சபையின் சூழ்நிலைகள் அவசியப்படுத்தினால், எழுத்துமுறை மறுபார்வையை அட்டவணையில் காட்டப்பட்ட வாரத்திற்கு ஒரு வாரம் பிந்தி நடத்தலாம்.
பெரிய சபைகள்: 50 அல்லது அதற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பள்ளியில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டதாயுள்ள சபைகள், அட்டவணையிலுள்ள பேச்சுக்களை மற்ற ஆலோசகர்களுக்கு முன்பாகக் கொடுக்கும்படி கூடுதலான மாணாக்கர்கள் தொகுதிகளை ஏற்பாடுசெய்ய விரும்பலாம். கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை நடத்தும் முழுக்காட்டப்படாத ஆட்களும் நிச்சயமாகவே பள்ளியில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து பேச்சு நியமிப்புகளைப் பெறலாம்.
வரத்தவறுவோர்: வாராந்தர கூட்டம் ஒவ்வொன்றுக்கும் ஆஜராயிருக்கும்படி முயற்சி செய்வதன்மூலமும், தங்கள் பேச்சு நியமிப்புகளை நன்றாய் தயாரிப்பதன்மூலமும், கேள்வி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதன்மூலமும் சபையிலுள்ள அனைவரும் இந்தப் பள்ளிக்காக போற்றுதலைக் காண்பிக்கலாம். எல்லா மாணாக்கர்களும் தங்கள் பேச்சு நியமிப்புகளைப் பொறுப்புணர்ச்சியுடன் கருதுவார்களென்று நம்பப்படுகிறது. அட்டவணையில் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாணாக்கர் வரவில்லையெனில், அந்தப் பேச்சை முன்வந்து ஒருவர் ஏற்று, அத்தகைய குறுகிய நேர அறிவிப்பில் செய்வதற்கு பொருத்தமான குறிப்புகள் என்று அவர் நினைப்பதை தயாரித்து எடுத்துரைக்கலாம். அல்லது பள்ளிக் கண்காணி பொருத்தமான சபையார் பங்கெடுத்தலோடு அந்த விஷயத்தைச் சிந்திக்கலாம்.
அட்டவணை
ஜன. 6 பைபிள் வாசிப்பு: சகரியா 1 முதல் 5
பாட்டு எண் 85
எண் 1: சகரியாவுக்கு முன்னுரை (si பக். 168-9 பாரா. 1-7)
எண் 3: மனிதன் மரிப்பதற்காக படைக்கப்படவில்லை (kl-TL பக். 53 பாரா. 1-3)
எண் 4: இந்த உலகத்தின் ஆவி எது, மற்றும் அது ஏன் ஆபத்தானது? (rs-TL பக். 389 பாரா 5—பக். 391 பாரா 1)
ஜன. 13 பைபிள் வாசிப்பு: சகரியா 6 முதல் 9
பாட்டு எண் 215
எண் 1: இயேசு மரணத்திற்கும் ஹேடீஸிற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறார் (uw-TL பக். 73-7 பாரா. 8-15)
எண் 3: வஞ்சனையான ஒரு சதித்திட்டம் (kl-TL பக். 55-6 பாரா. 4-7)
எண் 4: பெருமையும் கலக மனப்பான்மையும் இந்த உலகத்தின் ஆவியினுடைய வெளிக்காட்டுதல்கள் (rs-TL பக். 391 பாரா. 2-3)
ஜன. 20 பைபிள் வாசிப்பு: சகரியா 10 முதல் 14
பாட்டு எண் 98
எண் 1: சகரியா—ஏன் பயனுள்ளது (si பக். 171-2 பாரா. 23-7)
எண் 3: சாத்தான் தன் சதித்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றினான் (kl-TL பக். 56-8 பாரா. 8-12)
எண் 4: உலகத்தின் ஆவி மாம்சத்தின் ஆசைகளைத் தூண்டுவிக்கிறது (rs-TL பக். 392 பாரா 1)
ஜன. 27 பைபிள் வாசிப்பு: மல்கியா 1 முதல் 4
பாட்டு எண் 118
எண் 1: மல்கியாவுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 172-3 பாரா. 1-6; பக். 174-5 பாரா. 13-17)
எண் 3: பாவமும் மரணமும் எப்படி பரவின (kl-TL பக். 58-9 பாரா. 13-15)
எண் 4: உலகத்தின் ஆவி பொருளாசையை முன்னேற்றுவிக்கிறது (rs-TL பக். 392 பாரா. 2-3)
பிப். 3 பைபிள் வாசிப்பு: மத்தேயு 1 முதல் 3
பாட்டு எண் 132
எண் 1: மத்தேயுவுக்கு முன்னுரை (si பக். 175-7 பாரா. 1-10)
எண் 3: சாத்தானின் தந்திரங்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் (kl-TL பக். 59-60 பாரா. 16-18)
எண் 4: மாம்சத்தின் கிரியைகளுக்கு எதிராய் கடினமாக போராடுங்கள் (rs-TL பக். 392 பாரா 4)
பிப். 10 பைபிள் வாசிப்பு: மத்தேயு 4, 5
பாட்டு எண் 36
எண் 1: கடவுளுடைய அழியாத ராஜ்யத்தை போற்றுங்கள் (uw-TL பக். 78-81 பாரா. 1-9)
எண் 3: விசுவாசம் கொண்டிருந்து எதிர்ப்பை எதிர்ப்பட தயாராயிருங்கள் (kl-TL பக். 60-1 பாரா. 19-21)
எண் 4: யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள், மனித அதிபதிகளில் அல்ல (rs-TL பக். 393 பாரா. 1-2)
பிப். 17 பைபிள் வாசிப்பு: மத்தேயு 6, 7
பாட்டு எண் 222
எண் 1: கடவுளுடைய ராஜ்யம் எதை நிறைவேற்றும் (uw-TL பக். 81-2 பாரா. 10-12)
எண் 3: மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்கான கடவுளுடைய ஏற்பாடு (kl-TL பக். 62-3 பாரா. 1-5)
எண் 4: மனித துன்பத்திற்கு யாரைக் குற்றஞ்சாட்டுவது? (rs-TL பக். 393 பாரா 3—பக். 394 பாரா 2)
பிப். 24 பைபிள் வாசிப்பு: மத்தேயு 8, 9
பாட்டு எண் 162
எண் 1: ராஜ்யம் ஏற்கெனவே நிறைவேற்றி இருப்பவை (uw-TL பக். 83-6 பாரா. 13-15)
எண் 3: மேசியா ஏன் மரிப்பார் (kl-TL பக். 63-5 பாரா. 6-11)
எண் 4: மனித துன்பம் எவ்வாறு தொடங்கினது? (rs-TL பக். 394 பாரா 3—பக். 395 பாரா 1)
மார்ச் 3 பைபிள் வாசிப்பு: மத்தேயு 10, 11
பாட்டு எண் 172
எண் 1: நாம் எவ்வாறு ராஜ்யத்தை முதலாவது தேடுகிறோம் (uw-TL பக். 87-9 பாரா. 1-6)
எண் 3: மீட்கும்பொருள் எவ்வாறு செலுத்தப்பட்டது (kl-TL பக். 65-8 பாரா. 12-16)
எண் 4: துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதவர்க்கத்துக்கு உதவ கடவுள் என்ன செய்திருக்கிறார் (rs-TL பக். 395 பாரா. 2-3)
மார்ச் 10 பைபிள் வாசிப்பு: மத்தேயு 12, 13
பாட்டு எண் 133
எண் 1: பூர்வ சீஷர்களின் மாதிரியைப் பின்பற்றுங்கள் (uw-TL பக். 90-1 பாரா. 7-9)
எண் 3: கிறிஸ்துவின் மீட்கும்பொருளும் நீங்களும் (kl-TL பக். 68-9 பாரா. 17-20)
எண் 4: துன்பம் தொடர்ந்திருக்க கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்? (rs-TL பக். 396 பாரா 2—பக். 397 பாரா 3)
மார்ச் 17 பைபிள் வாசிப்பு: மத்தேயு 14, 15
பாட்டு எண் 129
எண் 1: ராஜ்யத்தை உங்கள் வாழ்க்கையில் முதலாவது வையுங்கள் (uw-TL பக். 91-4 பாரா. 10-15)
எண் 3: மனிதரின் துன்பத்துக்கு கடவுள் காரணரா? (kl-TL பக். 70-1 பாரா. 1-5)
எண் 4: பிறப்பிலே ஏற்படும் ஊறுபாடுகளைப்பற்றி நாம் என்ன அறிந்திருக்க வேண்டும் (rs-TL பக். 397 பாரா 4—பக். 398 பாரா 1)
மார்ச் 24 பைபிள் வாசிப்பு: மத்தேயு 16, 17
பாட்டு எண் 151
எண் 1: யோவான் கொடுத்த முழுக்காட்டுதலைப்பற்றி வேதவசனங்கள் என்ன குறிப்பிடுகின்றன (uw-TL பக். 95-6 பாரா. 1-5)
எண் 3: பரிபூரணமான ஆரம்பமும் தீய எண்ணமுடைய ஒரு சவாலும் (kl-TL பக். 72-3 பாரா. 6-10)
எண் 4: “இயற்கை துன்பநிகழ்ச்சிகளைக்” கடவுள் ஏன் அனுமதிக்கிறார்? (rs-TL பக். 398 பாரா. 2-4)
மார்ச் 31 பைபிள் வாசிப்பு: மத்தேயு 18, 19
பாட்டு எண் 97
எண் 1: மரணத்துக்குள் முழுக்காட்டப்படுதல் என்றால் என்ன? (uw-TL பக். 97-8 பாரா. 6-8)
எண் 3: உண்மையான விவாதங்களும் அவற்றை தீர்ப்பதற்கான யெகோவாவின் வழியும் (kl-TL பக். 74-6 பாரா. 11-15)
எண் 4: துன்பம் அனுபவிக்கும் ஆட்கள் கடவுளால் தண்டிக்கப்படுகிறார்களா? (rs-TL பக். 399 பாரா. 1-4)
ஏப். 7 பைபிள் வாசிப்பு: மத்தேயு 20, 21
பாட்டு எண் 107
எண் 1: “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுதல் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (uw-TL பக். 98 பாரா 9)
எண் 3: அக்கிரமத்தைக் கடவுள் அனுமதித்திருப்பது எதை நிரூபித்திருக்கிறது (kl-TL பக். 76-7 பாரா. 16-19)
எண் 4: அந்நிய பாஷைகளில் பேசுவது, அந்த நபர் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறதா? (rs-TL பக். 400 பாரா 4—பக். 401 பாரா 3)
ஏப். 14 பைபிள் வாசிப்பு: மத்தேயு 22, 23
பாட்டு எண் 56
எண் 1: நம்முடைய முழுக்காட்டுதலின் அர்த்தத்துக்கு இசைய வாழுதல் (uw-TL பக். 99-102 பாரா. 10-14)
எண் 3: நீங்கள் யாருடைய பக்கத்தில் நிற்கிறீர்கள்? (kl-TL பக். 78-9 பாரா. 20-3)
எண் 4: முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் அந்நிய பாஷைகளில் பேசினர்? (rs-TL பக். 401 பாரா 4—பக். 402 பாரா 3)
ஏப். 21 பைபிள் வாசிப்பு: மத்தேயு 24, 25
பாட்டு எண் 193
எண் 1: திரள் கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல் (uw-TL பக். 103-4 பாரா. 1-4)
எண் 3: இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது? (kl-TL பக். 80-1 பாரா. 1-6)
எண் 4: கடவுளுடைய ஆவியைப் பெற்றிருப்பவர்களை நாம் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்? (rs-TL பக். 402 பாரா. 5-8)
ஏப். 28 எழுத்துமுறை மறுபார்வை. சகரியா 1 முதல் மத்தேயு 25 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 6
மே 5 பைபிள் வாசிப்பு: மத்தேயு 26
பாட்டு எண் 14
எண் 1: மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பதற்கு என்ன தேவைப்படுகிறது? (uw-TL பக். 105 பாரா 5)
எண் 2: மத்தேயு 26:31-35, 69-75
எண் 3: மண்ணுக்குத் திரும்புதல் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது (kl-TL பக். 82-3 பாரா. 7-10)
எண் 4: இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள் (rs-TL பக். 403 பாரா. 1-3)
மே 12 பைபிள் வாசிப்பு: மத்தேயு 27, 28
பாட்டு எண் 102
எண் 1: மத்தேயு—ஏன் பயனுள்ளது (si பக். 180-1 பாரா. 29-33)
எண் 3: இறந்தோரின் நிலை என்ன? (kl-TL பக். 83-4 பாரா. 11-14)
எண் 4: அந்நிய பாஷையில் பேசுவது எவ்வளவு காலம் நீடிக்க வேண்டியதாயிருந்தது? (rs-TL பக். 403 பாரா 4—பக். 404 பாரா 3)
மே 19 பைபிள் வாசிப்பு: மாற்கு 1, 2
பாட்டு எண் 180
எண் 1: மாற்குவுக்கு முன்னுரை (si பக். 181-3 பாரா. 1-11)
எண் 3: யெகோவாவின் ஞாபகத்தில் இருக்கும் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவர் (kl-TL பக். 85-7 பாரா. 15-18)
எண் 4: திரித்துவக் கோட்பாடு என்றால் என்ன, அதன் தொடக்கம் என்ன? (rs-TL பக். 405 பாரா 1—பக். 406 பாரா 3)
மே 26 பைபிள் வாசிப்பு: மாற்கு 3, 4
பாட்டு எண் 46
எண் 1: மிகுந்த உபத்திரவத்திலிருந்து திரள் கூட்டத்தினர் ஏன் தப்பிப்பிழைக்கின்றனர் (uw-TL பக். 106-7 பாரா. 6-8)
எண் 3: எங்கே உயிர்த்தெழுந்து வருவார்கள்? (kl-TL பக். 88-9 பாரா. 19-22)
எண் 4: பரிசுத்த ஆவி ஓர் ஆளா? (rs-TL பக். 406 பாரா 4—பக். 407 பாரா 3)
ஜூன் 2 பைபிள் வாசிப்பு: மாற்கு 5, 6
பாட்டு எண் 220
எண் 1: நாம் ஏன் ஆவிக்குரிய பரதீஸை அருமையானதாக கருதுகிறோம் (uw-TL பக். 107-9 பாரா. 9-13)
எண் 3: கடவுளுடைய ராஜ்யமும் அதன் நோக்கமும் (kl-TL பக். 90-1 பாரா. 1-5)
எண் 4: இயேசுவும் யெகோவாவும் ஒரே ஆளா? (rs-TL பக். 407 பாரா 4—பக். 409 பாரா 1)
ஜூன் 9 பைபிள் வாசிப்பு: மாற்கு 7, 8
பாட்டு எண் 207
எண் 1: இன்று பூமியில் ஏன் மிகக் குறைந்த எண்ணிக்கையான ராஜ்ய சுதந்தரவாளிகள் இருக்கின்றனர்? (uw-TL பக். 110-12 பாரா. 1-7)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் ஓர் அரசாங்கம் (kl-TL பக். 91-2 பாரா. 6-7)
எண் 4: யெகோவா, இயேசு, பரிசுத்த ஆவி எல்லாம் சமமானவர்கள் என பைபிள் போதிக்கிறதா? (rs-TL பக். 409 பாரா 2—பக். 410 பாரா 5)
ஜூன் 16 பைபிள் வாசிப்பு: மாற்கு 9, 10
பாட்டு எண் 11
எண் 1: ஆவிக்குரிய குமாரர்கள்—அவர்களுக்கு எப்படித் தெரியும்? (uw-TL பக். 112-14 பாரா. 8-10)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் மெய்யானதென நமக்கு எப்படி தெரியும் (kl-TL பக். 92-3 பாரா. 8-11)
எண் 4: திரித்துவத்தின் பாகமாயிருப்பதாகச் சொல்லப்படும் ஒவ்வொருவரும் கடவுளென பைபிள் போதிக்கிறதா? (rs-TL பக். 411 பாரா. 1-5)
ஜூன் 23 பைபிள் வாசிப்பு: மாற்கு 11, 12
பாட்டு எண் 87
எண் 1: நினைவு ஆசரிப்பின் முக்கியத்துவம் என்ன? (uw-TL பக். 114-16 பாரா. 11-14)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் ஏன் மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை (kl-TL பக். 94-5 பாரா. 12-13)
எண் 4: திரித்துவக் கோட்பாட்டாளர்கள் வேதவசனங்களை எவ்வாறு தவறாக பொருத்துகின்றனர் (rs-TL பக். 412 பாரா 1—பக். 414 பாரா 1)
ஜூன் 30 பைபிள் வாசிப்பு: மாற்கு 13, 14
பாட்டு எண் 38
எண் 1: யெகோவாவின் காணக்கூடிய அமைப்பை அடையாளங்கண்டுகொள்ளுதல் (uw-TL பக். 117-18 பாரா. 1-3)
எண் 3: இயேசு ஏன் பரலோகத்துக்கு ஏறிச் சென்றதும் உடனடியாக ஆட்சியை ஆரம்பிக்கவில்லை (kl-TL பக். 95-6 பாரா. 14-15)
எண் 4: யெகோவாவைக் குறிப்பிடும் சில வேதவசனங்கள் கிறிஸ்துவுக்கும் ஏன் பொருத்தப்படலாம் (rs-TL பக். 414 பாரா. 2-3)
ஜூலை 7 பைபிள் வாசிப்பு: மாற்கு 15, 16
பாட்டு எண் 187
எண் 1: மாற்கு—ஏன் பயனுள்ளது (si பக். 186 பாரா. 31-3)
எண் 3: புறஜாதியாரின் காலம் எப்போது ஆரம்பமாகி, எப்போது முடிந்தது? (kl-TL பக். 96-7 பாரா. 16-18)
எண் 4: திரித்துவக் கோட்பாட்டாளர்களால் தவறாக பயன்படுத்தப்படும் வேதவசனங்கள் (rs-TL பக். 414 பாரா 4—பக். 415 பாரா 5)
ஜூலை 14 பைபிள் வாசிப்பு: லூக்கா 1
பாட்டு எண் 212
எண் 1: லூக்காவுக்கு முன்னுரை (si பக். 187-8 பாரா. 1-9)
எண் 3: இவை கடைசி நாட்கள் (kl-TL பக். 98-9 பாரா. 1-4)
எண் 4: யோவான் 1:1-ம், 8:58-ம் ஏன் திரித்துவத்தை ஆதரிப்பதில்லை (rs-TL பக். 416 பாரா 1—பக். 418 பாரா 1)
ஜூலை 21 பைபிள் வாசிப்பு: லூக்கா 2, 3
பாட்டு எண் 89
எண் 1: கடவுளுடைய அமைப்பு தேவாட்சி முறைக்குரியது (uw-TL பக். 118-20 பாரா. 4-7)
எண் 3: கடைசி நாட்களின் சில அம்சங்கள் யாவை? (kl-TL பக். 99-103 பாரா. 5-7)
எண் 4: வேதவசனங்களின் சூழமைவைக் கவனத்தில் கொள்வது ஏன் முக்கியமானது (rs-TL பக். 418 பாரா 3—பக். 421 பாரா 1)
ஜூலை 28 பைபிள் வாசிப்பு: லூக்கா 4, 5
பாட்டு எண் 92
எண் 1: முன்நின்று வழிநடத்துபவர்களின் வேதப்பூர்வ பங்கு (uw-TL பக். 120-2 பாரா. 8-12)
எண் 3: இழிவான மனித நடத்தை கடைசி நாட்களில் காணப்படுமென்று முன்னறிவிக்கப்பட்டது (kl-TL பக். 103-4 பாரா. 8-12)
எண் 4: இயேசு கிறிஸ்துவும் யெகோவாவும் வெவ்வேறு, தனிப்பட்ட ஆட்கள் (rs-TL பக். 421 பாரா 2—பக். 423 பாரா 2)
ஆகஸ்ட் 4 பைபிள் வாசிப்பு: லூக்கா 6, 7
பாட்டு எண் 213
எண் 1: கடவுளுடைய அமைப்புக்கான நம்முடைய போற்றுதலைப் பரிசோதித்தல் (uw-TL பக். 123-4 பாரா. 13-14)
எண் 3: கடைசி நாட்களின் இரண்டு முனைப்பான அம்சங்கள் (kl-TL பக். 105 பாரா. 13-14)
எண் 4: இயேசுதாமே தம்மை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பிக்கொள்ளவில்லை, மற்றும் கடவுளுக்கு சரிசமமானவராக ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை (rs-TL பக். 423 பாரா 4—பக். 424 பாரா 2)
ஆகஸ்ட் 11 பைபிள் வாசிப்பு: லூக்கா 8, 9
பாட்டு எண் 67
எண் 1: ஏன் அறிவுரைக்குச் செவிகொடுக்க வேண்டும்? (uw-TL பக். 125-7 பாரா. 1-4)
எண் 3: இவை கடைசி நாட்கள் என்பதற்கான அத்தாட்சிக்குப் பிரதிபலியுங்கள் (kl-TL பக். 106-7 பாரா. 15-17)
எண் 4: திரித்துவ நம்பிக்கையை விடாது பற்றிக்கொண்டிருப்பது ஏன் ஆபத்தாக இருக்கிறது (rs-TL பக். 424 பாரா 3—பக். 425 பாரா 2)
ஆகஸ்ட் 18 பைபிள் வாசிப்பு: லூக்கா 10, 11
பாட்டு எண் 34
எண் 1: அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்களின் சிறந்த உதாரணங்கள் (uw-TL பக். 127-8 பாரா. 5-6)
எண் 3: பொல்லாத ஆவிகள் இருக்கின்றன! (kl-TL பக். 108 பாரா. 1-3)
எண் 4: பொல்லாங்கு அவ்வளவு அதிகம் இருந்துவருவதேன்? (rs-TL பக். 427 பாரா. 1-5)
ஆகஸ்ட் 25 எழுத்துமுறை மறுபார்வை. மத்தேயு 26 முதல் லூக்கா 11 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 160
செப். 1 பைபிள் வாசிப்பு: லூக்கா 12, 13
பாட்டு எண் 163
எண் 1: மதிப்புமிக்க பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள் (uw-TL பக். 128-30 பாரா. 7-11)
எண் 3: பொல்லாத தூதர்கள் சாத்தானின் பக்கமாக சேர்ந்துகொண்டிருக்கின்றனர் (kl-TL பக். 109 பாரா. 4-5)
எண் 4: கடவுள் ஏன் பொல்லாங்கை அனுமதிக்கிறார்? (rs-TL பக். 428 பாரா 1—பக். 429 பாரா 1)
செப். 8 பைபிள் வாசிப்பு: லூக்கா 14 முதல் 16
பாட்டு எண் 124
எண் 1: யெகோவாவின் சிட்சையை புறக்கணியாதீர்கள் (uw-TL பக். 130-1 பாரா. 12-14)
எண் 3: ஆவியுலகத் தொடர்பின் எல்லா வகைகளையும் நிராகரியுங்கள் (kl-TL பக். 111-12 பாரா. 6-8)
எண் 4: கடவுள் பொல்லாங்கை அனுமதித்ததால் நாம் எவ்வாறு நன்மையடைந்திருக்கிறோம் (rs-TL பக். 429 பாரா 2—பக். 430 பாரா 1)
செப். 15 பைபிள் வாசிப்பு: லூக்கா 17, 18
பாட்டு எண் 200
எண் 1: உண்மைக் கிறிஸ்தவர்களை அன்பு அடையாளங்காட்டுகிறது (uw-TL பக். 132-3 பாரா. 1-5)
எண் 3: பைபிள் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தை ஏன் கண்டனம் செய்கிறது (kl-TL பக். 112-13 பாரா. 9-11)
எண் 4: பெண்களை பைபிள் எவ்வாறு நோக்குகிறது (rs-TL பக். 431 பாரா. 2-4)
செப். 22 பைபிள் வாசிப்பு: லூக்கா 19, 20
பாட்டு எண் 145
எண் 1: பிரச்சினைகள் எழும்புகையில் என்ன செய்வது (uw-TL பக். 134 பாரா. 6-9)
எண் 3: பொல்லாத ஆவிகள் செயல்படும் விதத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது (kl-TL பக். 113-14 பாரா. 12-13)
எண் 4: ஆண்களுக்குத் தலைமை வகிப்பை அளிப்பது பெண்களை மதிப்புக்குறைவுள்ளவர்களாக ஆக்குகிறதா? (rs-TL பக். 432 பாரா. 1-3)
செப். 29 பைபிள் வாசிப்பு: லூக்கா 21, 22
பாட்டு எண் 86
எண் 1: வேதப்பூர்வ அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள் (uw-TL பக். 135-6 பாரா. 10-13)
எண் 3: பொல்லாத ஆவிகளை எதிர்ப்பது எப்படி (kl-TL பக். 114-15 பாரா. 14-15)
எண் 4: பெண்கள் போதகர்களாக இருக்கவேண்டுமா? (rs-TL பக். 433 பாரா. 1-2)
அக். 6 பைபிள் வாசிப்பு: லூக்கா 23, 24
பாட்டு எண் 88
எண் 1: லூக்கா—ஏன் பயனுள்ளது (si பக். 192-3 பாரா. 30-5)
எண் 3: உங்கள் விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்திக் கொள்ளலாம் (kl-TL பக். 115-16 பாரா. 16-17)
எண் 4: குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ பெண்கள் ஏன் தலையில் முக்காடிட்டுக்கொள்கிறார்கள்? (rs-TL பக். 433 பாரா 3—பக். 434 பாரா 1)
அக். 13 பைபிள் வாசிப்பு: யோவான் 1 முதல் 3
பாட்டு எண் 31
எண் 1: யோவானுக்கு முன்னுரை (si பக். 193-5 பாரா. 1-9)
எண் 3: பொல்லாத ஆவிகளுக்கு எதிரான உங்கள் போராட்டத்தை தொடருங்கள் (kl-TL பக். 116-17 பாரா. 18-20)
எண் 4: பெண்கள் சிங்காரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதோ ஆபரணங்கள் அணிவதோ சரியா? (rs-TL பக். 435 பாரா. 1-3)
அக். 20 பைபிள் வாசிப்பு: யோவான் 4, 5
பாட்டு எண் 35
எண் 1: அன்பில் ‘விரிவாகுவதற்கு’ வழிகளைத் தேடுங்கள் (uw-TL பக். 137-8 பாரா. 14-17)
எண் 3: தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது (kl-TL பக். 118-19 பாரா. 1-4)
எண் 4: இந்த உலகத்துக்கும் அதன் தலைவனுக்கும் என்ன எதிர்காலம் இருக்கிறது? (rs-TL பக். 436 பாரா 1—பக். 437 பாரா 2)
அக். 27 பைபிள் வாசிப்பு: யோவான் 6, 7
பாட்டு எண் 150
எண் 1: வீட்டில் தெய்வபக்தியை பழக்கமாய் அனுசரியுங்கள் (uw-TL பக். 139 பாரா. 1-2)
எண் 3: நேர்மை மகிழ்ச்சியில் விளைவடைகிறது (kl-TL பக். 119-20 பாரா. 5-6)
எண் 4: உண்மை கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தை எவ்வாறு நோக்கவேண்டும்? (rs-TL பக். 437 பாரா 3—பக். 438 பாரா 4)
நவ. 3 பைபிள் வாசிப்பு: யோவான் 8, 9
பாட்டு எண் 48
எண் 1: திருமணம், திருமண விலக்கு, பிரிந்துபோதல் ஆகியவற்றைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது (uw-TL பக். 140 பாரா 3)
எண் 3: தாராள குணம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது (kl-TL பக். 120 பாரா. 7-8)
எண் 4: td-TL 23B 1,44,000 பேர் மாத்திரமே பரலோகத்திற்குப் போவர்
நவ. 10 பைபிள் வாசிப்பு: யோவான் 10, 11
பாட்டு எண் 117
எண் 1: வெற்றிகரமான திருமணத்தில் முக்கிய அம்சங்கள் (uw-TL பக். 140-1 பாரா. 4-5)
எண் 3: உங்கள் சிந்திக்கும் திறமைகளைக் காத்துக்கொண்டு, தீங்கானவற்றைத் தவிருங்கள் (kl-TL பக். 121 பாரா. 9-10)
எண் 4: td-TL 24C அக்கினி நிர்மூலமாக்குதலுக்கு ஒரு சின்னம்
நவ. 17 பைபிள் வாசிப்பு: யோவான் 12, 13
பாட்டு எண் 158
எண் 1: கடவுளுடைய குடும்ப ஏற்பாட்டில் உங்கள் பங்கை நிறைவேற்றுங்கள் (uw-TL பக். 142-3 பாரா. 6-10)
எண் 3: ஒருவர் தன் துணைவருக்கு உண்மையுள்ளவராக இருப்பது திருமணத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது (kl-TL பக். 122-3 பாரா. 11-13)
எண் 4: td-TL 25B வருடாந்தர ஆசரிப்புகளும் யெகோவாவின் உண்மை ஊழியர்களும்
நவ. 24 பைபிள் வாசிப்பு: யோவான் 14 முதல் 16
பாட்டு எண் 63
எண் 1: பைபிள் நீங்கள் ஆலோசனையை நாடும் ஊற்றுமூலமாக இருக்கட்டும் (uw-TL பக். 144 பாரா. 11-13)
எண் 3: உலகத்தின் பாகமாக இராதேயுங்கள் (kl-TL பக். 123-4 பாரா. 14-15)
எண் 4: td-TL 26B உருவவழிபாடு இஸ்ரவேலருக்கு ஒரு கண்ணியாயிருந்தது
டிச. 1 பைபிள் வாசிப்பு: யோவான் 17, 18
பாட்டு எண் 114
எண் 1: மோசேயின் நியாயப்பிரமாணம் ஏன் நம்முடைய அக்கறைக்குரியதாய் இருக்கிறது (uw-TL பக். 146-7 பாரா. 1-4)
எண் 3: உண்மைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸை அல்லது பிறந்தநாட்களை ஏன் கொண்டாடுவதில்லை (kl-TL பக். 126 பாரா. 16-17)
எண் 4: td-TL 27A ஒரேவொரு உண்மை மதமே இருக்கிறது
டிச. 8 பைபிள் வாசிப்பு: யோவான் 19 முதல் 21
பாட்டு எண் 138
எண் 1: யோவான்—ஏன் பயனுள்ளது (si பக். 198-9 பாரா. 30-5)
எண் 3: கர்த்தருடைய இராப்போஜனத்தை தொடர்ந்து ஆசரியுங்கள் (kl-TL பக். 127 பாரா 18)
எண் 4: td-TL 29A கடவுளுடைய பெயரை யாவரறிய தெரியப்படுத்துங்கள்
டிச. 15 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 1 முதல் 3
பாட்டு எண் 41
எண் 1: அப்போஸ்தலருக்கு முன்னுரை (si பக். 199-200 பாரா. 1-8)
எண் 3: வேலைக்கும் பொழுதுபோக்கிற்கும் பைபிள் நியமங்கள் எவ்வாறு பொருந்துகின்றன (kl-TL பக். 127-8 பாரா. 19-20)
எண் 4: td-TL 29D கடவுளுடைய பிரதான குணங்கள் யாவை?
டிச. 22 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 4 முதல் 6
பாட்டு எண் 113
எண் 1: மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் நாம் இல்லாததற்கான வேதப்பூர்வ காரணங்கள் (uw-TL பக். 147-8 பாரா. 5-6)
எண் 3: உயிருக்கும் இரத்தத்துக்கும் மரியாதை காட்டுங்கள் (kl-TL பக். 128-9 பாரா. 21-3)
எண் 4: td-TL 30A யெகோவாவின் சாட்சிகளுடைய ஆரம்பம் என்ன?
டிச. 29 எழுத்துமுறை மறுபார்வை. லூக்கா 12 முதல் அப்போஸ்தலர் 6 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 144