தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருதல்
1 இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளை நற்செய்தியின் ஊழியர்களாய் பயிற்றுவிப்பதில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஒரு கருவியாக இருந்துவந்திருக்கிறது. நாம் முதலாவதாக இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது எவ்வளவாய் பயப்படுகிறவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் உணர்ந்தோம். கடவுளுடைய வார்த்தையைப் பேசுகிறவர்களாகவும் போதிக்கிறவர்களாகவும் நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தில் அதன் பங்கை இப்பொழுது நாம் நன்றியுடன் ஒப்புக்கொள்கிறோம். (அப்போஸ்தலர் 4:13-ஐ ஒப்பிடுக.) குறிப்பிடத்தக்க இந்தப் பள்ளியில் நீங்கள் சேர்ந்துவிட்டீர்களா?
2 யார் சேர்ந்துகொள்ளலாம்? நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் பக்கம் 73 பதிலளிக்கிறது: “சபையுடன் செயல்படுகிறவர்களாய்க் கூட்டுறவு கொண்டிருக்கிற எல்லாரும் தங்கள் பெயர்களை இதில் பதிவு செய்துகொள்ளலாம், கூட்டங்களுக்கு வரும் புதிய ஆட்களுங்கூட கிறிஸ்தவ நியமங்களுக்கு மாறான வாழ்க்கை நடத்தாதவர்களாக அவர்கள் இருக்கும் வரையில் இவ்வாறு அதில் பதிவு செய்துகொள்ளலாம்.” பள்ளி கண்காணியை அணுகி சேர்ந்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்க ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோராகிய தகுதியுள்ளவர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.
3 1997-க்கான பள்ளி அட்டவணை: 1997-ம் ஆண்டுக்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி, பல்வகைப்பட்ட பைபிள் போதனைகளை சிந்திக்கிறது. நம்முடைய பேச்சு மற்றும் போதிக்கும் திறமைகளை முன்னேற்றுவிப்பதோடுகூட, ஒவ்வொரு வார பாடத்திட்டத்தில் காணப்படும் அநேக ஆவிக்குரிய மணிகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்கிறோம். (நீதி. 9:9) அந்தப் பள்ளிக்காக நாம் தயார்செய்வோமானால், அது வாராந்தர பைபிள் வாசிப்பையும் உட்படுத்துகிறது, மேலும் ஒழுங்காக ஆஜராவோமானால், அந்தத் திட்டத்திலிருந்து நாம் அதிக ஆவிக்குரிய நன்மையை அடைய முடியும்.
4 கடந்த வருடங்களில் இருந்ததைவிட 1997-ம் ஆண்டில் வரும் நியமிப்பு எண் 2-க்குரிய பெரும்பாலான பைபிள் வாசிப்பு பகுதிகள் குறைவானவையாக இருக்கின்றன. இந்த நியமிப்புக்காக தயாரிக்கையில், மாணாக்கர் தன்னுடைய வாசிப்பிற்கான நேரத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்; அதன் பின்பு தன்னுடைய பாகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து நிமிடங்களில் முகவுரைக்காகவும் முடிவுரைக்காகவும் எவ்வளவு நேரத்தை பயன்படுத்தலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இது, அந்த மாணாக்கர் தன்னுடைய நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கும், தன்னுடைய வாசிப்பு திறன், சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து பேசும் (Extemporaneous Speech) கலை ஆகிய இரண்டையும் முன்னேற்றுவித்துக் கொள்வதற்கும் அனுமதிக்கும்.—1 தீ. 4:13.
5 நியமிப்பு எண் 3 கொடுக்கும்போது சாத்தியமான ஒரு பேச்சு அமைப்பாக (Setting) சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல் சேர்க்கப்பட்டிருக்கிறது; அவை அறிவு புத்தகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஒரு சகோதரி மறுசந்திப்பையோ வீட்டு பைபிள் படிப்பையோ, அல்லது சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலையோ இந்த நியமிப்புக்கான பேச்சு அமைப்பாக தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். நிச்சயமாகவே, முக்கியமான அழுத்தம் தொடர்ந்து போதனைக்கே கொடுக்கப்பட வேண்டும், பேச்சு அமைப்பிற்கு அல்ல.
6 உங்களுக்கு போதனா பேச்சு, பைபிள் முக்கியக் குறிப்புகள் அல்லது ஒரு மாணாக்கர் பேச்சு போன்ற எந்தப் பேச்சு கொடுக்கும் சிலாக்கியமாய் இருந்தாலும், உங்களுடைய பாகத்தை தயாரித்து ஒத்திகை பார்ப்பதன் மூலமும் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அளிப்பதன் மூலமும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளாமலிருப்பதன் மூலமும் பள்ளி கண்காணியின் ஆலோசனைக்கு செவிகொடுத்து அதைப் பொருத்துவதன் மூலமும் உங்களுடைய நியமிப்பை உண்மையுடன் நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் அதிக முயற்சி செய்வதன் மூலமும் நீங்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கான உங்களுடைய போற்றுதலைக் காண்பிக்கலாம். இவ்விதமாய், பள்ளியில் நீங்கள் சேர்ந்திருப்பது உங்களுக்கும் ஆஜராயிருக்கிற அனைவருக்கும் ஆசீர்வாதமாக நிரூபிக்கும்.